தி.மு.க. அரசை கண்டித்து, தமிழகம் முழுதும் போராட்டம்; ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

திருப்பரங்குன்றம் விவகாரத்தில், தி.மு.க., அரசை கண்டித்து, தமிழகம் முழுதும் ஹிந்து முன்னணியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னையில் கோயம்பேடு 100 அடி சாலையில், ஹிந்து முன்னணி செய்தித் தொடர்பாளர் இளங்கோவன் தலைமையில், சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன், பா.ஜ., கவுன்சிலர் உமா ஆனந்தன் உட்பட, 200க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

ஆனால், போராட்டத்திற்கு அனுமதி இல்லை என கூறி, அவர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது சிலர், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வந்த பேருந்தை வழி மறித்தனர். அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக துாக்கி சென்றபோது, சபரிமலைக்கு மாலை அணிந்திருந்த ஒருவரது மாலை அறுந்ததால், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மதுரை பழங்காநத்தத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஹிந்து முன்னணி மாநில செயலர் சேவுகன் தலைமையில் ஏராளமானோர் பங்கேற்றனர். பெண்கள் உட்பட 250க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

மதுரையை அடுத்த எழுமலை பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் மேற்பட்டோர் கைதாகினர். தமிழக அரசை கண்டித்தும், நீதிபதி சுவாமிநாதனை விமர்சிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கோவையில் ஹிந்து முன்னணி மற்றும் ஹிந்து மக்கள் கட்சியினர் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செல்வபுரம் சாலை, சிவாலயா சந்திப்பு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். செட்டி வீதி சந்திப்பில் ஹிந்து மக்கள் கட்சியினர், சாலையில் அமர்ந்து, ‘தி.மு.க.,வை தடை செய்ய வேண்டும்’ என கோஷமிட்டனர்.

அர்ஜுன் சம்பத் கூறுகையில், ”நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத தி.மு.க., அரசை ‘டிஸ்மிஸ்’ செய்யக் கோரியும், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்,” என்றார்.

li

இரும்பு பாலம் உடைந்து போக்குவரத்து துண்டிப்பு

July 26, 2026

லிந்துலை – மெராயா பகுதியிலிருந்து ஹென்போல்ட் தோட்டத்திற்குச் செல்லும் பாதையில் அமைந்துள்ள இரும்புப் பாலம் உடைந்து விழுந்ததால், அப்பகுதி மக்களின்

dol

எல் நினோவால் 20 பில்லியன் டொலர் வரை பொருளாதார இழப்பைச் சந்திக்க நேரிடும்

July 26, 2026

பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டு வரும் அசாதாரண வெப்பநிலை மாற்றங்களால் உருவாகும் சூப்பர் எல் நினோ வானிலை மாற்றம் காரணமாக, ஆபிரிக்க

ddfs

இத்தாலியிலிருந்து சூட்சுமமாக கொண்டுவரப்பட்ட உலோகக் கூடுகள்

July 26, 2026

கட்டுநாயக்க – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 64 புறாக்களை சட்டவிரோதமாக கொண்டு வர முயன்ற சகோதரர்கள் இருவருக்கு சுங்க

ravikara

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து…

July 26, 2026

சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவை இரு கை கூப்பி கும்பிட்டும் கேட்டு விட்டோம்

s

45 பேரை தென்சீனக் கடலில் மீட்க உதவிய சீனாவுக்கு வியட்நாம் நன்றி

July 26, 2026

ன்சீனக் கடலில் வியட்நாமைச் சேர்ந்த ‘கோய் நுயென் 18’ என்ற சரக்குக் கப்பல் மோசமான வானிலை காரணமாக நன்ஷா தீவுகள்

BRXPQSLKS5GHVGE3XXHDA5IH6M

நோர்த் யோர்க்கில் துப்பாக்கியுடன் காணப்பட்டதாகக் கூறப்படும் நபரைத் தேடும் பொலிஸார்

July 26, 2026

வெள்ளிக்கிழமை பிற்பகல் நோர்த் யோர்க் (North York) பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்ததாகக் கூறப்படும் நபர் ஒருவரை பொலிஸார் தேடி

N32AHFWGRNDKDEHVEIQNHXL7SQ

கிறிஸ்டி பிட்ஸ் (Christie Pits) அருகே இருவர் மீது கத்திக்குத்து: முகமூடி அணிந்த சந்தேகநபரைத் தேடும் டொராண்டோ பொலிஸார்

July 26, 2026

டொராண்டோவின் மேற்குப் பகுதியில் சனிக்கிழமை இரவோடு இரவாக இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தை அடுத்து, சந்தேகநபர் ஒருவரை டொராண்டோ பொலிஸார் தீவிரமாகத்

nufsdf

நுவரெலியா வனப் பகுதியில் பாரிய காட்டுத் தீ

July 26, 2026

நுவரெலியா மாவட்டம், வலப்பனை ஹரஸ்பெத்த, கல்தெகபத்தன வனப் பகுதியில் பாரிய காட்டுத் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இத்தீ காரணமாக இதுவரை

se

கடலலையில் சிக்கிய இருவர் மீட்பு

July 26, 2026

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏத்துக்கால கடற்கரையில் குளிக்கச் சென்ற இருவர் நீரோடைக்குச் சிக்கி சனிக்கிழமை (25) அன்று கடலுக்குள் அடித்துச்

arr

உணவக உரிமையாளர் சுட்டுக்கொலை; மயானத்தில் இருவர் கைது

July 26, 2026

பொரலஸ்துவை – பெல்லன்வில உணவக உரிமையாளருக்குச் சுட்டுக்கொலை செய்துவிட்டுத் தப்பியோடிக்கொண்டிருந்த துப்பாக்கித்தாரியும் ஓட்டுநரும், துப்பாக்கிச் சூடு இடம்பெற்று ஒரு மணி

de

டெங்கு பலி எண்ணிக்கை 61 ஆக உயர்வு

July 26, 2026

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் (NDCU) சமீபத்திய தரவுகளின்படி, இலங்கையில் இந்த ஆண்டு டெங்கு நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை

acci main

விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழப்பு; புளியங்குளத்தில் சம்பவம்

July 26, 2026

புளியங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-09 பிரதான வீதியின் பூதூர் பகுதியில், வவுனியா திசை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று