இன்னுமா த்ரிஷா அந்த வீடியோவை வெளியிடவில்லை என்று ரசிகர்கள் காத்திருந்தார்கள். இந்நிலையில் அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வீடியோவை இன்ஸ்டா ஸ்டோரியில் போஸ்ட் செய்துவிட்டார் த்ரிஷா.
நாய்கள் வீடியோ: சீனாவில் நாய்க்கறிக்காக ஒரு வாகனத்தில் கடத்தப்பட்ட ஏழு நாய்கள் தப்பித்து நெடுஞ்சாலையில் நடந்து தானாக வீடு சேர்ந்தன என்று ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் ஆளாளுக்கு ஷேர் செய்ததால் வைரலானது. ஏழு நாய்களும் ஒன்றாக சேர்ந்து தங்களின் உரிமையாளர்களின் வீடுகளை நினைவில் வைத்துக் கொண்டு பத்திரமாக திரும்பி வந்துவிட்டன.
அந்த நாய்களை கார்கி வகை நாய் தான் வழிநடத்தி வீட்டிற்கு அழைத்து வந்தது என்று மக்கள் பேசி வந்தார்கள். ஆனால் அவை கடத்தப்படவில்லை என்றும் ஜெர்மன் ஷெபர்ட் வகையை சேர்ந்த நாய் தன் வீட்டில் இருந்து கிளம்ப, அத்துடன் சேர்ந்து மற்ற ஆறு நாய்களும் கிளம்பியிருக்கின்றன என்றும் பின்னர் தெரிய வந்தது.
அதில் மூன்று நாய்கள் சாங்க்சுன் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஒரு பெண் வளர்த்து வரும் செல்லங்கள். தன் நாய்களை காணவில்லை என்று நான்கு நாட்களாக தேடியிருக்கிறார் அந்த பெண். இனியும் கிடைக்குமா என்கிற சந்தேகம் ஏற்பட்ட நேரத்தில் தான் மார்ச் 18ம் தேதி அந்த நாய்களில் ஒன்று தானாக திரும்பி வந்திருக்கிறது. இதையடுத்து மீதமுள்ள இரண்டு நாய்களையும் தேடிக் கண்டுபிடித்துவிட்டார்.
த்ரிஷாவின் செல்லம் வீடியோ: நாய்கள் ஒரு டிரக்கில் இருந்து தப்பித்து 17 கிலோமீட்டர் நடந்தே வீடு திரும்பியிருக்கிறது என்று அந்த வீடியோவை பலரும் ஷேர் செய்தபோது, நாயை பெத்த பிள்ளையாக வளர்க்கும் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் பார்த்தால் அழுதுவிடுவாரே. செல்ல நாய்கள் நடந்து வந்த வீடியோவை நிச்சயம் இன்ஸ்டா ஸ்டோரியில் போஸ்ட் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதே மாதிரி அந்த செல்லங்களின் வீடியோவை வெளியிட்டுள்ளார் த்ரிஷா.