மட்டக்களப்பு மாவட்டம், வாகரைப் பிரதேச மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் காணி உரிமை தொடர்பான சிக்கல்களுக்குத் தீர்வு காணும் நோக்கில், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் இப்பகுதிக்கு நேரில் விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்தார்.
வாகரைப் பிரதேசத்தில் உள்ள பல காணிகள் வனவளத் திணைக்களம் மற்றும் ஏனைய அரச திணைக்களங்களால் எல்லையிடப்பட்டுள்ளதால், மக்கள் விவசாயம் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் காணி ஆவணங்களைப் பரிசீலித்ததுடன், இந்தப் பிரச்சினைகளை உரிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று நியாயமான தீர்வினைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.