லிபரல் கட்சியின் தோல்வியுற்ற கொள்கைகள் கனடாவின் வாகனத் துறையை பெருமளவில் பாதித்து வருகின்றன. 2015-ஆம் ஆண்டு முதல், கனடாவின் வாகன உற்பத்தி பாதியாகக் குறைந்துள்ளதுடன், நாடு முழுவதும் 5,000 வேலைவாய்ப்புகள் இழக்கப்பட்டுள்ளன என செய்திகள் வெளியாகியுள்ளன.
இதில் பிராம்ப்டன் நகரம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது; அங்கு ஏற்கனவே 3,000 வேலைவாய்ப்புகள் பறிபோயுள்ளன. உற்பத்தியை இரட்டிப்பாக்கவும், வேலைவாய்ப்புகளை மீண்டும் தாயகத்திற்குக் கொண்டு வரவும் கன்சர்வேட்டிவ் கட்சியினர் ஒரு திட்டத்தை வகுத்துள்ளனர்.
அவை பின்வருமாறு
கனடாவில் தயாரிக்கப்படும் அனைத்து வாகனங்கள் மீதான GST வரியை நீக்கி, அவற்றை மக்கள் வாங்கக்கூடிய விலையில் கிடைக்கச் செய்தல்.
மின்சார வாகன கட்டாய உத்தரவுகளை முடிவுக்குக் கொண்டு வருதல் மற்றும் எமது அமெரிக்கக் கூட்டாளிகளுடன் தரநிலைகளை ஒத்திசைத்தல்.
டொலருக்கு டொலர்(dollar-for-dollar) விதியின் மூலம் உற்பத்தியை மீண்டும் தாயகத்திற்குக் கொண்டு வருதல்.
வட அமெரிக்க பாதுகாப்புத் தரங்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் எமது தொழில்நுட்பத்தைப் பாதுகாத்தல்.
அமெரிக்கச் சந்தைக்கான வரி இல்லாத (tariff-free) அணுகுமுறையைப் உறுதிப்படுத்த நாங்கள் உறுதியாக நிற்போம்.
எமது வாகனத் துறையை மீண்டும் கட்டியெழுப்புவோம், எமது பொருளாதார வலிமையை மீட்டெடுப்போம், மற்றும் கனடியத் தொழிலாளர்களுக்காகக் குரல் கொடுப்போம் என அவை அமைந்துள்ளன.