75 புதிய அரச எரிபொருள் நிரப்பு நிலையங்களை நிறுவ நடவடிக்கை

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் 75 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

2026 இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 28 பில்லியன் ரூபாய் வருமானத்தைப் பெற்றுள்ளது.

அவர்களுக்கு 30 பில்லியன் ரூபாய் வருமான இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இதுபோன்ற நெருக்கடியான தருணங்களில் நிறுவனத்தின் இலாபத்தில் ஒரு பங்கை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதே நிலைப்பாடாக இருக்க வேண்டும்.

ஆனால், தனியார் நிறுவனங்கள் தங்களது வருமான நோக்கத்தை மட்டுமே கொண்டு எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்துகின்றன. தனியார் களஞ்சியசாலைகளில் எரிபொருள் இருப்பினும் அதனை விநியோகிக்காமல் உள்ளனர்.

இது தவறான செயலாகும். இதுபோன்ற செயற்பாட்டையே ஏனைய தனியார் எரிவாயு நிறுவனங்களும் செய்கின்றன.

அரச நிறுவனத்தினால் வழங்க முடிகின்ற போது, ஏன் தனியார் நிறுவனங்களால் அந்த விலைக்கு வழங்க முடியவில்லை?

போட்டித்தன்மையின் அடிப்படையில் எரிபொருளை விநியோகிப்பதற்காகவே தனியார் துறையினருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால், தற்போதைய செயற்பாடுகளால் அவர்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பின் பயன் என்னவென்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே, நாடளாவிய ரீதியில் 75 எரிபொருள் நிரப்பு நிலையங்களை நிறுவ நடவடிக்கை எடுத்துள்ளோம்.

தனியார் நிறுவனங்களின் எரிபொருள் நிரப்பு நிலையங்களை மட்டுமே கொண்ட நகரங்களும் நாட்டில் உள்ளன. அந்த நிறுவனங்கள் எதிர்காலத்தில் எரிபொருளை விநியோகிக்க முடியாது எனத் தெரிவித்தால், அங்குள்ளவர்களின் நிலைமை என்னவாகும்? இந்தநிலைமையின் பாரதூரமான தன்மையை அறிந்தே நாம் இவ்வாறான ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலை வந்தது.

எனவே, இவ்வாறான காரணிகளின் அடிப்படையிலேயே இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஊடாக 75 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

sajith 5

பௌத்தமதகுருவின் காவியுடையை சாதாரண மக்கள் களைவதற்கு உரிமையில்லை – இது கண்டிக்கப்படவேண்டிய விடயம் – சஜித்

October 13, 2026

இலங்கையின் அரசமைப்பில் பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ள நாட்டில் சமீபத்தில் இடம்பெற்ற சில விடயங்கள் கவலையளிக்கின்றன என எதிர்கட்சி தலைவர் சஜித்

chem_1

செம்மணி பற்றி வினோத உடைப் போட்டி; சிறுவனின் பெற்றோருக்கு விசாரணை!

October 13, 2026

ம்மணியில் இடம்பெற்ற அவலத்தை சித்தரித்து வினோத உடைப் போட்டியில் அதனைப் பிரதிபலித்த மாணவனின் பெற்றோரை மருதங்கேணிப் பொலிஸார் இன்று விசாரணைக்கு

toronto mayor election

நகரசபைத் தேர்தலுக்கு முன்னதாக மலிவு விலை வாழ்க்கை மற்றும் வீடமைப்பு நடவடிக்கைகளை டொரண்டோ வாக்காளர்கள் விரும்புகின்றனர்

October 13, 2026

டொரண்டோவின் முன்னணி மேயர் வேட்பாளர்கள் இந்த மாத நகரசபைத் தேர்தலுக்கு முன்னதாகத் தங்களது பார்வையையும் திட்டங்களையும் முன்வைத்து நகரம் முழுவதும்

Gnanasara-Thera

ஞானசார தேரர் கடும் மன உளைச்சலில்- நஞ்சருந்தி உயிர்துறக்கப்போவதாக தெரிவித்தார்- பௌத்தமதகுரு

October 13, 2026

பொதுபல சேனாவின் ஞானசார தேரர் கடும் மன அழுத்தத்தில் உள்ளார் விசம் அருந்தி தற்கொலை செய்து கொள்வது குறித்து சிந்திக்கின்றார்

Sakara

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் – சாகர காரியவசம்!

October 13, 2026

நாட்டின் தேசியம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஞானசார தேரர் பலவிடயங்களை வெளிப்படுத்தினார். சிங்கள பௌத்த இனத்தை பாதுகாப்பதற்காக தவறுகளை

mini

அமைச்சரைச் சந்திக்க தமிழ் பெண்கள் சங்கம் கோரிக்கை

October 13, 2026

சிறுவர்கள் மற்றும் யுவதிகளின் கலை, கலாசாரத் திறனை மேம்படுத்தும் நோக்கில் நிறுவுவதற்கு உத்தேசித்துள்ள நவீனமயமாக்கப்பட்ட கலாலயா கலாசார மற்றும் இளைஞர்

zer

சர்வதேச இலத்திரனியல்-கழிவு தினம்; 2050 இல் பூஜ்ஜிய கார்பன் இலக்கு!

October 13, 2026

2050 ஆம் ஆண்டளவில் ‘பூஜ்ஜிய கார்பன்’ (Net Zero) இலக்கை அடைவதே அரசாங்கத்தின் முதன்மையான எதிர்பார்ப்பாகும் என சுற்றாடல் பிரதி

fue

75 புதிய அரச எரிபொருள் நிரப்பு நிலையங்களை நிறுவ நடவடிக்கை

October 13, 2026

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் 75 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 2026

arju

அர்ச்சுனாவின் பதவியில் சிக்கல்: விரைவில் விசாரணை!

October 13, 2026

டாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை மேலதிக விசாரணைக்காக எதிர்வரும்

Navi Pillay York University (6) harini

நவி பிள்ளை: நீதியின் தூதர் மற்றும் தமிழ் மக்களுக்கு ஒரு உத்வேகம் ஹரிணி சிவலிங்கம்

October 12, 2026

ஹரிணி சிவலிங்கம்-கனடா சட்டத்தரணி இந்த வாரம், உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றிற்கான தளராத அர்ப்பணிப்பால் தனது அசாதாரணமான வாழ்க்கைப்

Chamara_Sampath_1200x675px_06_08_25

சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டது ஏன்?

October 12, 2026

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டமைக்கான காரணங்களை இலங்கை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது. இரத்தினக்கல் வியாபாரியொருவரிடம்

anura may 26

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் – எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு

October 12, 2026

சிறையிலடைக்கப்படும் பௌத்தமதகுருமாரின் காவியுடை தொடர்பில் பௌத்தமத பீடாதிபதிகள் முன்மொழிந்த பரிந்துரைகளை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவித்துள்ளது அறிக்கையொன்றில்