இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணி இந்த வருட இறுதியில் இந்தியாவுக்கான சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
குறித்த தொடருக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இன்று (26) வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள இந்தச் சுற்றுப்பயணத்தில் 3 ஒருநாள் சர்வதேச மற்றும் 3 இருபதுக்கு 20 போட்டிகள் இடம்பெறவுள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையிலான இந்தப் போட்டித் தொடரில் முதலாவதாக ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதற்கமைய, டிசம்பர் 13,16 மற்றும் 19 ஆம் திகதிகளில் மூன்று ஒருநாள் போட்டிகளும் நடைபெறவுள்ளன.
அதேநேரம், டிசம்பர் 22,24, மற்றும் 27 ஆம் திகதிகளில் மூன்று இருபதுக்கு 20 போட்டிகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.