உழவு இயந்திரத்தால் பொலிசாரை மோதி கொலை; இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை உழவு இயந்திரத்தால் மோதிக் கொலை செய்ததுடன், மற்றுமொரு உத்தியோகத்தருக்குப் படுகாயமேற்படுத்திய சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரதான சந்தேகநபர் தலைமறைவாக உள்ள நிலையில், அவரைத் தேடும் பணிகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கொடிகாமம், கெற்பேலி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கடந்த சனிக்கிழமை இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அங்கு சென்றுள்ளனர்.

இதன்போது, மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தைச் செலுத்தியவர், பொலிஸாரைக் கண்டதும் தப்பிச் செல்லும் நோக்கில் வேகத்தை அதிகரித்து அவர்கள் மீது மோதிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 50 வயதுடைய ஹெட்டியாராச்சி அல்பேர்ட் எனும் பொலிஸ் சார்ஜன்ட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவருடன் சென்ற மற்றைய உத்தியோகத்தர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், உழவு இயந்திரத்தின் உரிமையாளரை நேற்று (29) கைது செய்தனர். அவர் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சம்பவ தினத்தன்று சாரதிக்கு உதவியாளராகச் சென்ற இளைஞன் தலைமறைவாக இருந்த நிலையில், இன்று(30) பாலாவி பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இளைஞனிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உழவு இயந்திரத்தைச் செலுத்திய பிரதான சந்தேகநபர் தொடர்ந்தும் தலைமறைவாக உள்ள நிலையில், அவரைப் பிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

jail

மல்லாவியில் இரு பெண்களை துஸ்பிரயோகம் செய்த மூவர் கைது

April 17, 2026

மல்லாவியில் இரு பெண்களை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் மத போதகர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். துஸ்பிரயோகத்திற்கு உள்ளன இரு

tv

த.வெ.க. தேர்தல் அறிக்கை வெளியீடு

April 17, 2026

ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு ஒரு பவுன் தங்கம் வழங்கப்படும். ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யுனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்பன

wat

நான்கு நாட்களில் 20 பேர் நீரில் மூழ்கிப் பலி!

April 17, 2026

கடந்த ஏப்ரல் 12 முதல் நேற்று (16) வரையிலான நான்கு நாட்களில் மட்டும், நீரில் மூழ்கி 20 பேர் துரதிர்ஷ்டவசமாக

jey

நிலக்கரி கொள்வனவு ஊழல் அழுத்தங்கள்; எரிசக்தி அமைச்சர் இராஜினாமா!

April 17, 2026

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தனது பதவியை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான உத்தியோகபூர்வ

sr air

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் பிரதான அதிகாரிக்கு மீண்டும் விளக்கமறியல்

April 17, 2026

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஏர்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்தபோது லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அந்த நிறுவனத்தின்

chac

லங்கா நிலக்கரி நிறுவனத்தின் முறைகேடுகளை விசாரிக்க ஜனாதிபதியால் விசேட ஆணைக்குழு

April 17, 2026

அரசுக்குச் சொந்தமான லங்கா நிலக்கரி நிறுவனம் (Pvt) Ltd அல்லது அதன் பின்வந்த நிறுவனங்களில், நிலக்கரி இறக்குமதி மற்றும் மின்சார

up

15 வயது மாணவி சடலமாக மீட்பு

April 17, 2026

செ.தி. பெருமாள் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுசாக்கலை நீர்த்தேக்கத்தில் குதித்து, 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் இன்று மதியம்

im

சீர்திருத்த வேகத்தைத் தக்கவைக்க இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தல்

April 17, 2026

உலகளாவிய எரிசக்தி சந்தையில் நிலவும் தளம்பல் நிலைகளால் இலங்கை மீண்டும் அபாயங்களை எதிர்கொண்டுள்ளதால், தனது சீர்திருத்த வேலைத்திட்டங்களில் உறுதியாக இருக்குமாறு

ssdfes

அம்பேத்கரின் சிந்தனைகளை யாராலும் தகர்க்க முடியாது – நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

April 17, 2026

சாதி ஒழிப்புக்கு கல்வியை தவிர வேறு ஆயுதம் இல்லை என உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பேசினார். மதுரை

kush

நடைபெறவுள்ள தேர்தலில் திமுகவுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் காத்திருக்கிறது – குஷ்பு

April 17, 2026

“இந்​தத் தேர்​தலில் திமுக-வுக்கு மிகப்​பெரிய ஏமாற்​றம் காத்​திருக்​கிறது. இது முதல்​வர் ஸ்டா​லின் மற்​றும் திமுக-​வில் உள்ள அனை​வ​ருக்​கும் நன்​றாக தெரி​யும்”

ann

தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது – அண்ணாமலை

April 17, 2026

“தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது. சட்டம் ஒழுங்கை நினைவில் வைத்துக்கொண்டு வாக்களியுங்கள்,”

kan

மகளிர் இட ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை – மக்களவையில் கனிமொழி

April 17, 2026

“மகளிர் இட ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை. ஆனால், அதனை கேடயமாக வைத்து, தொகுதி மறுவரையறை செய்ய உள்ளீர்கள். பிரதமர் மோடியும், உள்துறை