என்னைச் சஹ்ரானுடன் சிக்கவைக்கச் சிலர் முயற்சிக்கின்றனர் – முஜிபுர் ரஹ்மான்

“நான் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக என்னைச் சஹ்ரானுடன் சிக்கவைக்கச் சிலர் முயற்சிக்கின்றனர். இத்தகைய அச்சுறுத்தல்கள் மூலம் எமது வாயை மூடி, விசாரணைகளை மூடிமறைக்க இடமளிக்கப் போவதில்லை” என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை ( 09) நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்:

“சஹ்ரான் நடத்திய உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் முஸ்லிம் சமூகம் பாரிய இழிவுக்கும் அழுத்தங்களுக்கும் முகம் கொடுத்தது. சஹ்ரான் உள்ளிட்ட குழுவினரால் யாருடைய உதவியும் இன்றி இவ்வளவு பெரிய தாக்குதலை நடத்த முடியுமா என்ற சந்தேகம் ஆரம்பத்திலிருந்தே நிலவுகிறது. தற்போதைய அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன அன்று ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கும் போது, சஹ்ரானுக்குப் பின்னால் சிலர் இருப்பதை உறுதிப்படுத்தி ஒரு துண்டுச் சீட்டில் பெயரையும் எழுதிக் கொடுத்தார்.

முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவும் இது ஒரு ‘சதித்திட்டம்’ எனத் தெரிவித்திருந்தார். ஆனால், அவர் பின்னர் விசாரணைக்குச் செல்லாமல் தலைமறைவாகி, நீதிமன்றம் ஊடாகத் தடையுத்தரவு பெற்றுக்கொண்டார். சஹ்ரானுக்குப் பின்னால் இருந்து செயற்பட்டவர்களைக் கைது செய்யாதது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதால், அவர்களைக் கண்டறியுமாறு நாங்களும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தாக்குதலின் சூத்திரதாரியைக் கண்டுபிடிப்போம் என்ற வாக்குறுதியுடன்தான் ஆட்சிக்கு வந்தார். ஆனால், இறுதியில் ரிஷாட் பதியுதீன், அவரது சகோதரர் மற்றும் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா ஆகியோரையே சூத்திரதாரிகளாகச் சித்தரித்தனர். போதிய சாட்சியங்கள் இல்லாததால் நீதிமன்றம் அவர்களை விடுவித்தது.

தேர்தல் காலத்தில் ‘சூத்திரதாரி’ ஒருவர் இருப்பதாகக் கூறிக்கொண்டவர்கள், இப்போது அப்படி எவரும் இல்லை என்கின்றனர். இந்தக் கருத்துக்கு எதிராக நான் பேசும் போது, என்னையே சூத்திரதாரியாகச் சித்திரிக்கின்றனர். சஹ்ரானுக்கு உதவி செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் கண்டறியுமாறுதான் நாங்கள் கேட்கிறோம். ஆனால், அவர்கள் சஹ்ரானுடன் இந்த விசாரணையை முடித்துக்கொள்ளப் பார்க்கிறார்கள்.

இந்தத் தாக்குதலால் தனிப்பட்ட முறையில் நான் கடுமையாகப் பாதிக்கப்பட்டேன். எனது மகன் பாடசாலைக்குச் செல்ல முடியாமல் போனது; முஸ்லிம் பெண்கள் கலாசார ஆடைகளை அணிய முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, சஹ்ரானுக்கு உதவியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். மிரட்டல்கள் மூலம் உண்மையை மறைக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்,” என்றார்.

acci main

கடந்த ஐந்தரை மாத காலப்பகுதியில் வீதி விபத்துகளால் 1,297 பேர் பலி

June 19, 2026

2026ஆம் ஆண்டின் கடந்த ஐந்தரை மாத காலப்பகுதியில் மாத்திரம் இடம்பெற்ற வீதி விபத்துக்களினால் 1,297 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம்

d

36வது தியாகிகள் தின நினைவேந்தல்!

June 19, 2026

ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னனியின் செயலாளர் பத்மநாபா மற்றும் போராளிகளின் 36வது தியாகிகள் தினம் வவுனியாவில் இன்று வெள்ளிக்கிழமை (19) காலை

chemmani

செம்மணி புதைகுழியில் 387 என்புக்கூடுகள் நேற்று வரை அடையாளம்

June 19, 2026

செம்மணி மனித புதைகுழியில் இருந்து நேற்று 18ஆம் திகதி வியாழக்கிழமை ஒரு குழந்தையின் என்புக்கூடு உட்பட 5 என்புக்கூடுகள் அகழ்ந்து

us

அமெரிக்கா – ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை திடீர் இரத்து

June 19, 2026

பிராந்தியத்தில் நிலவும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட ஆரம்பகட்ட உடன்படிக்கையைச் செயல்படுத்துவது தொடர்பாக, சுவிட்சர்லாந்தின்

Cont

புதிய இறக்குமதி ஒழுங்குமுறை – வௌியானது வர்த்தமானி

June 19, 2026

இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள் தொடர்பான வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை மிகவும் திறம்படக் கண்காணிப்பதற்காக, அரசாங்கம் புதிய ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்தி வர்த்தமானி

ca

உலக கிண்ண கால்பந்தாட்டம்; கனடா ஆதிக்கம்

June 19, 2026

உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரின் ‘பி’ பிரிவு போட்டியில், கட்டார் அணியை 6-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கனடா

727322968_2861356607530672_2715840258650210241_n

ஐ.நா.வின் பங்களிப்புடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் நம்பிக்கை கட்டியமைக்கும் செயல்திட்டமான லன்டேன் (LANTERN – Land and Trust-Building Engagement) செயற்றிட்டம் வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் வரப்பிரசாதம்-ஆளுநர் நா.வேதநாயகன்

June 19, 2026

ஐ.நா.வின் பங்களிப்புடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் நம்பிக்கை கட்டியமைக்கும் செயல்திட்டமான லன்டேன் (LANTERN – Land

ravikaran11

வட்டுவாகால் விகாரைக்குக் கீழும் மனித புதைகுழி — துரைராசா ரவிகரன்

June 19, 2026

வட்டுவாகல் விகாரைக்கு கீழும் மனிதப்புதைகுழிகள் இருக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட

725787214_3157095731150321_7205787586037390907_n

புகையிரதத்தில் பாய்ந்து இராணுவ சிப்பாய் பலி

June 19, 2026

யாழ்ப்பாணம் நெளுக்குளம் பகுதியில் புகையிரத்தத்துடன் மோதி, இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றும் பகலகம பகுதியை

724831988_1316440127283157_7251771360397723744_n

செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்த பதாகையை (Banner) நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் தாமே கிழித்து, தனது காரில் எடுத்துச் சென்றுள்ளார்.

June 19, 2026

யாழ்ப்பாண நகரின் பிரதான வீதியில் தமக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்த பதாகையை (Banner) நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் தாமே

726636978_3565023276978557_4923507748374105851_n

மாணவர்கள் அனைவரும் அதிமானிடக் கோட்பாட்டை நோக்கி நகர வேண்டும்: சிறீதரன் எம்.பி!

June 19, 2026

மனிதன் என்பது விலங்குக்கும் அதிமானிடனுக்கும் இடையே கட்டப்பட்ட ஒரு கயிறு. அத்தகைய பலவீனங்களாலும் எதிர்மறைச் சிந்தனைகளாலும் கட்டப்பட்ட அந்தக் கயிற்றை

725611159_1536223961236185_8994205704252386807_n

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் ஆரம்பம்!

June 19, 2026

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற