அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் நிதியை உரிய காலப்பகுதிக்குள் திட்டங்களாக மாற்றி மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அதிகாரிகள் காட்டும் அசண்டையீனம்

அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் நிதியை உரிய காலப்பகுதிக்குள் திட்டங்களாக மாற்றி மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அதிகாரிகள் காட்டும் அசண்டையீனம், அரசாங்கம் மீது மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்துவதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
வடக்கு மாகாண சபையின் மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கல் மற்றும் விநியோகம், தொழிற்துறை, தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், கௌரவ ஆளுநர் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
‘அரசாங்கம் பாரிய நிதியை ஒதுக்கியும், அதனை நடைமுறைப்படுத்துவதில் அதிகாரிகள் காட்டும் தாமதம் அல்லது அலட்சியம் காரணமாக மக்கள் மத்தியில் அரசாங்கம் எதனையும் செய்யவில்லை என்ற தவறான தோற்றப்பாடு உருவாக்கப்படுகின்றது. எமது மாகாண நிர்வாகத்தின் கீழ் பணியாற்றும் அதிகாரிகள் இவ்வாறான நிலை ஏற்படாமல் பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும்;’ என ஆளுநர் அறிவுறுத்தினார்.
சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக இவ்வாண்டில் 226 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் 33 திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. வட மாகாணத்தில் உள்ள மாற்றுவலுவுடையோர் தொடர்பான முழுமையான ‘முதன்மைப் பட்டியலை’ திணைக்களம் வசம் வைத்திருப்பதை உறுதிப்படுத்துமாறும், அவர்களின் தேவைகளை முன்னுரிமை அடிப்படையில் பூர்த்தி செய்யுமாறும் ஆளுநர் பணித்தார்.
மகளிர் விவகார அமைச்சின் கீழ் வாழ்வாதார உதவி வழங்கல் தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டன.
தொழிற்துறை திணைக்களத்துக்கு 151 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் திட்டங்களின் கீழ் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட வேலைகளின் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
கூட்டுறவுத் திணைக்களத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் ஆராயப்பட்டன. நெடுந்தீவு மக்களின் போக்குவரத்துத் தேவையைக் கருத்திற்கொண்டு, 2.614 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் ‘சமுத்திர தேவா’ பயணிகள் படகைப் புனரமைக்கும் பணிகளைத் துரிதப்படுத்துமாறு ஆளுநர் உத்தரவிட்டார்.
பனை தென்னை வளக் கூட்டுறவுச் சங்கங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மற்றும் மதுவரித் திணைக்களத்துடன் தொடர்புடைய விடயங்கள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டன.
சில திட்டங்கள் தொடர்பில் ஆளுநர் மீள் பரிசீலனை மேற்கொள்ளுமாறும் இதன்போது பணிப்புரை விடுத்தார்.
இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள், கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர், தொழிற்துறை திணைக்களப் பணிப்பாளர், சமூகசேவைகள் திணைக்கள உதவிப் பணிப்பாளர், கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் செயலாளர், ஒவ்வொரு மாவட்டங்களினதும் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
allai

அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி

May 13, 2026

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று புதன்கிழமை (மே 13) அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால்

Police-1

யாழில் பொலிசாரை கண்டதும் இளைஞன் செய்த செயல் — ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்

May 13, 2026

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரிடம் கைது ஆவதை தவிர்க்க கையிலிருந்த ஹெரோயின் பொட்டலத்தை விழுங்கிய இளைஞன் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில்

suman

சுமந்திரனுக்கு எதிராக யாழ் மாவட்ட நீதிமன்று வழங்கிய கட்டளை

May 13, 2026

நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது தவறான ஆட்சேபனையை மன்றில் தாக்கல் செய்தமைக்காக, வழக்குச் செலவாக தலா 10,000 ரூபாயை செலுத்த

26-6a0467179fe7b

யாழ். திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம்: புதிய நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

May 13, 2026

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்தின் (Jaffna Cultural Centre) முகாமைத்துவச்

namal

சட்டத்திற்கு மேல் எவரும் இல்லை” என்பது அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் – நாமல்

May 13, 2026

“சட்டத்திற்கு மேல் எவரும் இல்லை” என்ற ஜனாதிபதியின் கூற்று உண்மையாக இருக்க வேண்டுமானால், முறைகேடுகளில் தொடர்புடையதாகக் கூறப்படும் அனைத்து நபர்களும்

Screenshot_20260512_232057_Chrome

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேரரை நீதவான் நேரில் சென்று பார்வையிட்டதை அடுத்து புதிய நீதிமன்ற உத்தரவு

May 13, 2026

15 வயது சிறுமி ஒருவரைப் பாரிய பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், அஷ்டமஸ்தானத்தின் (Atamasthana) தலைமைத் தேரர்

JZO5WJPXJ5FZRARAEMRR6EWNLI

டொராண்டோவில் எரிபொருள் விலை: புதிய உச்சத்தை எட்டும் என எச்சரிக்கை

May 13, 2026

டொராண்டோ மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பெற்றோல் விலை இந்த கோடைகாலத்தில் புதிய வரலாற்றுச் சாதனையை எட்டும் என எரிசக்தி

KQD5KTWLRFD67OL6QVX2VZ7M6Y

டொராண்டோவில் ஆயுதமேந்திய கொள்ளை: $500,000 மதிப்பிலான நகைகள் அபகரிப்பு

May 13, 2026

டொராண்டோவின் நகரப்பகுதியில் (Downtown core) நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்திற்குள் இருந்தவர்களிடம் துப்பாக்கி முனையில் சுமார் $500,000 மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக

modi

இந்தியாவில் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க மோடி உத்தரவு!

May 13, 2026

உலகளாவிய எரிபொருள் நெருக்கடிகளினால் பல நாடுகளிலும் எரிபொருள் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் எரிவாயு விலை அண்மையில் அதிகரிக்கப்பட்டது. இதனைத்

wea

குறைந்த அழுத்தம்; அடுத்த 48 மணிநேரத்திற்கு நாட்டில் கடும் மழை

May 13, 2026

நாட்டிற்கு வடகிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இத் தொகுதி

Fuel_1200px_22_10_17

எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த மற்றுமொரு விலை உயர்வு அவசியம்: ஜனாதிபதி அறிவிப்பு

May 13, 2026

எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும், அதற்கமையவே எரிபொருள் விலை உயர்வு போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி அநுர

1581352014-UNP-contest-general-election-under-Elephant-B

விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்ததன் மூலம் ஜனாதிபதி அநுர இராஜதந்திர நடைமுறைகளை மீறியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி (UNP) குற்றச்சாட்டு

May 13, 2026

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சி. ஜோசப் விஜய்க்கு (C. Joseph Vijay) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க