தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான ஜெய் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘சட்டென்று மாறுது வானிலை’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான ஏ ஆர் முருகதாஸ் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் பாபு விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சட்டென்று மாறுது வானிலை’ எனும் திரைப்படத்தில் ஜெய், யோகி பாபு, மீனாட்சி கோவிந்தராஜன், கருடா ராம், சத்யன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்திருக்கிறார். கிரைம் வித் எக்சன் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பி வி பிரேம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் சைபர் குற்றம் சம்பந்தமான எக்சன் என்டர்டெய்னராக இடம் பிடித்திருப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. அத்துடன் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்திருக்கிறது. இந்நிலையில் சட்டென்று மாறுது வானிலை’ திரைப்படம் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகிறது.