மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோரின் இராஜினாமாவானது நிலக்கரி கொள்முதல் மோசடியைப் பொதுமக்களின் நினைவிலிருந்து அழிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு “கண்துடைப்பு” நடவடிக்கையாகும் என ஐக்கிய மக்கள் சக்திஉத்தியோகபூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்தக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
“இந்த நிலக்கரி கொள்முதல் மோசடிக்கு ஒட்டுமொத்த அமைச்சரவையுமே பொறுப்புக் கூற வேண்டும்.”
இந்த மோசடிக்குக் காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
அமைச்சர் மற்றும் செயலாளரின் பதவி விலகல் என்பது உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்கும் மக்கள் மத்தியில் எழுந்துள்ள எதிர்ப்பைத் திசைதிருப்புவதற்குமான ஒரு முயற்சியே என எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.