மாறிவரும் தற்போதைய சூழலில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியமானது உலக அரசியலின் மையப்புள்ளியாக மாறியுள்ளது

உலகளாவிய அதிகாரப் பகிர்வு மற்றும் வர்த்தகப் பாதைகள் மாறிவரும் தற்போதைய சூழலில், இந்தியப் பெருங்கடல் பிராந்தியமானது உலக அரசியலின் மையப்புள்ளியாக மாறியுள்ளதாக WION சர்வதேச மாநாட்டில் (WION Global Summit) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியப் பெருங்கடல் என்பது மோதல்களுக்கான வலயாக இல்லாமல், நாகரிகங்களை இணைக்கும் பாலமாகவே இருந்துள்ளது. குறிப்பாக, 2,000 ஆண்டுகளுக்கு முன்பு கௌதம புத்தரின் போதனைகள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்தமை, இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான நாகரிக உறவின் தொடக்கமாகும்.

இன்று உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தில் மூன்றில் இரண்டு பங்கும், கொள்கலன் போக்குவரத்தில் பாதியும் இந்தியப் பெருங்கடல் வழியாகவே இடம்பெறுகின்றன. உலகப் பொருளாதாரத்தின் டிஜிட்டல் உயிர்நாடிகளான கடலடித் தொடர்பாடல் கேபிள்கள் (Undersea cables) இந்தப் பிராந்தியத்தின் ஊடாகவே செல்கின்றன. எனவே, இந்த கடல்வழிப் பாதையில் ஏற்படும் பாதிப்பு முழு உலகப் பொருளாதாரத்தையும் பாதிக்கும்.

கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவிற்கு இடையிலான கடல்சார் வர்த்தகப் பாதையின் மையத்தில் இலங்கை அமைந்துள்ளது. எவ்வாறாயினும், ஒரு நாட்டின் செல்வாக்கு அதன் புவியியல் அமைவிடத்தில் மாத்திரம் தங்கியிருக்கவில்லை; அதனை அந்த நாடு எவ்வளவு புத்திசாலித்தனமாக கையாள்கிறது என்பதிலேயே தங்கியுள்ளது. சிறிய நாடுகள் தமது இறையாண்மையைப் பாதுகாக்கும் அதேவேளை, அனைத்து நாடுகளுடனும் சமநிலையான வெளியுறவுக் கொள்கையைப் பேணுவது அவசியமாகும்.

21 ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான வளர்ச்சியாக இந்தியாவின் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப எழுச்சி கருதப்படுகிறது. இந்தியப் பெருங்கடலில் ஒரு ஸ்திரப்படுத்தும் சக்தியாக இந்தியா உருவெடுத்து வருகிறது. இந்த வளர்ச்சி இலங்கைக்குப் பாரிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

பாதுகாப்பான கடல் பாதைகளை உறுதிப்படுத்த இரு நாடுகளும் இணைந்து செயற்படல்.

போக்குவரத்து, எரிசக்தி மற்றும் நிதி மையமாக இலங்கையை மேம்படுத்தல். குறிப்பாக, தெற்காசிய ‘பசுமை ஹைட்ரஜன்’ தாழ்வாரத்தை உருவாக்குதல்.

கடல்சார் ஆராய்ச்சி, நிலையான மீன்பிடித் தொழில் மற்றும் புதுப்பிக்கத்தக்க கடல் எரிசக்தி துறைகளில் ஒத்துழைத்தல்.

“இந்தியப் பெருங்கடல் ஸ்திரமாக இருந்தால், உலகப் பொருளாதாரம் ஸ்திரமாக இருக்கும். இந்த சமுத்திரம் அமைதி, ஒத்துழைப்பு மற்றும் பகிரப்பட்ட செழிப்பின் வலயமாக இருப்பதை உறுதி செய்வது எமது தலைமுறையின் பொறுப்பாகும்” என அவரது உரையில் வலியுறுத்தப்பட்டது.

ano

சவூதி அரேபிய உயர் நீதிமன்றில் அனோஜன் சார்பில் மேன்முறையீடு

October 12, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா சார்பாகத் தயாரிக்கப்பட்ட மேல்முறையீடு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நேற்று

war

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

October 12, 2026

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்று (11) மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின்

president-1

எரிபொருள் ஒப்பந்தங்கள் திருத்தப்படும் – ஜனாதிபதி

October 12, 2026

தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் ஏற்கனவே செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் திருத்தம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்

4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்