போக்குவரத்துப் பொலிஸாரை மோதிவிட்டுப் தப்ப முயன்ற சிறுவர்கள் கைது

ம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பொலிஸாரை மோட்டார் சைக்கிளால் மோதிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற இரு சிறுவர்களை எதிர்வரும் நவம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு அருகிலுள்ள பிரதான வீதியில் செவ்வாய்க்கிழமை (03) இரவு சுமார் 9 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீதிப் போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் நெடுஞ்சாலைப் போக்குவரத்துப் பொலிஸ் […]
முள்ளியவளையில் மாவீரர் நினைவேந்தல் ஏற்பாடுகள்!

தாயகத்தின் விடுதலைக்காகத் தங்களது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் தேசிய மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள், வழக்கம்போல இவ்வாண்டும் நவம்பர் 27ஆம் திகதி தமிழர் தாயகப் பகுதிகள் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்களால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளன. இதனையொட்டி, தாயகப் பகுதிகளிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களைச் துப்புரவு செய்யும் சிரமதானப் பணிகள் தற்பொழுது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் துயிலும் இல்லப் பணிக்குழுவினர், மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து […]
“ஆதாரம் இருக்கு… அதனால் தான் கைது!” – அன்பில் மகேஸ் விவகாரத்தில் அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி!

மதுரை: அன்பில் மகேஸ் வீட்டில் வைத்துப் பணம் பெற்றதற்கான பலத்த ஆதாரங்கள் இருப்பதால்தான் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் மாபெரும் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார். ஆதாரங்கள் உள்ளன: மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள புளியங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தைத் திறந்து வைப்பதற்காக வருகை தந்த அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “அன்பில் மகேஸ் விவகாரத்தில் பல்வேறு ஆதாரங்கள் உள்ளன. கல்வி நிறுவனங்களிடமிருந்து ஆதாரப்பூர்வமாகப் […]
பிரேஸிலில் 51 சிவப்பு அட்டைகள் காட்டப்பட்டுச் சாதனை!

பிரேஸிலில் 20 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியொன்றில் உலக சாதனையாக 51 சிவப்பு அட்டைகள் காட்டப் பெற்றுள்ளது. மினாஸ் ஜெரைஸ் 20 வயதுக்குட்பட்ட சம்பியன்ஷிப் தொடரின் உபர்லன்டியா, மமோரேக்கிடையிலான முதலாவது சுற்று அரையிறுதிப் போட்டியிலேயே 43 வீரர்களுக்கும் பயிற்சியாளர் குழாமின் உறுப்பினர்கள் எட்டுப் பேருக்கும் சிவப்பு அட்டை காட்டப் பெற்றுள்ளது. மமோரேயின் டவி, தனது அணி 3-1 என இரண்டாம் பாதியில் முன்னிலை பெற்றதைத் தொடர்ந்து எதிரணி மாற்றுவீரர்களை சீண்டியதைத் தொடர்ந்தே மோதல் வெடித்துள்ளதாக மத்தியஸ்தரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. டவியுடன் […]
முதலாமிடத்துக்கு முன்னேறிய ஸ்டார்க்

ர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலாமிடத்துக்கு அவுஸ்திரேலியாவின் மிற்செல் ஸ்டார்க் முன்னேறியுள்ளார். தென்னாபிரிக்காவுக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றியமையைத் தொடர்ந்தே இரண்டாமிடத்திலிருந்து முதலாமிடத்துக்கு ஸ்டார்க் முன்னேறியுள்ளார். இப்போட்டியில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய தென்னாபிரிக்காவின் சைமன் ஹாமர், 16ஆம் இடத்திலிருந்து 9 இடங்கள் முன்னேறி ஏழாமிடத்தையடைந்துள்ளார். முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு, மிற்செல் ஸ்டார்க், 2. மார்கோ ஜன்சன், 3. மற் ஹென்றி, 4. ஒலி றொபின்சன், 5. ஜஸ்பிரிட் பும்ரா, […]
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற மக்ஸ்வெல்

