அறக்கட்டளைகள் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம்

அறக்கட்டளைகள் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு திருத்தங்கள் ஏதுமின்றி நிறைவேற்றப்பட்டது. இதற்கமைய, 1917 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க அறக்கட்டளைகள் கட்டளைச் சட்டத்திலேயே இவ்வாறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. குறித்த சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பும் திருத்தங்கள் ஏதுமின்றி நிறைவேற்றப்பட்டது. பணச்சலவை மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலைத் தடுப்பது தொடர்பான நிதி நடவடிக்கை பணிக்குழுவினால் (FATF) முன்வைக்கப்பட்ட அவதானிப்புகளின் அடிப்படையில், இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவின் யோசனைகளுக்கு அமைவாகவே இச்சட்டமூலத்தில் திருத்தங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
குற்றத் தடுப்புச் சட்டமூலத்தில் தடுப்பு காவல் உத்தரவு காலத்தை திருத்தம் செய்ய ஜனாதிபதி தயார்?

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சந்தேகநபர்களைத் தடுத்து வைக்கும் காலத்தை 72 மணித்தியாலத்திலிருந்து 48 மணித்தியாலமாகக் குறைப்பதற்குத் தாம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். நாடே ஒன்றாக தேசிய இயக்கத்தின் ஆன்மிக மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். அத்துடன், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களை அடையாளம் காண்பதற்காக ஏனைய நாடுகளில் பயன்படுத்தப்படும் ‘பச்சைக் குத்துதல்’ முறையானது எமது நாட்டிற்குத் தேவையில்லை என்றால், அந்த ஏற்பாட்டைச் சட்டத்திலிருந்து நீக்கிக் கொள்ளவும் தாம் […]