ழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் மூளைச்சாவடைந்த சிங்களவர் ஒருவரின் இரண்டு சிறுநீரகங்களும் தானமாக வழங்கப்பட்ட நிலையில், அவர் மூலம் இருவருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
போகஸ்வெள பகுதியைச் சேர்ந்த ஆர். முத்துபண்டா என்பவர் மூளைக்கட்டி காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த புதன்கிழமை மூளைச் சாவடைந்துள்ளார். அவரது குடும்பத்தினர் அவரது இரு சிறுநீரகங்களையும் தானமாக வழங்க ஒப்புக்கொண்டனர்.
இதற்கமைய, சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் இரு சிறுநீரகங்களும் பிரித்தெடுக்கப்பட்டு, காத்திருப்புப் பட்டியலில் இருந்த ஒருவருக்கு ஒரு சிறுநீரகம் உடனடியாக வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது. மற்றொரு சிறுநீரகம் நாட்டிலுள்ள மற்றொரு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிறுநீரகம் அவசியம் தேவைப்படும் நபருக்குப் பொருத்தப்பட்டுள்ளது.