மக்கள் தங்களைத் தாமே பாதுகாத்துக்கொள்ளுமாறு பொலிஸார் எச்சரிக்கை
நாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் குற்றச்செயல்களிலிருந்து பொதுமக்கள் தம்மையும் தமது உடைமைகளைளுயும் பாதுகாத்துக்கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர். பொதுமக்கள் அச்சமின்றி நடமாடுவதற்கான சூழலை இருபத்தி நான்கு மணிநேரமும் பொலிஸார் அர்பணிப்புடன் செயற்படுகின்றனர். எனினும் ஒருசிலரின் கவனக்குறைவு காரணமாக இவ்வாறான சம்பவங்களில் சிக்கி உயிரிழப்புகள் மற்றும் சொத்துகளையும் இழக்க நேரிடுகின்றனது. குறிப்பாக பொது இடங்களில் அல்லது பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்யும் போது, குழுவொன்று திட்டமிட்ட வகையில் சிநேகபூர்வமாக பழகி நம்பிக்கையை வென்று, […]
ஊழல் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி எனப் பொய்க்கூறி பண மோசடி
வலான ஊழல் ஒழிப்புப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி இந்திக வீரசிங்க எனத் தன்னை அடையாளப்படுத்தி, WhatsApp ஊடாகப் பல பிரதேச வர்த்தகர்களை அச்சுறுத்திப் பணம் பறித்த நபர் ஒருவர், இன்று (25) பண்டாரகம அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் போதைப்பொருள் கடத்தல், திருட்டு மற்றும் கொள்ளை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுக்காகச் சிறை தண்டனை அனுபவித்து விடுதலையான “துசித பிரம்மரத்ன” எனும் நபர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அம்பலாங்கொடை, இரத்தினபுரி, ஹோரணை, […]
புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினருக்கும் பிரதி அமைச்சருக்கும் இடையில் கலந்துரையாடல்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினருக்கும், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் கூட்டுறவு பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடல் அண்மையில் புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதன்போது புதுக்குடியிருப்பு வணிகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்துக்கென கட்டடம் இல்லாதது குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனவும், புதுக்குடியிருப்பிலிருந்து கொழும்புக்கான ஏசி பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
குருநாகல் பிரதான வீதியில் மாட்டைச் சித்திரவதை செய்தவர் கைது!
சிலாபம் – குருநாகல் பிரதான வீதியில் ஆபத்தான முறையில் மாட்டு வண்டியை ஓட்டிச் சென்றபோது, எதிரே வந்த கார் ஒன்றுடன் மோதி மாடு விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பாக ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 22ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் தித்தகடை பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த மாட்டு வண்டியை வீதியில் ஓட்டுவதற்கு எந்தவித அனுமதியும் பெறப்படவில்லை என்பதும், அதனை ஓட்டிய நபர் மாட்டை மிகவும் கொடூரமான முறையில் தாக்கி ஓட்டிச் சென்றதும் விசாரணையில் […]
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையால் நீர் நுகர்வு அதிகரிப்பு

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையுடன் நீர் நுகர்வு அதிகரித்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், பொதுமக்கள் இயன்றவரை நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார். தற்போதைய வறட்சியான காலநிலை தொடருமானால், நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்: “வறட்சியான காலநிலையுடன் நுகர்வோரின் நீர் பயன்பாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்தை எடுத்துக்கொண்டால், […]
ஹோர்முஸ் நீரிணையை கடந்த சீனக் கப்பல்

ஹோர்முஸ் நீரிணை ஊடாகக் கப்பல்கள் பயணிப்பதற்கு ஈரான் விதித்துள்ள புதிய நிபந்தனைகளுக்கு மத்தியில், இன்று (25) சீனக் கப்பல் ஒன்று அந்தப் பகுதியைக் கடந்துச் சென்றுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், ஹோர்முஸ் நீரிணை ஊடாக சீனாவின் ‘எக்ரெட்’ (Egret) என்ற எண்ணெய் தாங்கிக் கப்பல் மாத்திரமே பயணித்துள்ளதாகப் பதிவாகியுள்ளது. இக்கப்பல் வழமையான கடல் வழித்தடத்தை விட ஈரானிய கடற்கரைக்கு மிக நெருக்கமான பகுதியில் பயணித்துள்ளது. தனக்கு எதிரான போரில் ஈடுபடாத மற்றும் பகைமையற்ற நாடுகளின் கப்பல்கள் […]
ஆசிரியர்களின் இடமாற்றம்; நாளை முதல் தொடர் போராட்டம்!

ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பான கோரிக்கைகளை வடமாகாண கல்வித் திணைக்களம் பரிசீலிக்காமல், மீண்டும் மீண்டும் குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கே இடமாற்றம் வழங்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபசெயலாளர் தீபன் திலீசன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று (25) இடம்பெற்ற ஆசிரியர்களுடனான கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பல்வேறு நோய்க் காரணங்களினால் பாதிக்கப்பட்டவர்களையும், ஏற்கனவே கஷ்டப் பிரதேசங்களில் சேவையாற்றிய ஆசிரியர்களையும் மீண்டும் இடமாற்றம் செய்வதற்கு வடமாகாண கல்வித் […]
ட்ரம்பின் மக்கள் செல்வாக்கு சரிகிறது!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான அந்நாட்டு மக்களின் ஆதரவும் செல்வாக்கும் படிப்படியாகக் குறைந்து வருவதாக அமெரிக்க ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதன்படி, அவருக்கு இருந்த மக்கள் செல்வாக்கு 36% இனால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்த அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. ட்ரம்பின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் ஈரானுக்கு எதிராக அவர் முன்னெடுத்துள்ள போர் நடவடிக்கைகள் ஆகியவையே இந்தச் சரிவுக்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.
ரயில் பயணிகள் அதிகரிப்பு

எரிபொருள் விலை உயர்வு மற்றும் பேருந்து கட்டண அதிகரிப்பு காரணமாக, பொதுமக்கள் அதிகளவில் ரயில்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தச் சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சாமர ஜயசேகர இன்று (25) செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தி கருத்து தெரிவிக்கையில், இந்த நிலைமையால் ரயில்வே திணைக்களம் கடந்த சில நாட்களாக இலாபம் ஈட்டி வருவதாகக் குறிப்பிட்டார். எரிபொருள் விலை உயர்வால் எதிர்காலத்தில் சரக்கு போக்குவரத்திற்கும் பொதுமக்கள் ரயில்களையே நாடுவார்கள் என்பதால், ரயில் பயண […]
விடுமுறை நாளில் மேலதிக வகுப்பு; பொலிஸார் நடவடிக்கை

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள யுத்த நிலைமை காரணமாக எமது நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்களைக் கருத்திற்கொண்டு வாரத்தில் ஒவ்வொரு புதன்கிழமைகளில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கி மேலதிக வகுப்புகளை நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இன்று (25.03.2026) ஹட்டன் பகுதியில் இரண்டு ஆசிரியர்களால் நடத்தப்பட்ட தனியார் வகுப்பைத் தடுத்து நிறுத்த ஹட்டன் தலைமையக பொலிஸ் பிரதம ஆய்வாளர் டபிள்யூ. ஆர். ஏ. டி. சுகததாச நடவடிக்கை எடுத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். ஹட்டன் – ஹிஜிராபுர பகுதியில் […]