பெண்களுக்கு எதிரான மனநிலை கொண்ட உதயநிதியை ஒருபோதும் முதல்வர் வேட்பாளராக மக்கள் ஏற்க மாட்டார்கள்

“தமிழக கலாசாரம் மற்றும் பெண்களுக்கு எதிரான மனநிலை கொண்ட உதயநிதியை தமிழக மக்கள் ஒருபோதும் முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்,” என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம், ஊட்டி சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளர் போஜராஜனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் இன்று ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி வந்தார். ஊட்டியில் உள்ள தனியார் ஹோட்டலில், அவர் பல்வேறு தரப்பு சங்கங்கள் மற்றும் அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது; இந்தத் தேர்தல் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியாக இருக்கும். எங்களது தலைமையின் கீழ் வரும் மே 4-ம் தேதி புதிய அரசு அமைந்து தமிழக மக்களுக்கு சேவை செய்யும்.

ஸ்டாலின் குடும்பத்தால் தமிழகத்தில் ஊழல் பெருகிவிட்டது. இது ஒரு சிறிய குடும்பம் அல்ல. மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், மருமகன் சபரீசன், சகோதரி கனிமொழி என ஒரே குடும்பத்தின் ஆட்சி இது. டாஸ்மாக் ஊழல், நில ஒதுக்கீடு ஊழல் என அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது.

தமிழக இளைஞர்கள் ஒரு அரசு வேலையைப் பெறுவதற்குக் கூட லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. இது தமிழக மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாதது.

தமிழக கலாச்சாரம் மற்றும் பெண்களுக்கு எதிரான மனநிலை கொண்ட உதயநிதி ஸ்டாலினை தமிழக மக்கள் ஒருபோதும் முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நான் செல்லும் இடமெல்லாம் மக்கள் கோபமாக இருக்கிறார்கள். மு.க.ஸ்டாலின் உதயநிதியைத் துணை முதல்வராக்கிவிட்டு, இந்தத் தேர்தலுக்குப் பின் அவரை முதல்வராக்கத் திட்டமிட்டுள்ளார்.

இந்த ஒரு குடும்பத்தின் ஊழல் மற்றும் மோசமான ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும். அதிமுக, பாஜக, பாமக, ஏஎம்எம்கே, தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் இதர கூட்டணிக் கட்சிகள் ஒரு குடும்பமாக இணைந்து தமிழக மக்களுக்காக உழைக்கிறோம்.

இன்று நான் நீலகிரி மாவட்டத்தில் உள்ள இந்த அழகான ஊரில் இருக்கிறேன். எங்களது நீண்டகாலத் தொண்டர் போஜராஜன் இந்தத் தொகுதியில் 100% வெற்றி பெறுவார். அவர் 24 மணி நேரமும் மக்களுக்காக உழைக்கும் ஒரு அடிமட்டத் தொண்டர்.

எங்களது சகோதரர் வினோத் மற்றும் அதிமுக தொண்டர்களுடன் இணைந்து வெற்றிக்காகப் பாடுபடுகிறோம். தமிழகம் முழுவதும் இந்தக் கூட்டணி ஒற்றுமையாகச் செயல்படுவதால் வெற்றி நிச்சயம். மக்கள் திமுகவின் ஊழலை மறக்க மாட்டார்கள். அவர்களுக்கு ஒரு மாற்றம் தேவை, அந்த மாற்றத்தை அதிமுக தலைமையிலான கூட்டணி வழங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

pa

ராமநாதபுரத்தில் இலங்கைக்குக் கடத்த முயன்ற 7 இலட்சம் சிகரெட்டுகள் சிக்கின!

April 18, 2026

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம், புதுமடம் கடற்கரை ஊடாக இலங்கைக்குப் படகு மூலம் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 91 லட்சம் ரூபாய்

ath

ஆசியாவின் மிகப்பெரிய செல்வந்தரானார் கௌதம் அதானி!

April 18, 2026

அதானி குழுமத்தின் ஸ்தாபகரும் தலைவருமான கௌதம் அதானி, ஆசியாவின் மிகப்பெரும் செல்வந்தராக உருவெடுத்துள்ளார். இதன் மூலம், பல ஆண்டுகளாக ஆசியாவின்

arrest

தனது வீட்டு நாய்களுக்கு பட்டாசு சத்தம் பாதிப்பு எனத் தெரிவித்த பெண்ணைத் தாக்கியவர் கைது

April 18, 2026

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு சத்தம் தனது வீட்டு நாய்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதால், அதனை நிறுத்துமாறு கோரிய அண்டை வீட்டுப் பெண்

murder

சித்தாண்டியில் மதுபானம் வாங்கப் பணம் தராத தாயைக் கொன்ற மகன் கைது!

April 18, 2026

கனகராஜா சரவணன் மதுபானம் அருந்துவதற்காக 1,000 ரூபாய் பணம் தராத தாயை, அவரது 19 வயது மகன் தள்ளி வீழ்த்தியதில்

sagara-kariyawasam

முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசாங்கம் சட்ட அமுலாக்க நிறுவனங்களில் தலையிடுகிறது!

April 18, 2026

நாட்டின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்கள் சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்கள் மீது நேரடி மற்றும் கடுமையான

ca

மீண்டும் கொல்கத்தாவுக்கு தோல்வி

April 18, 2026

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), அஹமதாபாத்தில் வெள்ளிக்கிழமை (17) நடைபெற்ற கொல்கத்தா நைட் றைடர்ஸுடனான போட்டியில் குஜராத் டைட்டான்ஸ் வென்றது.

sri

தியாகத் தாய் அன்னை பூபதி போன்று நாம் கொள்கை உறுதியோடு பயணிக்க வேண்டும் – சிறீதரன் எம்.பி

April 18, 2026

எமது விடுதலைப் போராட்ட வரலாறு என்பது வெறும் பதிவுகள் அல்ல; அது எமது அடுத்த தலைமுறைக்கு நாம் கடத்த வேண்டிய

su

தமிழரசு கட்சியுடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தொடர் பேச்சுவார்த்தை

April 18, 2026

முன்னாள்நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழரசு கட்சியுடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

sta

தொகுதி மறுவரையறை மசோதா மூலம் தமிழக மக்களை சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப் பார்த்தது பாஜக – மு.க. ஸ்டாலின்

April 18, 2026

“தொகுதி மறுவரையறை மசோதா மூலம் தமிழ்நாட்டு மக்களைச் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப் பார்த்த பாஜகவுக்கும், அவர்களுடைய ஏவல் அடிமைகளான அதிமுக-வுக்கும்

pi

பெண்களுக்கு எதிரான மனநிலை கொண்ட உதயநிதியை ஒருபோதும் முதல்வர் வேட்பாளராக மக்கள் ஏற்க மாட்டார்கள்

April 18, 2026

“தமிழக கலாசாரம் மற்றும் பெண்களுக்கு எதிரான மனநிலை கொண்ட உதயநிதியை தமிழக மக்கள் ஒருபோதும் முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்,”

po

முன்னாள் எம்.பி சம்பத் அத்துகோரள மீது தாக்குதல்

April 18, 2026

காலி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பத் அத்துகோரள, பிடிகல – பம்பரவான

abu

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பு: பொலிஸார் தீவிர விசாரணை

April 18, 2026

இலங்கையின் பல பகுதிகளில் பெண்கள் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இது தொடர்பாகப்