வெற்றி தோல்வியின்றி நியூஸிலாந்துடனான டெஸ்டை முடித்துக்கொண்டது மே. தீவுகள்

நியூஸிலாந்துக்கு எதிராக கிறைஸ்ட்சேர்ச் ஹெக்லே விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் கடைசி நாளன்று ஜஸ்டின் க்றீவ்ஸ் குவித்த இரட்டைச் சதத்தின் உதவியுடன் அப் போட்டியை மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டது.

ஆட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டபோது மேற்கிந்தியத் தீவுகள் அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்களை இழந்து 457 ஓட்டங்களைக் குவித்திருந்தது.

இதன் மூலம் தனது 6ஆவது டெஸ்டில் முதலாவது உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிகளை மேற்கிந்தியத் தீவுகள் பெற்றுக்கொண்டது.

போட்டியின் கடைசி நாளான நேற்று மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றிக்கு மேலும் 319 ஓட்டங்கள் தேவைப்பட்டதுடன் நியூஸிலாந்தின் வெற்றிக்கு 6 விக்கெட்கள் வீழ்த்தப்படவிருந்தது.

இந் நிலையில் இந்தப் போட்டியில் பெரும்பாலும் நியூஸிலாந்து வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஜஸ்டின் க்றீவ்ஸ் ஒன்பது மணித்தியாலங்களுக்கு மேல் துடுப்பெடுத்தாடி 388 பந்துகளை எதிர்கொண்டு 19 பவுண்ட்றிகள் அடங்கலாக ஆட்டம் இழக்காமல் 202 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிவடைவதை உறுதிசெய்தார்.

மேலும் நியூஸிலாந்து மண்ணில் நான்காவது இன்னிங்ஸில் இரட்டைச் சதம் குவித்த முதலாவது வெளிநாட்டவர் என்ற பெருமையை ஜஸ்டின் க்றீவ்ஸ் பெற்றுக்கொண்டார்.

அவர் தனது முதலாவது இரட்டைச் சதத்தைப் பூர்த்தி செய்ததும் போட்டியை முடித்துக்கொள்ள இரண்டு அணியினரும் தீர்மானித்தனர்.

போட்டியின் மூன்றாம் நாளான நேற்றைய தினம் 4 விக்கெட் இழப்புக்கு 74 ஓட்டங்களிலிருந்து ஜோடியாகத் துடுப்பெடுத்தாடிய ஷாய் ஹோப், ஜஸ்டின் க்றீவ்ஸ் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 196 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறப்பான நிலையில் இட்டனர்.

ஷாய் ஹோப் 5 மணித்தியாலங்களுக்கு மேல் துடுப்பெடுத்தாடி 234 பந்துகளை எதிர்கொண்டு 15 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 140 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். (268 – 5 விக்.)

மொத்த எண்ணிக்கை 277 ஓட்டங்களாக இருந்தபோது டெவின் இம்லக் (4) ஆட்டம் இழந்ததும் நியூஸிலாந்து வெற்றிபெற்றுவிடும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கத் தொடங்கியது.

ஆனால், ஜஸ்டின் க்றீவ்ஸ், கெமர் ரோச் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 7ஆவது விக்கெட்டில் 180 ஓட்டங்களைப் பகிர்ந்து மேற்கிந்தியத் தீவுகள் தோல்வி அடைவதைத் தவிர்த்தனர்.

இந்த இணைப்பாட்டமானது டெஸ்ட் போட்டி ஒன்றில் நான்காவது இன்னிங்ஸில் பதிவான அதிகூடிய ஓட்டங்களைக் கொண்ட இணைப்பாட்டமாகும்.

அத்துடன் கடைசி இன்னிங்ஸில் 4ஆவது விக்கெட் வீழ்ந்த பின்னர் மேற்கிந்தியத் தீவுகள் 385 ஓட்டங்களைக் குவித்தது.

இது டெஸ்ட் போட்டி ஒன்றில் நான்காவது இன்னிங்ஸில் 4ஆவது விக்கெட் வீழ்ந்த பின்னர் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்களாகும்.

இதற்கு முன்னர் இங்கிலாந்துக்கு எதிராக 1973இல் 4ஆவது விக்கெட் வீழ்ந்த பின்னர் நியூஸிலாந்தினால் பெறப்பட்ட 310 ஓட்டங்களே கடைசி இன்னிங்ஸில் பெறப்பட்ட முந்தைய சாதனையாகும்.

மேற்கிந்தியத் தீவுகளின் இரண்டாவது இன்னிங்ஸில் கெமர் ரோச் 233 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டறிகள் உட்பட 53 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

Chandrika-buddhism

மகா சங்கத்தினர் மீதான குற்றச்சாட்டுகள் பௌத்த மதத்தின் மீதான நம்பிக்கையைச் சிதைக்கின்றன: முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அவசர அறிக்கை!

