அமெரிக்கா முன்வைத்த 48 மணிநேர போர் நிறுத்த (Ceasefire) முன்மொழிவை ஈரான் நிராகரித்துள்ளதாக ஈரானின் அரை-அதிகாரப்பூர்வ ஃபார்ஸ் (Fars) செய்தி நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
இந்தப் போர் நிறுத்த முன்மொழிவு கடந்த புதன்கிழமை அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டது.
பெயர் குறிப்பிடப்படாத மற்றொரு நாட்டின் ஊடாக இந்தத் தூது ஈரானுக்கு அனுப்பப்பட்டதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானியத் தரப்பு இந்தத் தற்காலிகப் போர் நிறுத்தத்தை ஏற்க மறுத்துவிட்டதாகப் பெயரிடப்படாத அந்தத் தகவல்தொடர்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்தத் தற்காலிகப் போர் நிறுத்த முயற்சி தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.