தியாகத் தாய் அன்னை பூபதி போன்று நாம் கொள்கை உறுதியோடு பயணிக்க வேண்டும் – சிறீதரன் எம்.பி

எமது விடுதலைப் போராட்ட வரலாறு என்பது வெறும் பதிவுகள் அல்ல; அது எமது அடுத்த தலைமுறைக்கு நாம் கடத்த வேண்டிய புனிதமான மரபு. எமது வரலாற்று நாயகர்களின் தியாகத் தடங்களை இளைய தலைமுறையிடம் சேர்ப்பது எமது தார்மீகக் கடமையாகும். என மலரும் புதுயுகம் அமையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற தியாகத்தாய் அன்னை பூபதி அம்மாவின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்தார்.

​”கடந்த கால அரசுகளைக் காட்டிலும் தற்போதைய அரசு, தமிழர்களின் உரிமைக் குரலை நசுக்க மிக நுணுக்கமான அரசியல் காய்நகர்த்தல்களைச் செய்கின்றது. யுத்தம் மௌனிக்கப்பட்டு ஆண்டுகள் பல கடந்தும், எமது பூர்வீகக் காணி அபகரிப்புகள் ஓயவில்லை. இராணுவமயமாக்கல் ஊடாக எமது நிலங்கள் பறிக்கப்படுவதும், மக்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்படுவதும் இன்றும் தீர்க்கப்படாத வலிகளாகத் தொடர்கின்றன. இதற்குப் பின்னால் இருப்பது மிகத் தெளிவான சிங்கள மேலாதிக்க மனநிலை. தமிழர்களைத் தமக்குச் சமமான குடிமக்களாகக் கருதாது, இழிவான பார்வையுடன் அடக்கி ஒடுக்கும் போக்கையே அவர்கள் இன்றும் கடைப்பிடித்து வருகின்றனர்.

​இத்தனை ஒடுக்குமுறைகளுக்கும் சவால்களுக்கும் மத்தியில்தான், கடந்த 16 ஆண்டுகளில் நாம் அழிந்துபோன நிலையிலிருந்து மீண்டு, அறத்தின் வழியிலான அரசியலை முன்னெடுத்துள்ளோம். எமது கொள்கை மீதான நேர்மையும், மக்களுக்காகத் துணிந்து நிற்கும் குணமுமே இன்று இந்த மண்ணின் மக்களை எம்மிடம் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. எமது சமூக மேன்மைக்கான இந்த நகர்வுகளைத் தகர்ப்பதற்குப் புலனாய்வுத் துறையினரும், ஒட்டுக்குழுக்களும் எம்மோடு ஒட்டிக்கொண்டு கடும் பிரயத்தனம் செய்வார்கள். ஆனால், எத்தகைய சதித்திட்டங்கள் வந்தாலும் தியாக தீபம் திலீபனைப் போன்றும், தியாகத்தாய் அன்னை பூபதி போன்றும் நாம் கொள்கை உறுதியோடு பயணிக்க வேண்டும்.

​அன்னை பூபதி அம்மா அவர்கள் இந்த மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் தனது உயிரையே ஈகம் செய்து எமக்குக் கற்பித்த உறுதியான கொள்கைத் தெளிவுள்ள விடுதலைக்கான அறைகூவலை, அதே உறுதியுடனும் தேசப்பற்றுடனும் நாம் உலகிற்கு உரக்கச் சொல்வோம். எமது வீரஞ்செறிந்த போராட்ட வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு இட்டுச் செல்லும் வரலாற்றுப் பணியை அன்னை பூபதியின் நினைவில் நின்று தொடர்வோம் எனத் தெரிவித்தார்.

​கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்ற இந்நினைவேந்தல் நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கரைச்சிப் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன், பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபையின் தவிசாளர் கௌரவ சுப்பிரமணியம் சுரேன், கிளிநொச்சி மாவட்ட வர்த்தகர் சங்கத்தின் தலைவர் இளையதம்பி விஜயசிங்கம், பிரதேச சபைகளின் கௌரவ உறுப்பினர்கள், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் தலைவர் குணபாலசிங்கம் குணராஜ், மதகுருமார்கள், மலரும் புதுயுகம் அமையத்தின் உறுப்பினர்கள், அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

pa

ராமநாதபுரத்தில் இலங்கைக்குக் கடத்த முயன்ற 7 இலட்சம் சிகரெட்டுகள் சிக்கின!

