போமன்வில் (Bowmanville) மற்றும் கோபர்க் (Cobourg) ஆகிய பகுதிகளில் போலிப் பணத்தைப் பயன்படுத்தி மோசடி செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
ஜனவரி 17 அன்று, கிளாரிங்டன் புலிவார்டில் (Clarington Boulevard) உள்ள ‘த ஹோம் டிப்போ’ (The Home Depot) கடைக்குச் சென்ற நபர் ஒருவர், போலிப் பணத்தைப் பயன்படுத்திப் பல பொருட்களை வாங்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, அதே நபர் டி பால்மா டிரைவில் (De Palma Drive) உள்ள மற்றொரு ‘த ஹோம் டிப்போ’ கிளைக்குச் சென்று, தான் வாங்கிய பொருட்களைத் திரும்பக் கொடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக உண்மையான கனடியப் பணத்தைப் பெற்றுச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது