எரிபொருள் விலை உயர்வை தடுக்க இந்தியாவில் கலால் வரி குறைப்பு

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுக்கும் விதமாக அவற்றின் மீதான கலால் வரி குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, பெட்ரோல் மீதான கலால் வரி 13 ரூபாவிலிருந்து 3 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. 10 ரூபாவாக இருந்த டீசல் மீதான கலால் வரி முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் – ஈரான் இடையிலான போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால், இந்தியாவில் எரிபொருள் விலை உயரும் அபாயமும் எழுந்தது. இந்நிலையில், விலை உயர்வை தடுக்கும் விதமாக, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. அதன்படி, பெட்ரோல் மீதான கலால் வரி 13 ரூபாவிலிருந்து 3 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

10 ரூபாவாக இருந்த டீசல் மீதான கலால் வரி முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கூட்டம் முடிந்த பின்னர், கலால் வரி குறைப்பு தொடர்பான அறிவிப்பை மத்திய பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவிக்கையில்,

நாடு முழுவதும் எரிபொருள் எளிதில் கிடைக்கக் கூடியதாகவும், விலை கட்டுபடியாகக் கூடியதாகவும் இருப்பதை உறுதி செய்வதே இந்த முடிவின் நோக்கம். நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படவில்லை. மத்திய அரசு பொது முடக்கத்தை அமல்படுத்தும் என்ற வதந்தியிலும் உண்மை இல்லை. எரிபொருள் விநியோகத்தில் எந்த இடையூறும் ஏற்படாது. இதுதொடர்பாக வரும் செய்திகள் ஆதாரமற்றவை. மக்கள் அச்சப்பட வேண்டாம்.

பெட்ரோல், டீசல், விமான எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படாத வகையில், கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்வதை உறுதி செய்ய எண்ணெய் வர்த்தக நிறுவனங்களுக்கு அரசு ஆதரவு அளித்து வருகிறது. உலகளாவிய நிலையற்ற தன்மை இருந்த போதிலும், சில்லறை விலைகளில் எந்த உயர்வும் ஏற்படாமல் தடுப்பதே இதன் நோக்கம்.

உள்நாட்டில் கிடைப்பதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், விமான எரிபொருள் உள்ளிட்ட சில பெட்ரோலிய பொருள்களின் ஏற்றுமதி மீதான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

ssdfes

அம்பேத்கரின் சிந்தனைகளை யாராலும் தகர்க்க முடியாது – நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

April 17, 2026

சாதி ஒழிப்புக்கு கல்வியை தவிர வேறு ஆயுதம் இல்லை என உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பேசினார். மதுரை

kush

நடைபெறவுள்ள தேர்தலில் திமுகவுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் காத்திருக்கிறது – குஷ்பு

April 17, 2026

“இந்​தத் தேர்​தலில் திமுக-வுக்கு மிகப்​பெரிய ஏமாற்​றம் காத்​திருக்​கிறது. இது முதல்​வர் ஸ்டா​லின் மற்​றும் திமுக-​வில் உள்ள அனை​வ​ருக்​கும் நன்​றாக தெரி​யும்”

ann

தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது – அண்ணாமலை

April 17, 2026

“தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது. சட்டம் ஒழுங்கை நினைவில் வைத்துக்கொண்டு வாக்களியுங்கள்,”

kan

மகளிர் இட ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை – மக்களவையில் கனிமொழி

April 17, 2026

“மகளிர் இட ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை. ஆனால், அதனை கேடயமாக வைத்து, தொகுதி மறுவரையறை செய்ய உள்ளீர்கள். பிரதமர் மோடியும், உள்துறை

wa

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் கை சந்தித்தார் இலங்கையின் ஐ.நா தூதுவர்

April 17, 2026

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைப் பிரதிநிதியும் தூதுவருமான சுமித் தஸநாயக்க, ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையாளர் வோல்கர் டேர்க்

Education

கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு

April 17, 2026

2026ஆம் ஆண்டிற்கான முதலாம் தர கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இது

mak

வெலிக்கடை சிறைச்சாலையில் பிள்ளையானை வைத்திருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டம்!

April 17, 2026

பிள்ளையானின் சிறைவாசத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கட்சித் தொண்டர்கள் கறுப்புப் பட்டியால் வாயைக் கட்டி அமைதியான முறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

sss

தெதுரு ஓயாவில் மூழ்கி காணாமல் போன அறுவரின் சடலங்கள் மீட்பு

April 17, 2026

கொபேகனே (Kobeigane), குராட்டியகஹமுல பகுதியில் உள்ள தெதுரு ஓயாவில் நீராடச் சென்றபோது நீரில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் அறுவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

jud

யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் படுகொலை – வழக்குவிசாரணை ஒத்திவைப்பு

April 17, 2026

யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளர் தயாளனி திலீபன் படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பான மரண விசாரணை

arres

புன்னாலைக்கட்டுவானில் வன்முறையில் ஈடுபடுவதற்கு ஆயுதங்களுடன் காத்திருந்த மூவர் கைது

April 17, 2026

யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவான் பகுதியில் நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்துவதற்காக கூரிய ஆயுதங்களுடன் காத்திருந்த வன்முறை கும்பலைச் சேர்ந்த மூவரை

photo-collage.png (9)

சர்ச்சைக்குரிய தையிட்டி விகாரை காணியை அளவீடு செய்ய அனுமதிக்க மாட்டேன் – விகாராதிபதி

April 17, 2026

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்வதனை தடுத்து நிறுத்த கோரி விகாராதிபதி பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

ca

பிரதான வீதியில் சென்றுகொண்டிருந்த கார் பள்ளத்தில் வீழ்ந்து; ஒருவர் பலி மூவர் காயம்

April 17, 2026

ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதியில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று, சென் ஜோன் டிலரி பகுதியில் வீதியை விட்டு விலகி