April 18, 2026

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம், புதுமடம் கடற்கரை ஊடாக இலங்கைக்குப் படகு மூலம் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 91 லட்சம் ரூபாய்

ath

ஆசியாவின் மிகப்பெரிய செல்வந்தரானார் கௌதம் அதானி!

April 18, 2026

அதானி குழுமத்தின் ஸ்தாபகரும் தலைவருமான கௌதம் அதானி, ஆசியாவின் மிகப்பெரும் செல்வந்தராக உருவெடுத்துள்ளார். இதன் மூலம், பல ஆண்டுகளாக ஆசியாவின்

arrest

தனது வீட்டு நாய்களுக்கு பட்டாசு சத்தம் பாதிப்பு எனத் தெரிவித்த பெண்ணைத் தாக்கியவர் கைது

April 18, 2026

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு சத்தம் தனது வீட்டு நாய்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதால், அதனை நிறுத்துமாறு கோரிய அண்டை வீட்டுப் பெண்

murder

சித்தாண்டியில் மதுபானம் வாங்கப் பணம் தராத தாயைக் கொன்ற மகன் கைது!

April 18, 2026

கனகராஜா சரவணன் மதுபானம் அருந்துவதற்காக 1,000 ரூபாய் பணம் தராத தாயை, அவரது 19 வயது மகன் தள்ளி வீழ்த்தியதில்

sagara-kariyawasam

முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசாங்கம் சட்ட அமுலாக்க நிறுவனங்களில் தலையிடுகிறது!

April 18, 2026

நாட்டின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்கள் சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்கள் மீது நேரடி மற்றும் கடுமையான

ca

மீண்டும் கொல்கத்தாவுக்கு தோல்வி

April 18, 2026

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), அஹமதாபாத்தில் வெள்ளிக்கிழமை (17) நடைபெற்ற கொல்கத்தா நைட் றைடர்ஸுடனான போட்டியில் குஜராத் டைட்டான்ஸ் வென்றது.

sri

தியாகத் தாய் அன்னை பூபதி போன்று நாம் கொள்கை உறுதியோடு பயணிக்க வேண்டும் – சிறீதரன் எம்.பி

April 18, 2026

எமது விடுதலைப் போராட்ட வரலாறு என்பது வெறும் பதிவுகள் அல்ல; அது எமது அடுத்த தலைமுறைக்கு நாம் கடத்த வேண்டிய

su

தமிழரசு கட்சியுடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தொடர் பேச்சுவார்த்தை

April 18, 2026

முன்னாள்நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழரசு கட்சியுடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

sta

தொகுதி மறுவரையறை மசோதா மூலம் தமிழக மக்களை சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப் பார்த்தது பாஜக – மு.க. ஸ்டாலின்

April 18, 2026

“தொகுதி மறுவரையறை மசோதா மூலம் தமிழ்நாட்டு மக்களைச் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப் பார்த்த பாஜகவுக்கும், அவர்களுடைய ஏவல் அடிமைகளான அதிமுக-வுக்கும்

pi

பெண்களுக்கு எதிரான மனநிலை கொண்ட உதயநிதியை ஒருபோதும் முதல்வர் வேட்பாளராக மக்கள் ஏற்க மாட்டார்கள்

April 18, 2026

“தமிழக கலாசாரம் மற்றும் பெண்களுக்கு எதிரான மனநிலை கொண்ட உதயநிதியை தமிழக மக்கள் ஒருபோதும் முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்,”

po

முன்னாள் எம்.பி சம்பத் அத்துகோரள மீது தாக்குதல்

April 18, 2026

காலி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பத் அத்துகோரள, பிடிகல – பம்பரவான

abu

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பு: பொலிஸார் தீவிர விசாரணை

April 18, 2026

இலங்கையின் பல பகுதிகளில் பெண்கள் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இது தொடர்பாகப்