மிக மிக விரைவாக போதைப் பொருளை அழிக்க எதிர்பார்க்கிறோம்!

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் இருப்புக்களை விரைவாக அழிக்கும் பணிகளுக்கு நிலவும் சட்டச் சிக்கல்களை நீக்குவதற்குத் தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவிற்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று(24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டம் குறித்த சமூக நம்பிக்கையை உறுதிப்படுத்துவதில், கைப்பற்றப்படும் போதைப்பொருட்களை எவ்வளவு விரைவாக அழிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக அழிப்பதன் அவசியத்தை ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.

இதற்காக முறையான பொறிமுறையொன்றை உடனடியாகத் தயாரிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இந்தச் செயல்முறையைத் துரிதப்படுத்துவதற்கான சட்டத் திருத்த வரைவு ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளது.

அந்த வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளின்படி, கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை அழிப்பதற்கு எடுக்கும் காலத்தை மேலும் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

இச்செயல்முறையின் போது நீதிமன்றம், பொலிஸ் மற்றும் அரச பகுப்பாய்வுத் திணைக்களம் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, வழக்குகளை முன்னெடுக்கும் போது சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் ஜயவீர விளக்கமளித்தார்.

கடத்தல்காரர்கள் தப்பிச் செல்வதற்கும், வழக்குத் தடயப் பொருட்கள் மீண்டும் சமூகத்திற்குள் செல்வதற்குமான அனைத்து வழிகளையும் அடைக்கும் வகையில் இந்தச் சட்டத் திருத்தங்களைக் கொண்டுவர வேண்டியதன் அவசியம் இங்கு வலியுறுத்தப்பட்டது.

கைப்பற்றப்படும் போதைப்பொருட்கள் தொடர்பான நீதிமன்றச் செயல்முறைகளின் தற்போதைய நிலை மற்றும் அங்கு எழுந்துள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்காக பொலிஸாரின் தலையீட்டுடன் தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய விளக்கமளித்தார்.

அத்துடன், இச்செயல்முறையைத் துரிதப்படுத்துவதற்காக அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தின் வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் இதன்போது ஆலோசிக்கப்பட்டது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை விரைவாக அழிப்பதற்கான சட்டத் தடைகளை நீக்குவது தொடர்பான முன்மொழியப்பட்ட சட்டமூலத்தை, திருத்தங்களுடன் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவும் இதன்போது இணக்கம் காணப்பட்டது.

Hemarathne

பிக்குவால் சிறுமி துஷ்பிரயோகம்: 22ஆம் திகதி வரை பிக்குவுகடகு விளக்கமறியல்!

May 14, 2026

15 வயது சிறுமி ஒருவரை தவறானமுறைக்குட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அத்தமஸ்தானத்தின் பொறுப்பாளரான பல்லேகம ஹேமரத்ன தேரரை, வரும் 22ஆம் திகதி

hu

பெறுமதிமிக்க பொருட்களை திருடிய இளம் கணவன் மனைவி கைது

May 14, 2026

கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீட்டு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இளம் தம்பதியரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கிளிநொச்சி

yoshitha-rajapaksa

யோஷித ராஜபக்சவுக்கு எதிரான பணமோசடி வழக்கு: ஆரம்பக்கட்ட ஆட்சேபனையை நிராகரித்தது மேல் நீதிமன்றம்!

May 14, 2026

யோஷித ராஜபக்சவுக்கு எதிரான பணமோசடி வழக்கு தொடர்பாகப் பிரதிவாதி தரப்பால் முன்வைக்கப்பட்ட ஆரம்பக்கட்ட ஆட்சேபனையை (Preliminary objection) கொழும்பு மேல்

Screenshot 2026-05-14 115508

அதிமுகவில் உச்சகட்ட மோதல்! ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு; ரத்தத்தின் ரத்தங்கள் அதிர்ச்சி!

May 14, 2026

சென்னை: தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு அளித்த விவகாரத்தில் அதிமுக இரண்டாக உடைந்துள்ள நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள

p-sanmugam

“100 நாள் வேலைத் திட்டத்திற்கு ஜூன் 30-ல் சமாதி!” – பாஜக அரசின் புதிய திட்டத்தை சாடிய பெ. சண்முகம்!

May 14, 2026

சென்னை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (100 நாள் வேலைத் திட்டம்) வரும் ஜூன் 30-ஆம்

3

“தமிழ்நாட்டைக் காக்கும் வலிமையும் அதற்கான போர்க்குணமும் நமக்கே உரியதாகும்” – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி

May 14, 2026

சென்னை: “தமிழ்நாட்டைக் காக்கும் வலிமையும் அதற்கான போர்க்குணமும் நமக்கே உரியதாகும்” எனத் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தவெக அரசு

collage-down-1714447028

சிறார்கள் கையில் மதுவா? – 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை! டாஸ்மாக் எச்சரிக்கை!

May 14, 2026

சென்னை: தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றது முதல் டாஸ்மாக் நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

1778468918-6452

“லட்சக்கணக்கான மாணவர்களின் நம்பிக்கை சிதைந்துவிட்டது!” – நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி முதல்வர் விஜய் அதிரடி அறிக்கை!

May 14, 2026

சென்னை: நாடு முழுவதும் 2026-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு

1500x900_834373-kb-munusami

“பதவி எனும் துண்டுக்காக கழகம் எனும் வேட்டியைக் கழற்றாதீர்கள்!” – சி.வி.சண்முகம் தரப்பிற்கு கே.பி. முனுசாமி கடும் கண்டனம்!

May 14, 2026

சென்னை: அதிமுகவில் நிலவும் உட்கட்சிப் பூசல் மற்றும் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சி.வி. சண்முகம் தரப்பினரின் செயல்பாடுகள் குறித்து,

free

“சப்-இன்ஸ்பெக்டரை கைது செய்; அரசு வேலை வழங்கு!” – சுடப்பட்ட மணிகண்டன் மனைவி தூத்துக்குடியில் ஆவேசப் பேட்டி!

May 14, 2026

தூத்துக்குடி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரால் சுடப்பட்ட மணிகண்டனுக்கு நீதி கேட்டு, அவரது மனைவி பொன்மணி தூத்துக்குடியில்

Screenshot 2026-05-13 143435

“திமுக-வின் வாக்குகளைக் காட்டித்தான் நீங்கள் முதல்வர்!” – விஜய் அறிக்கைக்கு உதயநிதி ஸ்டாலின் அதிரடி பதிலடி!

May 14, 2026

சென்னை: “திராவிட மாடல் ஆட்சியின் நலத்திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எங்களது வெற்றி” என முதலமைச்சர்

1200-675-26672389-thumbnail-16x9-shan

“எங்களை நீக்க எடப்பாடிக்கு அதிகாரம் இல்லை!” – அதிமுக பிளவு குறித்து சி.வி.சண்முகம் அனல் பறக்கும் பேட்டி!

May 14, 2026

சென்னை: தவெக-வுக்கு ஆதரவு அளித்ததற்காகத் தங்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையாகக் கட்சிப் பதவிகளைப் பறித்த எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள் அமைச்சர்