‘சமாதான நடைபயணம்’; ஜனாதிபதி முழு ஆதரவு

இன்று (21) முதல் இலங்கையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகும் ‘சமாதான நடைபயணம்’ (Walk for Peace) திட்டத்திற்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து ஜனாதிபதி தனது X தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். அதில், “அனைத்து மக்களிடையேயும் ழிப்புணர்வு, கருணை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் இன்று ஆரம்பமாகும் ‘சமாதான நடைபயணத்திற்கு’ ஆதரவளிப்பதையிட்டு நான் பெருமையடைகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

“இந்த புனிதமான நடைபயணம் தம்புள்ளையில் ஆரம்பமாகி, சர்வக்ஞ தாதுக்கள் மற்றும் அரசமரக் கன்றுடன் நாடு முழுவதும் பயணிக்கும் வேளையில், எமது பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் சமாதானம் மற்றும் கருணை ஆகிய நித்திய விழுமியங்கள் குறித்து மீண்டும் சிந்திக்குமாறு அனைத்து இலங்கையர்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன்” என்றும் அவர் மேலதிகமாகத் தெரிவித்துள்ளார்.

இந்த ஆன்மீக வேலைத்திட்டம் தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்தவும், உலக சமூகத்திற்கு சமாதானம் குறித்த ஆழமான செய்தியை வழங்கவும் உதவும் என எதிர்பார்ப்பதாகக் கூறி ஜனாதிபதி அநுர திஸாநாயக்க தனது செய்தியை நிறைவு செய்துள்ளார்.

இதேவேளை, இந்த சமாதான நடைபயணத்திற்காக வியட்நாமிய வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர் தலைமையிலான ஏழு பௌத்த தேரர்கள் இன்று (21) காலை இலங்கையை வந்தடைந்தனர். இந்த நடைபயணத்தில் பங்கேற்பதற்காக ‘ஆலோகா’ என்ற நாயும் பாதுகாப்பாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற “Walk For Peace” சமாதான நடைபயணத் திட்டம் இன்று முதல் 28ஆம் திகதி வரை இலங்கையில் அரச அனுசரணையுடன் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர், அனுராதபுரம் ஜய ஸ்ரீ மகா போதியிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட அரசமரக் கன்றுடன் இந்த நடைபயணத்தில் பங்கேற்கவுள்ளனர்.

ஜனாதிபதி செயலகம், ‘Clean Sri Lanka’ திட்டம், புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சு, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, முப்படைகள் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட பல அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இந்த சமாதான நடைபயணத்திற்கு தமது பங்களிப்பை வழங்குகின்றன.

tn-chief-electoral-officer-archana-patnaik-has-said-sir-forms-have-been-6-16-crore-people-in-tamil-nadu

தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: உடனடியாக அமலுக்கு வந்த கெடுபிடிகள்! மீறினால் 2 ஆண்டு சிறை – தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!

April 21, 2026

சென்னை, தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, வாக்குப்பதிவு

hwar

வடக்கு மாகாண ஆளுநருடன் யாழ். கட்டளை தளபதி சந்திப்பு

April 21, 2026

யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதியாக அண்மையில் பதவியேற்ற மேஜர் ஜெனரல் கே.ஜே.என்.எம்.பி.கே. நவரத்ன, வடக்கு மாகாண ஆளுநர்

Diana

முன்னாள் அமைச்சர் டயனா கமகேயிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

April 21, 2026

கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு தவறான தகவல்களை வழங்கியமை மற்றும் செல்லுபடியாகும் விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்தமை

heat

சிவப்பு எச்சரிக்கை!

April 21, 2026

நாளை (22) பகல் வேளையில் பல மாகாணங்களில் வெப்பச் சுட்டெண், அதாவது மனித உடலுக்கு உணரப்படும் வெப்பத்தின் அளவு ‘கவனம்

ddsfd

கடும் மழை காரணமாக சுமார் 50 தோட்ட வீடுகள் நீரில் மூழ்கின!

April 21, 2026

ஹட்டன் – டிக்கோயா பகுதியில் இன்று (21) பிற்பகல் பெய்த கடும் மழை காரணமாக, டிக்கோயா போடைஸ் தோட்டத்தின் தாழ்நிலப்பகுதிகளில்

war

இந்திய போர்க்கப்பல் கொழும்பு வந்தது

April 21, 2026

இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான ‘INS NIREEKSHAK’ போர்க்கப்பல், ‘கலப்பு வாயு முக்குளிப்புப் பயிற்சி’ (Mixed Gas Diving Training) திட்டத்தை

17405459651

“பிள்ளை அப்பாவுக்கு 5 கோடி கொடுக்கக்கூடாதா?” – மகன் விஜய் குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் உருக்கம்!

April 21, 2026

சென்னை, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வரும் சட்டசபை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு

semm

எதிர்வரும் 27 ஆம் திகதி; செம்மணி மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள்!

April 21, 2026

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. செம்மணி மனித புதைகுழியில்

G2geVPza4AEUez7_

“வென்று வா தலைவா.. எப்போதும் உங்களுடன் இருப்பேன்!” – விஜய்க்காக சிபி சத்யராஜ் எழுதிய உருக்கமான கடிதம்!

April 21, 2026

சென்னை, தமிழக அரசியலில் நடிகர் விஜய் எடுத்துள்ள புதிய பாய்ச்சல் குறித்து விவாதங்கள் கிளம்பியுள்ள நிலையில், நடிகர் சத்யராஜின் மகன்

sain

தொடர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் உணவகங்கள்

April 21, 2026

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட உணவகங்கள் தொடர்ச்சியாக பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்போது மனித

rohan csr

ஈஸ்டர் தாக்குதல் 7-ஆம் ஆண்டு நினைவு: நீதிக்கான அழுத்தங்களைத் திருச்சபை தொடரும் என அருட்தந்தை ரோஹன் சில்வா தெரிவிப்பு

April 21, 2026

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகள்இடம்பெற்று ஏழு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், உண்மையை வெளிப்படுத்தவும் நீதியை நிலைநாட்டவும் கத்தோலிக்கத் திருச்சபை தனது

vikatan_2026-04-11_8fvb6jwy_1001762502

சட்டசபைக்குள் செல்கிறாரா விஜயகாந்த் வாரிசு? விருதுநகரில் விஜய பிரபாகரனுக்கு அமோக ஆதரவு: தந்தி டிவி சர்வே!

April 21, 2026

சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தந்தி டிவி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள் அரசியல் வட்டாரத்தில்