ர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அவுஸ்திரேலியாவின் கிளென் மக்ஸ்வெல் ஓய்வு பெற்றுள்ளார். இது தவிர முதற்தரப் போட்டிகள், ஏ போட்டிகளிலிருந்தும் மக்ஸ்வெல் ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் 2027-28 பருவகாலம் வரையில் தனது ஒப்பந்தத்தை நீடித்த நிலையில் மெல்பேண் ஸ்டார்ஸுக்காக பிக் பாஷ் லீக்கில் விளையாடவுள்ளார். ஏற்கெனவே கடந்தாண்டு ஜூனில் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து மக்ஸ்வெல் ஓய்வு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இரண்டு தடவைகள் சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் உலகக் கிண்ணத்தை வென்ற மக்ஸ்வெல், ஒரு தடவை இருபதுக்கு – 20 […]
ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர்; இந்திய – பாகிஸ்தான் மோதலுக்கு 8.4 மில்லியன் கோரிக்கைகள்

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில், இந்தியா – பாகிஸ்தான் குழுநிலைப் போட்டிக்கான நுழைவுச்சீட்டு விண்ணப்பங்கள் ஏறத்தாழ 8.4 மில்லியன் கிடைக்கப் பெற்றுள்ளதாக ஒழுங்கமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். தென்னாபிரிக்காவின் ஜொஹன்னஸ்பேர்க்கின் வன்டரேர்ஸின் மைதானத்தில் 2027 ஒக்டோபர் 10ஆம் திகதி இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ள நிலையில், மைதானத்தில் 34,000 ஆசனங்களே காணப்படுகின்றன. தொடரின் இறுதிப் போட்டியும் இதே மைதானத்திலேயே நடைபெறவுள்ள நிலையில் ஏறத்தாழ 8 மில்லியன் நுழைவுச்சீட்டு விண்ணப்பங்கள் அதற்கு கிடைக்கப் பெற்றுள்ளன. தென்னாபிரிக்கா தவிர சிம்பாப்வே, […]
சர்வதேச போட்டிகளில் இருந்து ரொனால்டோ ஓய்வு!

சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக போர்த்துக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவித்துள்ளார். தனது இந்த ஓய்வு முடிவை வீடியோ ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். “போர்த்துக்கல் மக்களுக்கு. நமது தேசிய அணியின் 7-ஆம் எண் ஜெர்சியைக் கழற்றி வைக்கும் நேரம் வந்துவிட்டது. அது பிரத்தியேகமாக என்னுடையது என்று நான் ஒருபோதும் உணர்ந்ததில்லை, ஆனால் 23 ஆண்டுகளாக அதை அணியும் பாக்கியமும் பொறுப்பும் எனக்கு இருந்தது.” என வீடியோவில் உணர்ச்சிபொங்க பேசியுள்ளார். 41 வயதான ரொனால்டோ, போர்த்துக்கல் […]
ஜோர்தானில் இலங்கை தூதரகம் முன்பாக கூரிய ஆயுத தாக்குதல்

ஜோர்தானில் வாழும் இலங்கையர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக ஜோர்தானுக்கான இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது. அம்மான் நகரில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் முன்னால் கூரிய ஆயுத தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஜோர்தானுக்கான இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. எவ்வாறாயினும் தூதரக ஊழியர்கள் மற்றும் ஜோர்தானில் வாழும் இலங்கையர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக ஜோர்தானுக்கான இலங்கைத் தூதரகம் […]
இலங்கை விமான படைக்கான மேலதிக ஒதுக்கம் நிறைவேற்றம்
இலங்கை விமானப் படைக்கு 4,261 மில்லியன் ரூபாயை வழங்குவதற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு பாராளுமன்றில்நேற்று(05) நடைபெற்ற விவாதத்தின் பின்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரச நிதியத்தில் இருந்தோ அல்லது அரசாங்கத்திற்குச் சொந்தமான வேறு ஏதேனும் நிதியிலிருந்தோ அல்லது அரசாங்கத்தினால் பெறப்படும் ஏதேனும் கடன் தொகையிலிருந்தோ இந்தத் தொகையை இலங்கை விமானப் படைக்கு வழங்குவதற்காக இந்த மேலதிக மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மாறிவரும் செயல்பாட்டுச் சூழல், வங்காள விரிகுடா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் […]