நங்கநல்லூரில் பயங்கரம்: மனைவியைச் சரமாரியாக வெட்டிக் கொன்றுவிட்டு கணவன் த*ற்கொ*லை!

சென்னை:

ஆலந்தூர் அருகே நங்கநல்லூரில் குடும்பத் தகராறு காரணமாகத் தொழில் அதிபரான மனைவியைக் கணவன் வெட்டிக்கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தில்லை கங்கா நகரைச் சேர்ந்த சுப்பிரமணியன் (52) – நாகலட்சுமி (42) தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சுப்பிரமணியன் வேலைக்குச் செல்லாமல் இருந்ததால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கணவர் பிரிந்து சென்ற நிலையில், நாகலட்சுமி சுயமாகப் புடவை வியாபாரம் செய்து முன்னுக்கு வந்ததோடு, தனது இரண்டு மகன்களையும் மருத்துவப் படிப்பில் சேர்த்துள்ளார்.

இந்நிலையில், 10 நாட்களுக்கு முன்பு மீண்டும் வீட்டிற்கு வந்த சுப்பிரமணியன், மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்துள்ளார். நேற்று மதியம் மகனுக்கு “நானும் அம்மாவும் இருக்க மாட்டோம்” என மெசேஜ் அனுப்பிவிட்டு, நாகலட்சுமியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்டார். கல்லூரி முடிந்து வந்த மகன், ரத்த வெள்ளத்தில் தாய் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார். தொழில் நஷ்டம் மற்றும் பணத் தகராறு காரணமாக இந்த விபரீதம் நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும், சம்பவத்தின்போது வீட்டின் கதவு திறந்திருந்ததால் வேறு நபர்களுக்குத் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும், சிசிடிவி காட்சிகளை வைத்தும் ஆதம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
#ChennaiCrime #Nanganallur #DoubleDeath #FamilyDispute #MurderAndSuicide #AdambakkamPolice #AlandurNews #BusinessWomanMurder #CrimeNews #BreakingNews #TamilNaduNews #SocialIssue #PoliceInvestigation #ChennaiNews #April29

sss

சியான்’ விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

June 14, 2026

தமிழ் திரையலகின் பெருமிதமாக ஜொலிக்கும் சர்வதேச தரத்திலான நட்சத்திர நடிகர் சியான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின்

ang

நவீன தொழில் நுட்பத்தில் தயாரான பாடலை வெளியிட்ட ‘அங்கீகாரம்’ படக் குழு

June 14, 2026

அறிமுக நாயகன் கே ஜே ஆர் நடிப்பில் தயாராகி உள்ள ‘அங்கீகாரம்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வெற்றி விழா ஆந்தம்’எனும்

sam

நடிகை சமந்தா நடிக்கும் ‘எங்கள் தங்கம்’

June 14, 2026

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகையாக திகழும் சமந்தா கதையின் நாயகியாக நடித்திருக்கும் ‘எங்கள் தங்கம்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

100

இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நூறு சாமி’ திரைப்படம்

June 14, 2026

மூன்று தசாப்தங்களாக தொடர்ந்து தமிழ்த் திரையுலகில் கவனிக்கத்தக்க படைப்புகளை வழங்கி ரசிகர்களை தொடர்ந்து உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தும் இயக்குநர் சசி

sea

கடல் பகுதிகளுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை!

June 14, 2026

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கல்பிட்டி வரையான கடல் பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, காங்கேசன்துறையிலிருந்து மன்னார்

Legends_1

Behind me சர்வதேச ஊடக வலையமைப்பு வழங்கும் Legends & Icons Awards 2026!

June 14, 2026

உலகெங்கும் பரந்துவாழும் எமது ஈழத்தமிழ்ச் சமூகத்தை சேர்ந்த மருத்துவத்துறை, சட்டத்துறை, கற்பித்தற்துறை, கலைத்துறை, பாதுகாப்புத்துறை, தொழில் முனைவோர்… எனப் பரந்து

Shakthivel

இலங்கையில் இடம்பெற்ற இனஅழிப்பு மற்றும் மனித உரிமை மீறல்களின் கொடூர உண்மைகளை செம்மணி புதைகுழி வெளிச்சமிட்டுக் காட்டுகிறது – அருட்தந்தை மா. சத்திவேல்

June 14, 2026

செம்மணி சமூக புதைகுழி அகழ்வுப் பணிகளில் வெளிவரும் மனித எச்சங்களும், குழந்தைகளின் பாவனை பொருட்களும் இலங்கையில் இடம்பெற்ற இனஅழிப்பு மற்றும்

appu

குற்றவாளிகள் எவராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் – ஐக்கிய மக்கள் சக்தி

June 14, 2026

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகள் எவராக இருந்தாலும், அவர்கள் அனைவருக்கும் தகுந்த தண்டனை வழங்கப்படும் வரை ஐக்கிய

arju

நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின் நாங்கள் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைக்குத் தீர்வு காண்போம் அர்ச்சுனா இராமநாதன்

June 14, 2026

நாமல் ராஜபக்ஷ தனது சிங்கள இனத்தின் மீது பற்றுக்கொண்டுள்ளார். ஆகவே அவர் ஏனைய இனங்களையும் ஆதரிப்பார். 2029 ஆம் ஆண்டு

photo-collage.png (1)

கனடாவில் ‘புற்றுநோய் விழிப்புணர்வு நடைபவனி 2026’

June 13, 2026

கனடாவில் புற்றுநோய் விழிப்புணர்வுக்கான நடைப்பயணமொன்றை Behind Me Media, JMFOA Canada மற்றும் Behind Me Foundation ஆகியவை இணைந்து

sr

வடக்கு மாகாண விளையாட்டுத்துறை தேவைகளை விரைவாக முன்வைக்க வேண்டும்!

June 13, 2026

விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பாடசாலைகளின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்க கோரிக்கைகளை விரைவாக முன்வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு

s

முதலாவது பன்னாட்டு தமிழிசை மாநாடு யாழ்.பல்கலைக்கழகத்தில்…

June 13, 2026

முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வானது இன்றையதினம்(13) யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்றது. இன்றைய