சென்னை,
தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு (ஏப். 21 – 23) டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, நேற்றைய முன்தினம் தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதியது.
பொதுவாக தமிழகத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.140 கோடி முதல் ரூ.150 கோடி வரை மது விற்பனை நடைபெறும். ஆனால், தொடர்ந்து 3 நாட்கள் கடைகள் மூடப்படும் என்பதால், மதுப்பிரியர்கள் முன்கூட்டியே பாட்டில்களை வாங்கிச் சேமிக்கத் தொடங்கினர். இதன் விளைவாக, நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் சுமார் ரூ.400 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது வழக்கமான விற்பனையை விட இரண்டு மடங்குக்கும் அதிகமாகும்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது இதே போன்ற விடுமுறை காலத்தில் ரூ.320 கோடிக்கு மது விற்பனையானது. தற்போது அதை முறியடித்து கூடுதலாக ரூ.80 கோடி வசூலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்ய, வாக்குப்பதிவு நாளான நாளையும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4-ம் தேதியும் மதுக்கடைகள் கட்டாயம் மூடப்பட்டிருக்கும் எனத் தேர்தல் ஆணையம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
#Tasmac #LiquorSales #TNElection2026 #TasmacHoliday #TamilNaduElection #DrinkResponsibly #ElectionCode #RevenueReport #LiquorBan #TamilPolitics #ElectionUpdate #April23 #DryDay #TasmacRecord #TamilNaduNews #Election2026 #BreakingNews #Madhu #PublicAlert #TasmacNews