புதுக்குடியிருப்பு”வீரசிங்கம்” அணைக்கட்டின் கட்டுமானப் பணிகள் முழுமை

வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தொடர் அழுத்தத்தையடுத்து முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு கிழக்கு கமக்கார அமைப்பு பிரிவிற்குட்பட்ட வீரசிங்கம் அணைக்கட்டின் கட்டுமானப்பணிகள் முழுமைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் இவ்வாறு தமது தொடர்ச்சியான வலியுறுத்தலையடுத்து கட்டுமானப்பணிகள் முழுமைப்படுத்தப்பட்ட வீரசிங்கம் அணைக்கட்டினை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

உலகவங்கியின் நிதி உதவியில் ‘சியாப்’ நிறுவனத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட புதுக்குடியிருப்பு கிழக்கு கமக்கார அமைப்பின்கீழ் காணப்படும் வீரசிங்கம், சித்தாறு, சிவசாமி அணைக்கட்டுக்கள் மற்றும் மல்லிகைத்தீவு கமக்கார அமைப்புப் பிரிவிற்குட்பட்ட ஜங்கன் அணைக்கட்டு ஆகிய அணைக்கட்டுக்களை அமைப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் தாம் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருவதாக அப்பகுதி விவசாயிகள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் முறையீடு செய்திருந்தனர்.

இந்நிலையில் விவசாயிகளின் முறையீட்டிற்கு அமைவாக குறித்த அணைக்கட்டுக்களை அமைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பில் கடந்த 27.01.2026இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் முல்லைத்தீவு மாவட்ட கமநல உதவி ஆணையாளரிடம் கேள்வி எழுப்பியதுடதுடன், விரைவாக அணைக்கட்டுக்களின் கட்டுமானப்பணிகளைப் பூர்த்திசெய்யுமாறும் வலியுறுத்தியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து கடந்த 26.03.2026 அன்று முல்லைத்தீவு மாவட்ட கமநல உதவி ஆணையாளரை நேரில் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த அணைக்கட்டுக்களின் கட்டுமானப்பணிகளை விரைவாக பூர்த்திசெய்யுமாறு மீண்டும் வலியுறுத்தியிருந்தார்.

இதன்போது சிவசாமி அணைக்கட்டின் கட்டுமானப்பணிகள் பூத்தியாகியுள்ளதாகவும், வீரசிங்கம், சித்தாறு அணைக்கட்டுகளின் பணிகள் ஒரு வாரத்திற்குள் பூர்த்திசெய்யப்படுமெனவும், ஜங்கன் அணைக்கட்டின் பணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் பூர்த்தி செய்யப்படுமெனவும் முல்லைத்தீவு மாவட்ட கமநல உதவி ஆணையாளர் பதிலளித்திருந்தார்.

இத்தகைய சூழலில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களது தொடர்ச்சியான வலியுறுத்தலையடுத்து வீரசிங்கம் அணைக்கட்டின் கட்டுமானப் பணிகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் இவ்வாறு பூத்திசெய்யப்பட்டுள்ள வீரசிங்கம் அணைக்கட்டை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

குறிப்பாக புதுக்குடியிருப்பு கமக்கார அமைப்பு பிரிவில் 400ற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்குரிய 1087ஏக்கர்வரையிலான வயல் நிலங்கள் காணப்படுகின்றன. அவற்றில் 450ஏக்கர் வரையிலான வயல்நிலங்களுக்கு வீரசிங்கம் அணைக்கட்டிலிருந்தே நீர்ப்பாசனம் செய்யப்பட்டுவருகின்றது.

அந்தவகையில் கடந்த காலத்தில் ஒவ்வொருவருடமும் சிறுபோக நெற்செய்கைக் காலத்தில் விவசாயிகளால் ஆறு இலட்சம்ரூபாய் வரையில் செலவிடப்பட்டு தற்காலிக மண் அணைக்கட்டு அமைக்கப்பட்டே நீர்ப்பாசனம் செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறு ஒவ்வொருவருடமும் பாரிய நிதிச் செலவில் அமைக்கப்படுகின்ற குறித்த தற்காலிக மண்ணைக்கட்டு வெள்ளப்பெருக்கு அபாயத்தைத் தவிர்க்கும் நோக்கில் பெரும்போக காலத்தில் அகற்றப்பட்டும் வந்துள்ளது.

இவ்வாறாக விவசாயிகள் தமது நெற்செய்கைக்கு நீர்ப்பாசனஞ் செய்வதில் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துவந்தனர்.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களின் தொடர்ச்சியான வலியுறுத்தலுக்கமைய குறித்த அணைக்கட்டு விரைவாக அமைக்கப்பட்டதன்மூலம் தாம் எதிர்நோக்கி வந்த நீர்ப்பாசன நெருக்கடிக்கு தீர்வு கிடைத்துள்ளதாகத் தெரிவித்த அப்பகுதி விவசாயிகள், நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனுக்கு தமது நன்றிகளைத் தெரிவித்தனர்.

