தொகுதி மறுவரையறை மசோதா மூலம் தமிழக மக்களை சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப் பார்த்தது பாஜக – மு.க. ஸ்டாலின்

“தொகுதி மறுவரையறை மசோதா மூலம் தமிழ்நாட்டு மக்களைச் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப் பார்த்த பாஜகவுக்கும், அவர்களுடைய ஏவல் அடிமைகளான அதிமுக-வுக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மறக்கவே முடியாத மாபெரும் தோல்வியைக் கொடுப்போம்,” என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் குற்றஞ் சாட்டியுள்ளார்.

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்ததையடுத்து, இந்தியா கூட்டணி கட்சிகள் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சித் தலைவர்கள், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் ஆதரவு அளித்த தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றி தெரிவித்து திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறி இருப்பதாவது: ‘Delimitation’ எனும் கருப்புச் சட்டத்துக்கு எதிரான நம்முடைய போராட்டம் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த ஆபத்தை ஒரு வருடத்திற்கு முன்பே அறிந்து, இந்த வெற்றியைப் பெறுவதற்கான அனைத்துப் பணிகளையும் அப்போதே நாம் தொடங்கினோம்.

மாநில முதல்வர்கள் – எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒருங்கிணைப்புக் கூட்டம் தொடங்கி, நேற்று முன்தினம் கருப்புக் கொடி ஏற்றி, கருப்புச் சட்ட நகலைக் கொளுத்தினேன்! அதேபோல், நேற்று திண்டுக்கல்லில் வெற்றிக்கான வெடியைக் கொளுத்தினேன்! தீ பரவட்டும் என்று சொன்னேன். அது நாடாளுமன்றம் வரை பற்றிக் கொண்டது.

50, 60-களில் பார்த்த பழைய திமுக-வைப் பார்க்க வேண்டி வரும் என்று எச்சரித்தேன். “அப்படி என்றால் என்ன?” என்று கேட்ட சில அரைவேக்காடுகளுக்கு, “இதுதான்டா திமுக பாருங்கள்” என்று நேற்று ஸ்ட்ராங்காகக் காட்டியிருக்கிறோம்.

தொகுதி மறுவரையறை என்ற பெயரில், முழுக்க முழுக்க பாஜக-வுக்குச் சாதகமாகக் கொண்டு வரப்பட்ட கருப்புச் சட்டத்தை, நாடாளுமன்றத்தில் தோற்கடித்த அனைவருக்கும் தமிழ்நாட்டு முதல்வராக என்னுடைய நன்றி.

முக்கியமாக, இதில் முழுக்க முழுக்க என்னுடன் நின்ற தமிழ்நாட்டு மக்களுக்குத்தான் முதலில் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியைச் சொல்ல வேண்டும்.

பெண்களுக்கான இடஒதுக்கீடு என்ற மாறுவேடத்தில் இந்தச் சட்டத்தை பாஜக கொண்டு வரப் பார்த்தார்கள். ஆனால், இந்த ஏமாற்றுத் திட்டத்தை முன்னின்று தோற்கடித்ததே பெண்கள்தான்! அவர்களுக்கு என்னுடைய சல்யூட்.

இந்தியா கூட்டணிக் கட்சிகள் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்களும் ஒன்றாகச் சேர்ந்து நின்ற காரணத்தினால், இது சாத்தியமாகியிருக்கிறது. வடக்கு – தெற்கு என நமக்குள்ளே பிளவை ஏற்படுத்தி, சண்டை போட்டுக் கொள்ள வைக்கலாம் என்று நினைத்தவர்களுக்குச் சரியான சம்மட்டியடி கிடைத்திருக்கிறது. 12 ஆண்டுகளில் முதல் முறையாகப் பிரதமர் மோடி அரசு கொண்டு வந்த அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா தோல்வியடைந்திருக்கிறது!

பாஜக இனி நாடு முழுக்கப் பெறப் போகும் தோல்விகளுக்கான தொடக்கம் இது! எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கான தொடக்கம் இது! நாம் ஒன்றுபட்டால் வெற்றி உறுதி என நான் தொடர்ந்து சொல்லி வந்தேன். அது உண்மை எனக் காட்டியிருக்கும் தொடக்கம் இது.

இந்த நேரத்தில், நேற்று நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் “பெண்கள் இடஒதுக்கீட்டுக்கும் இந்த மசோதாவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இது ஒரு தேச விரோதச் சட்டம். இதை அனுமதிக்க மாட்டோம். இதை அனைவரும் சேர்ந்து தோற்கடிப்போம்” எனத் தெளிவான உணர்வுகளை வெளிப்படுத்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் அன்புச் சகோதரர் ராகுல் காந்தி, காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்போது நாம் பெற்றிருப்பது பாதி வெற்றிதான். 2001-ஆம் ஆண்டில் செய்தது போன்றே, இப்போதும் அடுத்த 25 ஆண்டுகளுக்கு, அதாவது 2051 வரை, தொகுதி எண்ணிக்கையை மறுவரையறை செய்வதைத் தள்ளி வைக்க அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்.

அதுமட்டுமல்ல, பெண்களின் இடஒதுக்கீட்டிற்காக 2023-ஆம் ஆண்டே நாம் ஆதரித்து நிறைவேற்றிய சட்டத்தை எந்த நிபந்தனைகளும் இல்லாமல், பாஜக அரசு உடனடியாக இப்போது இருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கே அமல்படுத்த வேண்டும். அதுதான் முழு வெற்றியாக அமையும்! அதற்காகப் போராடுவோம்.

மகிழ்ச்சியான இந்த நேரத்தில், இந்தத் தொகுதி மறுவரையறைச் சட்டம், யாரெல்லாம் நம் நண்பர்கள் என மட்டும் அடையாளம் காட்டவில்லை; தமிழ்நாட்டின் துரோகிகள் யார் என்று அவர்கள் வாயாலேயே சொல்ல வைத்திருக்கிறது. அப்படித் துரோகம் செய்த பழனிசாமியின் அடிமைக் கும்பலுக்குத் தேர்தலுக்கு முன்பே படுதோல்வி கிடைத்திருக்கிறது. பழனிசாமி டெல்லியின் ஏஜெண்ட் என்பது மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது.

cana gu

கனடாவின் நோவா ஸ்கோடியா கிராமப்புற துப்பாக்கிச் சூடு: ஆறாம் ஆண்டு நினைவேந்தல்!

April 18, 2026

கனடாவின் நோவா ஸ்கோடியா கிராமப்புற பகுதியில், பொலிஸ் அதிகாரி வேடமணிந்த நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு இளைஞர்

her

லெபனானில் பிரெஞ்சு அமைதிப்படை சிப்பாய் பலி: ஹிஸ்புல்லா மீது மக்ரோன் குற்றச்சாட்டு

April 18, 2026

தெற்கு லெபனானில் இன்று காலை இடம்பெற்ற தாக்குதலில், சர்வதேச அமைதிப்படைப் பணியில் ஈடுபட்டிருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர்

sea

பொலிஸாரிடமிருந்து தப்பிக்க கடலில் குதித்த நபர் உயிரிழப்பு

April 18, 2026

பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர், பொலிஸாரிடம் சிக்காமல் இருக்க கடலில் குதித்த நிலையில், நீரில்

Parl

இலங்கை அமைச்சரவையில் மாற்றங்கள்?

April 18, 2026

நிலக்கரி கொள்முதல் மோசடி குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் குமார ஜெயக்கொடி பதவி விலகியதைத் தொடர்ந்து, அந்த வெற்றிடத்திற்குத் துறைமுகங்கள் மற்றும் விமான

lan

லங்லியில் அடுத்தடுத்த நாட்களில் கத்திக்குத்து: இரு இளைஞர்கள் காயம்

April 18, 2026

லங்லி பகுதியில் இரண்டு நாட்களில் இரண்டு வெவ்வேறு கத்திக்குத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எனினும், இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையில் எந்தத்

colo

மாணவர்களை இலக்கு வைக்கும் ‘கொலைப்பட்டியல்’: பதற்றத்தில் பிரிட்டிஷ் கொலம்பியா சமூகம்

April 18, 2026

பிரிட்டிஷ் கொலம்பியாவின் சிறிய நகரம் ஒன்றில் 16 மாணவர்களைக் குறிவைத்து “கொலைப்பட்டியல்” என்று அழைக்கப்படும் பட்டியல் இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து,

hur

ஹோமுஸ் நீரிணையில் கப்பல் மீது ஈரான் தாக்குதல்

April 18, 2026

மான் கடற்கரையிலிருந்து சுமார் 20 கடல் மைல் (30 கி.மீ) தொலைவில் பயணித்துக் கொண்டிருந்த எண்ணெய் தாங்கிக் கப்பல் ஒன்றைத்

pa

ராமநாதபுரத்தில் இலங்கைக்குக் கடத்த முயன்ற 7 இலட்சம் சிகரெட்டுகள் சிக்கின!

April 18, 2026

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம், புதுமடம் கடற்கரை ஊடாக இலங்கைக்குப் படகு மூலம் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 91 லட்சம் ரூபாய்

ath

ஆசியாவின் மிகப்பெரிய செல்வந்தரானார் கௌதம் அதானி!

April 18, 2026

அதானி குழுமத்தின் ஸ்தாபகரும் தலைவருமான கௌதம் அதானி, ஆசியாவின் மிகப்பெரும் செல்வந்தராக உருவெடுத்துள்ளார். இதன் மூலம், பல ஆண்டுகளாக ஆசியாவின்

arrest

தனது வீட்டு நாய்களுக்கு பட்டாசு சத்தம் பாதிப்பு எனத் தெரிவித்த பெண்ணைத் தாக்கியவர் கைது

April 18, 2026

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு சத்தம் தனது வீட்டு நாய்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதால், அதனை நிறுத்துமாறு கோரிய அண்டை வீட்டுப் பெண்

murder

சித்தாண்டியில் மதுபானம் வாங்கப் பணம் தராத தாயைக் கொன்ற மகன் கைது!

April 18, 2026

கனகராஜா சரவணன் மதுபானம் அருந்துவதற்காக 1,000 ரூபாய் பணம் தராத தாயை, அவரது 19 வயது மகன் தள்ளி வீழ்த்தியதில்

sagara-kariyawasam

முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசாங்கம் சட்ட அமுலாக்க நிறுவனங்களில் தலையிடுகிறது!

April 18, 2026

நாட்டின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்கள் சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்கள் மீது நேரடி மற்றும் கடுமையான