June 25, 2026

இலங்கையில் பௌத்த மதகுருமார்கள் (மகா சங்கத்தினர்) சிலரின் தவறான ஒழுக்கக் கேடுகள் மற்றும் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள், பௌத்த மதத்தின் மீதும்

GSWT7ZKVVNFCNIZMQ22CLBU2GQ

ஒட்டாவா கத்திக்குத்துச் சம்பவம்: இரண்டு சிறுவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு! பொலிஸார் அதிரடி நடவடிக்கை

June 25, 2026

ஒட்டாவா (CTV News Ottawa): கடந்த மே மாதம் 30 ஆம் தேதி இரவு மூனிஸ் பே பூங்காவில் (Mooney’s

crime

கனடா: பாரி நகரில் பயங்கரம்! மனைவியைச் சுட்டுக் கொன்றுவிட்டு கணவன் தற்கொலை; பொலிஸார் அதிர்ச்சி விபரம் வெளியீடு

June 25, 2026

கனடாவின் ஒன்டாரியோ மாகாணம், பாரி (Barrie) நகரின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து கடந்த சனிக்கிழமை சடலங்களாக மீட்கப்பட்ட

world cup canada

உலகக் கிண்ணக் காற்பந்து 2026: பாதிக்கும் மேற்பட்ட ரசிகர்களின் விசா விண்ணப்பங்களை அதிரடியாக நிராகரித்தது கனடா- இலங்கை விண்ணப்பங்கள் 100 வீதம் நிராகரிப்பு

June 25, 2026

ஒட்டாவா (CTV News): கனடா, அமெரிக்கா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் கூட்டுப் பொறுப்பில் மிகப்பாரிய அளவில் நடைபெற்று வரும்

gary

கனடா: டொராண்டோவில் மிரட்டிப் பணம் பறிப்பு கும்பல்களுடன் தொடர்பு! வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு எதிராக நாடுகடத்தல் உத்தரவு 

June 25, 2026

டொராண்டோ (CP24): கனடாவின் டொராண்டோ பெருநகரப் பகுதியில் (GTA) அரங்கேறி வரும் மிரட்டிப் பணம் பறிக்கும் பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய

har3

சிறுவர் பாதுகாப்பு கட்டமைப்புகளை வலுப்படுத்துவது குறித்து பிரதமருடன் கலந்துரையாடல்

June 25, 2026

இலங்கையில் சிறுவர் பாதுகாப்பு கட்டமைப்புகளை வலுப்படுத்தல், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுத்தல் தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் யுனிசெப்

Fuel_1200px_22_10_17

உலக சந்தையில் எரிபொருள் விலை நிலையற்றே உள்ளது: எரிபொருள் மானியம் வழங்கலை இடைநிறுத்த முடியாது

June 25, 2026

எரிபொருள் மானியம் வழங்கலை இடைநிறுத்த எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை. மத்திய கிழக்கில் மோதல் நிலைமை இன்றும் முழுமையாக முடிவுக்கு கொண்டு

socia

தேசிய ஊடகக் கொள்கையை உறுதி செய்யவும் – சமூக நீதிக்கான தேசிய இயக்கம்

June 25, 2026

இலங்கை பட்டய ஊடகவியலாளர் நிறுவனம் தொடர்பிலான சட்டமூலத்தை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கு முன், ஊடக துறையுடன் தொடர்புடைய அனைத்து அமைப்புகளுடனும் கலந்துரையாடல்

images (12)

யாழில் 17 வயது இளம் தவில் வித்துவான் எடுத்த விபரீத முடிவு

June 25, 2026

யாழ்.கோப்பாய் வடக்கை சேர்ந்த 17 வயதுடைய பிரசாந் சச்சின் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த கலைஞர் நேற்றையதினம் (24)

anura karunathi

கொழும்பு துறைமுகத்தை இந்தியப் பெருங்கடலின் உலகத்தரம் வாய்ந்த முதன்மை மையமாக மாற்றுவதே அரசாங்கத்தின் முதன்மை இலக்கு

June 25, 2026

கொழும்பு துறைமுகத்தை இந்தியப் பெருங்கடலின் உலகத்தரம் வாய்ந்த முதன்மை மையமாக மாற்றுவதே அரசாங்கத்தின் முதன்மை இலக்கு என்று துறைமுகங்கள் மற்றும்

731147422_994403870139332_1768800714165529515_n

கியூபெக்: மின்னணு கண்காணிப்பு வளையத்தை உடைத்துவிட்டு நபர் தப்பியோட்டம்! கண்டால் நெருங்க வேண்டாம் என பொலிஸார் அவசர எச்சரிக்கை

June 25, 2026

கியூபெக் மாகாணத்தின் ‘சலாபெரி-டி-வல்லிபீல்ட்’ (Salaberry-de-Valleyfield) பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஸ்காட் மெக்கின்ஸ் (Scott McInnes) என்ற நபர், தனது

10

அரசு கல்லூரிகளில் 43% காலிப்பணியிடங்கள் – மாணவர் சேர்க்கை குறித்து அன்புமணி ராமதாஸ் அறிக்கை!

June 25, 2026

சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் கல்வித்தரம் குறித்த அதிர்ச்சிகரமான தகவல்களை பாமக தலைவர்