5 பேரின் உயிரைப் பறித்த தீ விபத்து

ஹோமாகம கட்டுவான தொழிற்பேட்டையில் தீப்பற்றிய தொழிற்சாலை, 2024 ஆம் ஆண்டிற்குப் பிறகு சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமத்தைப் புதுப்பிக்கவில்லை எனவும், அவசரகால சூழ்நிலையை எதிர்கொள்வதற்கான திட்டத்தைக் கூட தயாரிக்கவில்லை எனவும் மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் தொழிற்சாலை, 2024 ஆம் ஆண்டிற்குப் பிறகு தனது சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமத்தைப் புதுப்பிக்கவில்லை என்பதை மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை உறுதிப்படுத்தியுள்ளது.

தொழிற்சாலையின் உற்பத்தி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் PVC உள்ளிட்ட இரசாயனப் பொருட்கள் தீப்பற்றும்போது மனித உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் இரசாயனக் சேர்மங்களை உருவாக்கக்கூடும் என்பதால், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமம் வழங்கப்படாததற்கு அதுவும் ஒரு காரணமாக இருந்துள்ளது எனக் குறிப்பிடப்படுகிறது.

அத்துடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமத்தைப் பெறுவதற்கு பூர்த்தி செய்யப்பட வேண்டிய அளவுகோல்களான சப்தம் மற்றும் காற்றின் தரம் குறித்த பகுப்பாய்வு அறிக்கைகள் மற்றும் கழிவு அகற்றும் அறிக்கை ஆகியவற்றை அந்தத் தொழிற்சாலை மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையிடம் சமர்ப்பிக்கவில்லை என அதன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவசரகால சூழ்நிலையை எதிர்கொள்வதற்குத் தேவையான திட்டத்தையும் தொழிற்சாலை தயாரித்திருக்கவில்லை என மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

தீ விபத்து ஏற்பட்ட போது தொழிற்சாலைக்குள் 80 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் இருப்பதாக வெளிச்சத்திற்கு வந்த தொழிற்சாலையின் மேல் தளத்திற்கு, பதில் நீதவான் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் பூம் டிரக் வாகனம் மூலம் சென்றடைந்தனர்.

இதனிடையே, கட்டுவான தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தொழிலாளர் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அந்த விசாரணையின் போது, தீ விபத்துக்கான காரணங்கள், தொழிற்சாலையின் தீ பாதுகாப்பு மற்றும் தொழில்சார் பாதுகாப்பு தரநிலைகள், ஊழியர்களின் பாதுகாப்பிற்கு தேவையான வசதிகள் மற்றும் அவசரகால மீட்பு முறைகள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளது.

images (19)

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ்தெரிவு!

July 28, 2026

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ் திருவுளச்சீட்டு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி நகர சபையின் உப

5

மேகதாது விவகாரம்: பிரதமர் மோடி உடனடியாக தலையிட வேண்டும் – முதலமைச்சர் விஜய் வலியுறுத்தல்!

July 28, 2026

சென்னை: காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அளித்த அதிரடி

photo-collage.png (4)

செம்மணி மனித புதைகுழி பேரவலத்திற்கு யார் காரணமென்பது விசாரணைகளின் இறுதியிலேயே தெரிய வரும் – நீதி அமைச்சர்

July 28, 2026

செம்மணி மனித புதைக்குழி விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்படும் என நீதி மற்றும்

s

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

July 28, 2026

இலவசக் கல்வியைப் பாதுகாக்கவும், தனியார் பட்டப்படிப்பு மையங்களுக்கு எதிராகவும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் துணை மருத்துவப் பட்டதாரிகள்

a35

கிளிநொச்சி மாவட்ட A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

July 28, 2026

கிளிநொச்சி மாவட்டத்தில் A35 பரந்தன் – முல்லைத்தீவு பிரதான வீதியில் 12 ஆவது கிலோமீற்றர் தூரத்தில் உள்ள முதலாவது பாலம்

1688202098-EARTHQUAKE-6

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

July 28, 2026

ஜப்பானின் கியூஷூ (Kyushu) தீவில் அமைந்துள்ள குமாமோட்டோ (Kumamoto) பகுதியை மையமாகக் கொண்டு இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.

Nali

நீதிபதிகளின் ஓய்வு; சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை – அமைச்சரவை பேச்சாளர்

July 28, 2026

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது தொடர்பான தீர்மானம் குறித்து சர்வஜன வாக்கெடுப்பிற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என அமைச்சரவை ஊடகப்

Crick

கிரிக்கெட்டின் புதிய அரசியலமைப்பு வரைவு கையளிப்பு!

July 28, 2026

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் புதிய அரசியலமைப்பின் வரைவு, விளையாட்டுத்துறை அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழு தெரிவித்துள்ளது. புதிய

cyb

கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட சீன பிரஜையின் மரணம் தொடர்பில் மேலும் பல தகவல்கள்

July 28, 2026

துறைமுக நகரத்தில் (Port City) கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட சீன பிரஜை, கணினி சார்ந்த மோசடிகளில் ஈடுபட்டு சட்டவிரோதமாகப் பணம் ஈட்டிய

exc

மதுவரித் திணைக்களத்தின் தீர்மானத்திற்கு நிறுவனங்கள் எதிர்ப்பு

July 28, 2026

மதுபான உற்பத்தி மற்றும் சேமிப்பின் போது ஏற்படும் மதுசார வீணடிப்புச் சதவீதத்தை 1.5% இல் இருந்து 0.1% ஆகக் குறைப்பதற்குப்

kapil-sibal-saurav-das-pti

நீட் போராட்ட மாணவர்களின் சட்ட உதவிக்காக ரூ.1 கோடி நிதியுதவி அளித்தார் கபில் சிபல்!

July 28, 2026

புதுடெல்லி: தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராகத் தொடர்ந்து அறவழியில் போராட்டம் நடத்திவிட்டு,

MediaFile

எம்.பிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை!

July 28, 2026

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட