கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களத்தின் வழிநடத்தலில்,
சுற்றுலா மேம்பாட்டையும் பசுமையான கடற்கரை சூழலையும் உருவாக்கும் நோக்கில்
இன்று உப்புவெளி கடற்கரை பூங்காவில் மோதிலா (Mothila) மற்றும் கரந்தா (Karantha) தாவரங்கள் நடப்பட்டுள்ளன.
சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதத்தில் இயற்கை அழகைக் கூட்டவும் கடற்கரைப் பாதுகாப்பை வலுப்படுத்தவும் வெப்பத்தைக் குறைத்து நிழலை அதிகரிக்கவும் சுற்றுச்சூழல் நட்பு சுற்றுலாவை ஊக்குவிக்கவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் உப்புவெளி பிரதேசத்தை சுத்தமான பசுமையான மற்றும் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தளமாக மாற்றும் ஒரு முக்கியமான படி இதுவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.






