ஆரோக்கியமான சமுதாயமே அறிவுபூர்வமான போராட்டங்களை முன்னெடுக்கும்!

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின், மாணவர்களுக்கான போசாக்கு வழங்கும் செயற்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றது.

​இந்நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

​தையற்கலைப் பயிலரங்கினை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வினைத் தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்: ​”இன்றைய இந்தச் சத்துணவு வழங்கும் நிகழ்வு என்பது வெறும் பசியாற்றும் ஒரு நிகழ்வு மட்டுமல்ல; இது ஒரு இனத்தின் இருப்பைத் தீர்மானிக்கின்ற மிக முக்கியமானதொரு ஆரம்பப்புள்ளி. ஒரு தேசத்தின் பலம் அந்தத் தேசத்தின் பொருளாதார வளத்தில் மட்டும் தங்கியிருப்பதில்லை. மாறாக, அந்தத் தேசத்தின் பிள்ளைகள் எத்தகைய உடல் வலுவோடும், மன உறுதியோடும் வளர்க்கப்படுகிறார்கள் என்பதில்தான் அந்த இனத்தின் எதிர்காலம் தங்கியிருக்கின்றது.
​
ஆரோக்கியமான ஒரு சமுதாயமே அறிவுப்பூர்வமான போராட்டங்களை முன்னெடுக்க முடியும். ஒரு இனம் தனது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால், அதன் பிள்ளைகள் போஷாக்குள்ளவர்களாகவும், சிந்தனைத் தெளிவுள்ளவர்களாகவும் வளர வேண்டும். அந்த வகையில், இந்தப் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவுத் திட்டம் என்பது எமது இனத்தின் வேர்களைப் பலப்படுத்தும் ஒரு செயலாகும்.
​
நாங்கள் சாதாரணமானவர்கள் அல்ல; மிகக்கடுமையான பொருளாதாரத் தடைகளையும், நெருக்கடிகளையும் சந்தித்து மீண்டு வந்தவர்கள். மருந்துப் பொருட்களுக்குக்கூடத் தட்டுப்பாடு நிலவிய அந்தச் சூழலிலும் எமது உறுதி தளரவில்லை. அந்த வலிகளிலிருந்து பிறந்தவர்கள்தான் நீங்கள். எனவே, உங்களுக்குக் கிடைக்கும் இந்த வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
​
கடந்த இரண்டு நாட்களில் நடைபெற்ற கொலைச் சம்பவங்கள் எமது சமூகத்தின் மனசாட்சியை உலுக்கியிருக்கின்றன. ‘எங்கே செல்கிறது எமது சமூகம்?’ என்ற அச்சத்தை இவை ஏற்படுத்துகின்றன. வன்முறையும், அறமற்ற செயல்களும் ஒருபோதும் ஒரு சமூகத்திற்கு விடுதலையைப் பெற்றுத் தராது. கல்வியறிவு மட்டும் ஒருவனை மனிதனாக்கிவிடாது; அதோடு சேர்ந்த ஒழுக்கமும், நெறிமுறைகளுமே ஒருவனைச் சிறந்த மனிதனாக மாற்றும்.
​
அன்பார்ந்த மாணவர்களே, சமூகத்தில் இன்று மலிந்து கிடக்கும் போதைப்பொருள் கலாச்சாரம் மற்றும் வன்முறைகளிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஒழுக்கம் என்பது உங்கள் வாழ்க்கையின் கவசமாக இருக்கட்டும். எமது முன்னோர்கள் எத்தகைய தியாகங்களைச் செய்து எமக்கு இந்த நிலத்தை விட்டுச் சென்றிருக்கிறார்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும்” எனத் தெரிவித்தார்.

​பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபையின் தவிசாளர் திரு. சுப்பிரமணியம் சுரேன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் திரு. தனபாலசிங்கம் ஜெயசீலன், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் செயலாளர், உள்ளூராட்சி மன்றங்களின் உதவி ஆணையாளர், கிளிநொச்சி வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளர், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

batti land

மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் சாணக்கியன்

October 12, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில், மேன்முறையீட்டு

மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் இரா சாணக்கியன்

October 12, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில், மேன்முறையீட்டு

844137579_1823350292179398_4868269684370359471_n

கொக்குவில் பிரம்படி படுகொலையின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்!

