ஜனாதிபதியின் கவனத்திற்கு செல்கிறது தோட்டத் தொழிலாளர்கள் மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்

ரத்தினபுரி மாவட்டம், கஹவத்தை பெல்மதுள்ளை தோட்டத்தின் நீலகாமம் முதலாம் பிரிவில் கடந்த 22ஆம் திகதி தோட்டத் தொழிலாளர்கள் மீது முன்னெடுக்கப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் சம்பவம் தொடர்பாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் புதன்கிழமை (29) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கடும் கண்டனத்தை வெளியிட்டார்.

நீண்டகாலமாக வீடற்ற நிலையில் ஒரு வீட்டில் நான்கு ஐந்து குடும்பங்களாக வாழ்ந்து வந்த தொழிலாளி ஒருவர், தனக்கென ஒரு தற்காலிக குடிசையை அமைத்தபோது, முழு முகத்தையும் மூடிய தலைக்கவசம் அணிந்த ஒரு குண்டர் கும்பல் புகுந்து அங்கிருந்தவர்களைக் கடுமையாகத் தாக்கி குடிசையையும் உடைத்துள்ளது. சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு மிலேச்சத்தனமாகத் தாக்குதல் நடத்திய இந்த கும்பல் குறித்து தகவல் கிடைத்தவுடன், தான் உடனடியாக கஹவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோரைத் தொடர்பு கொண்டு சட்டத்தை அமுல்படுத்துமாறு பணிப்புரை விடுத்ததாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

அதன் விளைவாக அன்றிரவே தாக்குதலில் ஈடுபட்ட ஒன்பது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தோட்ட நிர்வாகத்தினால் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட ஓய்வுபெற்ற முப்படையினரை உள்ளடக்கிய பாதுகாப்பு குழுவினர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், அநீதிக்குள்ளான தோட்ட இளைஞர்களுக்குத் தேவையான சட்ட ஆலோசனைகள் மற்றும் சட்டத்தரணிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான முழுமையான ஒத்துழைப்பைத் தான் வழங்கியதாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினருடன் நேரடியாக அத்தோட்டத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து நிலைமைகளை நேரில் கேட்டறிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் குறித்து அமைச்சர் சமந்த வித்யாரத்ன மற்றும் அமைச்சின் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்திய பிரதி அமைச்சர், இது தொடர்பாக மூன்று முக்கிய தீர்மானங்களை முன்னெடுத்துள்ளார். அதன்படி, பாதுகாப்பு குழு என்ற பெயரில் ஓய்வுபெற்ற முப்படையினரை அமர்த்தி அவர்களை குண்டர் படையாகச் செயற்பட அனுமதித்தது குறித்து தோட்ட நிர்வாகம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நிர்வாகம் எடுக்கப்போகும் ஒழுங்கு நடவடிக்கைகள் என்ன என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், தோட்ட மக்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த காணியை அவர்களுக்கே வீடமைக்க வழங்குவதற்கான ஆவணங்களை உடனடியாகத் தயாரிக்குமாறு அமைச்சின் செயலாளருக்குப் பணிக்கப்பட்டுள்ளது.

தோட்ட நிர்வாகத்தின் நிறைவேற்று அதிகாரியை நேரடியாக அழைத்து எச்சரிக்கை விடுத்ததாகத் தெரிவித்த பிரதி அமைச்சர், எக்காரணம் கொண்டும் பாதுகாப்புப் படையினரை மக்களைத் துன்புறுத்தப் பயன்படுத்தக் கூடாது என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இச்சம்பவம் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு மலையக மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். இவ்வாறான அநீதிகளுக்கு எதிராக அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கும் என்றும், இது தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அரசாங்கம் என்பதால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இன்றைய ஊடக சந்திப்பில் மேலும் தெரிவித்தார்.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்

4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்

sig

சிக்மா திரைப்படம் நஷ்டமா?

October 11, 2026

நடிகர் விஜய், அரசியல் கட்டி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு இப்போது முதலமைச்சராகிவிட்டார். இதனால் விஜய் சினிமா பக்கமே வருவதில்லை, அவரின்

na

ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் வாங்கும் நடிகை

October 11, 2026

சமூக வலைதளங்களில் திரை நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவின்

3

இந்தியன் 3 படத்தின் புதிய அப்டேட்

October 11, 2026

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 3 திரைப்படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் தற்போது