பேரிடர் பாதித்த பகுதிகளில் ட்ரோன்களைப் பறக்க விடுவதைத் தவிர்க்குமாறு இலங்கை விமானப்படை பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
கட்டுப்பாடற்ற செயல்பாடு முக்கியமான மீட்பு விமானங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று எச்சரித்துள்ளது.
அதன்படி, அனைத்து ட்ரோன்கள் புறப்படும் மற்றும் தரையிறங்கும் நிகழ்வுகளையும் 011-2343970, 011-2343971 அல்லது 115 ஹொட்லைன் மூலம் முன்கூட்டியே தெரிவிக்குமாறு விமானப்படை கேட்டுக் கொண்டுள்ளது.