October 12, 2026

ஈழத் தமிழர் வரலாற்றில் இந்திய இராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட கொடூரமான படுகொலைகளில் ஒன்றான யாழ்_கொக்குவில்பிரம்படி_படுகொலையின்39ஆம்ஆண்டுநினைவு நாள் இன்றாகும் (அக்டோபர் 12, 2026).

gary

நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி

October 12, 2026

ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமை ஆணையாளரும் 2026 நோபல் சமாதான பரிசை பெற்றுள்ளவருமான நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின்

Toronto-Election-1536x783

டொரன்டோ மேயர் தேர்தல் சூடுபிடிக்கும் நிலையில், வெறும் வாக்குறுதிகளைத் தாண்டி மேலதிகமானவற்றை எதிர்பார்க்கும் ஸ்கார்பரோ (Scarborough

October 12, 2026

டொரன்டோ மேயர் தேர்தலில் ஸ்கார்பரோ பகுதி ஒரு முக்கிய போர்க்களமாக உருவெடுத்து வருகிறது. தேர்தல் நாள் நெருங்கி வரும் வேளையில்,

toronto mayor election

அக்டோபர் 26-ஐ முன்னிட்டு முக்கிய பிரச்சினைகள் மற்றும் வேட்பாளர்கள் பற்றிய தகவல்களை வழங்கும் உள்ளூர் அமைப்புகள்

October 12, 2026

வரவிருக்கும் நகராட்சித் தேர்தலில் தெரிந்துகொள்ள வேண்டியவை ஏராளமாக உள்ளன. நீங்கள் வேட்பாளர்கள் மற்றும் முன்னணியில் உள்ள பிரச்சினைகள் பற்றி மேலும்

8

“முதல்-அமைச்சரிடம் இருந்து நாகரீக அரசியலை மற்ற தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்!” – அமைச்சர் ராஜ்மோகன்!

October 12, 2026

சென்னை: முதல்-அமைச்சரிடம் இருந்து நாகரிக அரசியலை மற்ற தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். கொள்கைக் கூட்டணி:

7

“அதிருப்தி எம்எல்ஏக்கள் வேலுமணி வீட்டில் ஆலோசனை; அதிமுகவில் மீண்டும் விரிசலா?”

October 12, 2026

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிருப்தியில் உள்ள அதிமுக எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று சென்னையில் ஆலோசனையில்

vikatan_2020_02_59d19f1a_91b8_4e13_9cf5_9b6856d002d4_p8g

“நோபல் பரிசு ‘நவி பிள்ளை’க்கு அரசு சார்பில் பாராட்டு விழா!” – த.வெ.க அரசுக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள்!

October 12, 2026

சென்னை: அமைதிக்கான நோபல் பரிசுப் பெற்ற தமிழர் நவநீதம் நவி பிள்ளைக்குத் தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்த

4

“கூட்டணியை தக்க வைக்க தி.மு.க. முயற்சிக்கவில்லை!” – திருமாவளவன் அதிரடி!

October 12, 2026

விழுப்புரம்: கூட்டணியைத் தக்கவைக்க திமுக முயற்சிக்கவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். திமுக தவறு: திண்டிவனம்

New Project (37)-a4wa4

“அரசு நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரனை அமர வைத்தது தவறான முன்னுதாரணம்!” – அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் காட்டம்!

October 12, 2026

மதுரை: பிரதமர் மோடி பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அமர வைக்கப்பட்டது தவறான முன்னுதாரணம்

7a6516900cae56f628c7ce9da506af3e

“திருவள்ளுவர் சிலைக்கு காவி உடையா?” – பாஜகவின் செயலுக்குத் தவெக கடும் கண்டனம்!

October 12, 2026

சென்னை: பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில், திருவள்ளுவர் சிலைக்குக் காவி உடை அணிவிக்கப்பட்டதற்குத் தமிழக வெற்றிக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.