ஸ்கார்பாரோ பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு கார் ஒன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில், 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணியளவில், மெக்கவன் வீதிக்கு (McCowan Road) மேற்கே உள்ள கோல்ட்ஹாக் ட்ரெயில் (Goldhawk Trail) மற்றும் ஹட்ச் க்ராஃப்ட் அவென்யூ (Hutchcroft Avenue) சந்திப்பில் கார் ஒன்று விபத்துக்குள்ளானதாக ரொறன்ரோ பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ஓட்டுநர், உயிருக்கு ஆபத்தான நிலையில் உடனடியாக அதிர்ச்சி சிகிச்சை மையத்திற்கு (Trauma Centre) கொண்டு செல்லப்பட்டதாக ரொறன்ரோ அவசர சிகிச்சை பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
எனினும், சிகிச்சை பலனின்றி அந்த இளைஞர் உயிரிழந்துவிட்டதாகப் பொலிஸார் பின்னர் வெளியிட்ட அறிவிப்பில் உறுதிப்படுத்தியுள்ளனர்.
விபத்து ஏற்படுவதற்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இது தொடர்பான விசாரணைகளை ரொறன்ரோ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.