பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு சென்ற பெண் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிலியந்தலை பொல்கொட ஆற்றில் நேற்று மாலை நிகழ்ந்த படகு விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
39 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனது குடும்பத்தினருடன் தம்பே பகுதியில் படகு சவாரி செய்துகொண்டிருந்தபோது இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த பெண் மரணம் | Britain Teacher Dies In Sri Lanka
சில வாரங்களுக்கு முன்னர் தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் விடுமுறையைக் கழிப்பதற்காக இலங்கை வந்திருந்த இவர், எதிர்வரும் 5-ஆம் திகதி மீண்டும் பிரித்தானியா திரும்புவதற்கு திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.