இந்நிலையில் தமது வலியுறுத்தலையேற்று குறித்த அணைக்கட்டின் கட்டுமானப்பணிகளை துரிதமாக பூத்திசெய்தமைக்கு முல்லைத்தீவு மாவட்ட கமநல உதவி ஆணையாளர் மற்றும் புதுக்குடியிருப்பு கமநலசேவைநிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

net

நெத்தலியாறு விவசாயிகள் ரவிகரன் எம்.பியிடம் கோரிக்கை

April 18, 2026

தமது சொந்தக் காணிகளிலேயே சிறுபோக நெற்செய்கையை மேற்கொள்வதற்கு அனுமதியைப் பெற்றுத்தருமாறு கல்மடுக்குளத்தின் சிறுபோக நீர்ப்பாசன பங்காளர்களான விசுவமடு மேற்கு கமக்கார

ds

வடக்கு, கிழக்கு சிகையலங்கார நிலைய சம்மேளனங்களை இணைப்பது குறித்து ஆய்வு

April 18, 2026

வடக்கு – கிழக்கு மாகாணத்தில் உள்ள அழகக சம்மேளனங்களை இணைத்து ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வருவது குறித்து ஆராய்ந்து வருகிறோம்

ind

இலங்கை விஜயத்தின் போது இந்திய துணை குடியரசு தலைவர் இந்திய வம்சாவளி தமிழர்களை நோக்கி நேசக்கரம் நீட்டுவார்- இந்திய தூதுவர்

April 18, 2026

பரந்த அளவிலான இராஜதந்திர மற்றும் மக்கள் நலன் சார்ந்த பயணமாக, இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள்

chaco

நிலக்கரி முறைகேடு; அடுத்த வாரம் விசாரணை ஆரம்பம்

April 18, 2026

இலங்கையில் நிலக்கரி இறக்குமதி மற்றும் மின் உற்பத்தி நடவடிக்கைகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின்

cana gu

கனடாவின் நோவா ஸ்கோடியா கிராமப்புற துப்பாக்கிச் சூடு: ஆறாம் ஆண்டு நினைவேந்தல்!

April 18, 2026

கனடாவின் நோவா ஸ்கோடியா கிராமப்புற பகுதியில், பொலிஸ் அதிகாரி வேடமணிந்த நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு இளைஞர்

her

லெபனானில் பிரெஞ்சு அமைதிப்படை சிப்பாய் பலி: ஹிஸ்புல்லா மீது மக்ரோன் குற்றச்சாட்டு

April 18, 2026

தெற்கு லெபனானில் இன்று காலை இடம்பெற்ற தாக்குதலில், சர்வதேச அமைதிப்படைப் பணியில் ஈடுபட்டிருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர்

sea

பொலிஸாரிடமிருந்து தப்பிக்க கடலில் குதித்த நபர் உயிரிழப்பு

April 18, 2026

பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர், பொலிஸாரிடம் சிக்காமல் இருக்க கடலில் குதித்த நிலையில், நீரில்

Parl

இலங்கை அமைச்சரவையில் மாற்றங்கள்?

April 18, 2026

நிலக்கரி கொள்முதல் மோசடி குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் குமார ஜெயக்கொடி பதவி விலகியதைத் தொடர்ந்து, அந்த வெற்றிடத்திற்குத் துறைமுகங்கள் மற்றும் விமான

lan

லங்லியில் அடுத்தடுத்த நாட்களில் கத்திக்குத்து: இரு இளைஞர்கள் காயம்

April 18, 2026

லங்லி பகுதியில் இரண்டு நாட்களில் இரண்டு வெவ்வேறு கத்திக்குத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எனினும், இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையில் எந்தத்

colo

மாணவர்களை இலக்கு வைக்கும் ‘கொலைப்பட்டியல்’: பதற்றத்தில் பிரிட்டிஷ் கொலம்பியா சமூகம்

April 18, 2026

பிரிட்டிஷ் கொலம்பியாவின் சிறிய நகரம் ஒன்றில் 16 மாணவர்களைக் குறிவைத்து “கொலைப்பட்டியல்” என்று அழைக்கப்படும் பட்டியல் இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து,

hur

ஹோமுஸ் நீரிணையில் கப்பல் மீது ஈரான் தாக்குதல்

April 18, 2026

மான் கடற்கரையிலிருந்து சுமார் 20 கடல் மைல் (30 கி.மீ) தொலைவில் பயணித்துக் கொண்டிருந்த எண்ணெய் தாங்கிக் கப்பல் ஒன்றைத்

pa

ராமநாதபுரத்தில் இலங்கைக்குக் கடத்த முயன்ற 7 இலட்சம் சிகரெட்டுகள் சிக்கின!

April 18, 2026

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம், புதுமடம் கடற்கரை ஊடாக இலங்கைக்குப் படகு மூலம் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 91 லட்சம் ரூபாய்