வெடுக்குநாறி மலையில் சைவ வழிபாட்டை அழிப்பதற்கும் பௌத்தமயமாக்கலை மேற்கொள்வதற்கும் எடுக்கப்படும் முயற்சியை ஒருபோதும் அனுமதிக்க முடியாது – தவபாலன்

வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலை, தமிழர்களின் பூர்வீக நிலமாகும். புத்தசாசன அமைச்சரின் கருத்து பௌத்தமயமாக்கலின் வெளிப்பாடே என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் எஸ். தவபாலன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று (16) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்:

புத்தசாசன அமைச்சர் வெடுக்குநாறி மலை பௌத்தத்திற்குரியது எனக் கூறியுள்ளார். இதனை ஏற்க முடியாது. வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலை ஆலய வழிபாடுகளுக்கு செல்பவர்களை கடந்த அரசாங்கங்களைப் போன்று ஜேவிபி அரசாங்கமும் கைது செய்ய முனைகிறதா என்ற கேள்வி எழுகிறது.

வெடுக்குநாறி மலை ஆலயம் அமைந்துள்ள இடத்தில் இருந்து 15 கிலோமீற்றர் தூரத்துக்குள் தான் 24 மில்லியன் ரூபாய் செலவில் ஜேவிபியால் கொண்டுவரப்படுகின்ற கிவுல் ஓயா திட்டம் செயற்படுத்தப்பட இருக்கின்றது. மிகப் பெரிய காடுகளை அழித்து இந்தத் திட்டம் கொண்டுவரப்பட இருக்கின்றது.

கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிரான விமர்சனங்கள் மற்றும் போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில், வெடுக்குநாறி மலை தொடர்பில் புத்ததாசன அமைச்சர் தெரிவித்த கருத்து, வவுனியா வடக்கை முழுமையாக ஆக்கிரமித்து சிங்கள பௌத்தமயமாக்கலைத் தான் ஜேவிபியும் கொண்டு செல்கின்றதா என்ற கேள்வியை எழுப்புகிறது.

இங்கு சைவ வழிபாடு நீண்டகாலமாக இடம்பெற்று வந்திருக்கின்றது. 1990 காலப்பகுதியில் இந்த ஆலயத்தில் வழிபட்டமைக்கான ஆதாரங்கள் கூட உள்ளன. இது முற்று முழுதாக தமிழர்களது பூர்வீக இடம். அங்கு சைவ வழிபாட்டை அழிப்பதற்கும் பௌத்தமயமாக்கலை மேற்கொள்வதற்கும் எடுக்கப்படும் முயற்சியை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

போராட்ட எச்சரிக்கை: இவர்களது செயற்பாடு இவ்வாறு தொடருமானால், மக்களை திரட்டி பெரியளவிலான போராட்டங்களை எல்லா இடங்களிலும் நடத்தும் நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம். வெகுவிரைவில் வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தைப் பாதுகாப்பதற்காகவும் அமைச்சரின் கருத்துக்கு எதிராகவும் மக்களைத் திரட்டிப் போராடத் தயாராகி வருகின்றோம்.

அனைத்துத் தரப்புகளும், வழிபாடுகளைப் பாதுகாக்கின்ற அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து இந்தச் செயற்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என அவர் தெரிவித்தார்.

wa

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் கை சந்தித்தார் இலங்கையின் ஐ.நா தூதுவர்

April 17, 2026

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைப் பிரதிநிதியும் தூதுவருமான சுமித் தஸநாயக்க, ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையாளர் வோல்கர் டேர்க்

Education

கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு

April 17, 2026

2026ஆம் ஆண்டிற்கான முதலாம் தர கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இது

mak

வெலிக்கடை சிறைச்சாலையில் பிள்ளையானை வைத்திருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டம்!

April 17, 2026

பிள்ளையானின் சிறைவாசத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கட்சித் தொண்டர்கள் கறுப்புப் பட்டியால் வாயைக் கட்டி அமைதியான முறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

sss

தெதுரு ஓயாவில் மூழ்கி காணாமல் போன அறுவரின் சடலங்கள் மீட்பு

April 17, 2026

கொபேகனே (Kobeigane), குராட்டியகஹமுல பகுதியில் உள்ள தெதுரு ஓயாவில் நீராடச் சென்றபோது நீரில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் அறுவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

jud

யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் படுகொலை – வழக்குவிசாரணை ஒத்திவைப்பு

April 17, 2026

யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளர் தயாளனி திலீபன் படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பான மரண விசாரணை

arres

புன்னாலைக்கட்டுவானில் வன்முறையில் ஈடுபடுவதற்கு ஆயுதங்களுடன் காத்திருந்த மூவர் கைது

April 17, 2026

யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவான் பகுதியில் நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்துவதற்காக கூரிய ஆயுதங்களுடன் காத்திருந்த வன்முறை கும்பலைச் சேர்ந்த மூவரை

photo-collage.png (9)

சர்ச்சைக்குரிய தையிட்டி விகாரை காணியை அளவீடு செய்ய அனுமதிக்க மாட்டேன் – விகாராதிபதி

April 17, 2026

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்வதனை தடுத்து நிறுத்த கோரி விகாராதிபதி பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

ca

பிரதான வீதியில் சென்றுகொண்டிருந்த கார் பள்ளத்தில் வீழ்ந்து; ஒருவர் பலி மூவர் காயம்

April 17, 2026

ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதியில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று, சென் ஜோன் டிலரி பகுதியில் வீதியை விட்டு விலகி

ur

பெருந்தோட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுக்க ஒன்றிணைவோம்

April 17, 2026

சிப்ஸ் (CHIPS) நிறுவனம் மற்றும் சங்கு கலைக்கழகம் இணைந்து நடத்தும் மாபெரும் துண்டுப்பிரசுர விநியோக நிகழ்வு. “உரிமைகளை வென்றெடுக்க ஒன்று

heat

உச்சம் தொடும் வெப்பம்

April 17, 2026

நாட்டின் 21 மாவட்டங்களில் இன்று (17) மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு எச்சரிக்கை மட்டம் வரை அதிகரிக்கக்கூடும் என

le

பம்பரக்கலை குடியிருப்பு பகுதியில் தீ

April 17, 2026

நுவரெலியா கண்டி பிரதான வீதியில் அமைந்துள்ள பம்பரக்கலை PWD லயன் குடியிருப்பு பகுதியில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதால் மூன்று வீடுகள்

ben

லக்னோவை வென்ற பெங்களூர்

April 17, 2026

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), பெங்களூருவில் நடைபெற்ற லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸுடனான போட்டியில் நடப்புச் சம்பியன்களான றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு