சேலம்:
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது சொந்த ஊரான சேலத்தில் முகாமிட்டுள்ளார். சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுடன் அவர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.
நேற்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் தம்பிதுரை எம்.பி. ஆகியோரைச் சந்தித்துப் பேசிய நிலையில், இன்று முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், ஓ.எஸ்.மணியன், கே.பி.முனுசாமி மற்றும் சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் இளங்கோவன் ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்தனர். சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தச் சந்திப்பில், மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையின் போது பின்பற்றப்பட வேண்டிய உத்திகள், வாக்கு எண்ணும் மையங்களில் ஏஜெண்டுகளின் செயல்பாடுகள் மற்றும் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் நகர்வுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் மும்முனைப் போட்டியை முன்னிறுத்தியுள்ள சூழலில், அதிமுகவின் இந்த அடுத்தடுத்த ஆலோசனைக் கூட்டங்கள் அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன.
#EPS #ADMK #EdappadiPalaniswami #TNElection2026 #Salem #ElectionResults #May4 #PoliticalStrategy #TamilNaduPolitics #BreakingNews #AIADMK #CountingDay #StrategyMeeting #May2 #DravidianPolitics #VoterVerdict #PoliticalConsultation #EPSHome #TNPolls2026 #WaitingForResults_