ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடங்கியுள்ள இராணுவ நிலைமை தீவிரமடைந்து வருவதால், உலகளாவிய விமானப் போக்குவரத்துத் துறை கடுமையான நெருக்கடியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
துபாய், தோஹா மற்றும் அபுதாபி உள்ளிட்ட மத்திய கிழக்கின் முக்கிய விமான மையங்கள் மூடப்பட்டதன் காரணமாக பல சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
தங்கள் விமான அட்டவணைகளை கணிசமாக மாற்றியமைத்த அல்லது ரத்து செய்த சில முக்கிய விமான நிறுவனங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
ஏயர் கனடா: டெல் அவிவ் மற்றும் துபாய்க்கான அனைத்து விமானங்களும் செப்டம்பர் 7 வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஏயர் பிரான்ஸ் / கேஎல்எம்: ஏர் பிரான்ஸ், பெய்ரூட் மற்றும் டெல் அவிவ்வுக்கான விமானங்களை ஏப்ரல் 4 வரையிலும், துபாய் மற்றும் ரியாத்துக்கான விமானங்களை மார்ச் 31 வரையிலும் ரத்து செய்துள்ளது. கேஎல்எம், டெல் அவிவ், ரியாத் மற்றும் துபாய்க்கான விமான சேவைகளை மே 17 வரை நிறுத்தி வைத்துள்ளது.
டெல்டா: நியூயார்க்-டெல் அவிவ் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன, மேலும் அட்லாண்டாவிலிருந்து புறப்படும் விமானங்கள் செப்டம்பர் 5 வரை தாமதப்படுத்தப்பட்டுள்ளன.
எமிரேட்ஸ்: பிராந்திய வான்வெளி பகுதியளவு மீண்டும் திறக்கப்படுவதால், ஐக்கிய அரபு அமீரக விமான நிறுவனம் குறைந்த எண்ணிக்கையிலான விமானங்களை இயக்கும் என்று கூறியுள்ளது.
லுஃப்தான்சா குழுமம்: லுஃப்தான்சா, ஸ்விஸ், ஆஸ்திரியன் மற்றும் பிரஸ்ஸல்ஸ் ஏர்லைன்ஸ் ஆகியவை துபாய் மற்றும் டெல் அவிவ்வுக்கான விமான சேவைகளை மே 31 வரை நிறுத்தி வைத்துள்ளன. டெஹ்ரான், மஸ்கட் மற்றும் ரியாத் உள்ளிட்ட பிற நகரங்களுக்கான விமான சேவைகள் அக்டோபர் 24 வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கத்தார் ஏர்வேஸ்: தோஹாவிலிருந்து 90 இடங்கள் வரை விமான சேவைகளை படிப்படியாக அதிகரிக்கும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.
துருக்கிய ஏர்லைன்ஸ்: துருக்கி, மத்திய கிழக்கில் மார்ச் இறுதி வரை பெரும்பாலான விமான சேவைகளை ரத்து செய்துள்ளது.
இந்தப் போர்ச் சூழல் காரணமாக, ஆயிரக்கணக்கான பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களை அடைய முடியாமல், உலகெங்கிலும் உள்ள விமான நிலையங்களில் சிக்கித் தவிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.