“அண்ணன் சீர் திட்டத்துக்கு ஆதார் கட்டாயம்!” – ஆதார் இல்லாத பெண்கள் என்ன செய்ய வேண்டும்? தமிழக அரசு விளக்கம்!

சென்னை: தமிழ்நாடு அரசின் அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதியுடைய பெண்கள், ஆதார் எண்ணைச் சமர்ப்பிப்பது அல்லது ஆதார் அங்கீகாரத்தைப் பெறுவது கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆதார் இல்லாத பெண்களுக்கான மாற்று ஏற்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. 8 கிராம் தங்கம், பட்டுப் புடவை: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை வெளியிட்டுள்ள அரசாணையின்படி, அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் தகுதிகளைப் பூர்த்தி செய்யும் பெண்களுக்கு, அவர்களது திருமணத்தின்போது 22 காரட் தங்க நாணயம் […]

“கட்சியா இல்லை நார்கோஸ் கூடாரமா?” – தவெக மீது உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு!

சென்னை: கட்சியா இல்லை நார்கோஸ் கூடாரமா என்று கேட்கும் அளவுக்குத் தவெகவின் போதைப்பொருள் நெட்வொர்க் அட்டூழியம் அதிகமாகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில் குற்றம் சாட்டியுள்ளார். 135 கிலோ போதைப்பொருள்: வரலாற்றில் இல்லாத அளவுக்கு 135 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்ததாக நாகை தவெக நிர்வாகி பூபாலன் கைது செய்யப்பட்டார். அது தொடர்பாகச் செய்தி வெளியிடும் செய்தியாளர்களுக்குத் தவெகவின் நாகை நகரச் செயலாளர் பால்ராஜ் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக உதயநிதி […]

“மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு புதிய திட்டங்கள்!” – ரூ.1,439 கோடியில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம்; முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

சென்னை: அண்மையில் இடைத்தேர்தல் நடந்து முடிந்த மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்குப் புதிய திட்டங்களை முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். இந்த இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட்ட சத்தியபாமா, மரகதம் குமரவேல் ஆகியோர் வெற்றி பெற்றனர். மதுராந்தகம் தொகுதி: அத்திமனம் கிராமத்தில் புக்கத்துறை மடுவின் குறுக்கே சுமார் ரூ.5 கோடியில் தடுப்பணை அமைக்கப்படும். செம்பூண்டி ஏரியின் மதகுகள் சுமார் ரூ.4.50 கோடியில் சீரமைக்கப்படும். தலா ரூ.30 லட்சத்தில் 6 நெல் கொள்முதல் நிலையங்களும், ஆத்தூரில் சுமார் ரூ.20 கோடியில் […]

“வெற்றித் தமிழகத்தைப் படைத்திடுவோம்!” – முதலமைச்சர் விஜய் ஆயுத பூஜை வாழ்த்து!

சென்னை: ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். உழைப்பைப் போற்றும் ஆயுத பூஜை: நம் வாழ்வின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்கும் கருவிகள், வாகனங்கள் மற்றும் நாம் செய்யும் தொழில் என அனைத்தையும் இறைவனாகப் போற்றி, உழைப்பின் உயர்வையும், தொழிலின் மேன்மையையும் போற்றும் நன்னாள் ஆயுத பூஜை என்று முதலமைச்சர் விஜய் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். உழைப்பையும் தொழிலையும் இறைவனாகப் போற்றும் இந்த […]

“50 ஆண்டுகள் ஆனாலும் மதுரையில் திமுக வெற்றி பெறாது!” – வைரல் ஆடியோ குறித்து தவெக எம்எல்ஏ முஸ்தபா விளக்கம்!

மதுரை: தவெகவில் கட்சிப் பதவிகளைப் பெற பணம் கேட்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் இரண்டு ஆடியோக்கள் மதுரை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மதுரை மத்திய தொகுதி தவெக எம்எல்ஏ முஸ்தபா இதற்கு மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார். வைரலாகும் இரண்டு ஆடியோக்கள்: தவெகவில் மதுரை மத்திய மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட, பகுதி மற்றும் வட்ட நிர்வாகிகள் நியமனத்துக்கான பணிகள் விரைவில் நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், எம்எல்ஏ முஸ்தபாவின் உதவியாளர் […]

“யாரையும் குறை சொல்வதற்கான நேரம் இதுவல்ல; மக்கள் பணி செய்வதற்கான நேரம்!” – அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி!

சென்னை: இது யாரையும் குறை சொல்வதற்கான நேரம் அல்ல, மக்கள் பணி செய்வதற்கான நேரம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். சென்னையில் மழைநீர் தேக்கம் குறித்த கேள்விகளுக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார். சன்னரக அரிசி கிலோ ரூ.30: தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவுக் கடைகள் மூலமாகச் சன்னரக அரிசி கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் உள்ள கூட்டுறவுப் பண்டகச் சாலையில் அமைச்சர் ராஜ்மோகன் விற்பனையைத் […]

“திருத்தணியில் கிளிங்கர் அரவை ஆலை திட்டத்தை அரசு உடனே கைவிட வேண்டும்!” – சீமான் எச்சரிக்கை!

சென்னை: திருத்தணியில் சுற்றுச்சூழலைச் சீரழிக்கும் கிளிங்கர் அரவை ஆலை அமைக்கும் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தளப் பதிவில் வலியுறுத்தியுள்ளார். இல்லையென்றால் மாபெரும் மக்கள் திரள் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் விரிவான பதிவை வெளியிட்டுள்ளார். ரூ.838 கோடியில் கிளிங்கர் அரவை ஆலை: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், கார்த்திகேயபுரம் ஊராட்சியில் ஏறத்தாழ 838 கோடி ரூபாய் முதலீட்டில், […]

செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு: மரண தண்டனைக் கைதி சோமரத்னவிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி!

உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இன்றைய வழக்கு விசாரணையின் முக்கிய அம்சங்கள்: இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு: […]

டக்ளஸ் தேவானந்தாவின் யாழ் அலுவலகத்தில் பல மணி நேரம் சல்லடை போட்டுத் தேடிய CID

யாழ்ப்பாணம், 273, ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலத்திலும் அதன் வளாகத்திலும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் பல மணி நேரம் தீவிர தேடுதல் நடவடிக்கையில் இன்று(19.10.2026) ஈடுபட்டனர்.குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்குக் கிடைத்ததாகக் கூறப்படும் தகவலின் அடிப்படையில், யாழ். நீதிமன்றத்தில் தேடுதல் ஆணையைப் பெற்று இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக குற்றப் புலனாய்வு துறையினர் தெரிவித்தனர்.இதன்போது, 273, ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகம் மற்றும் வளாகம் முழுவதும் அதிகாரிகளால் விரிவாகச் சல்லடைபோட்டு தேடப்பட்டது.பரபரப்பை […]

ஆள்கூறுகளால் உருவான காணிச் சிக்கல்களுக்கு விரைவில் தீர்வு!

கிளிநொச்சி மாவட்டத்தில் வன வளங்கள் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஆளுகைக்கு உட்பட்ட காணிகளை விடுவிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று, சுற்றாடல் அமைச்சர் தம்மிக பட்டபெந்தி தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நளாயினி இன்பராஜ், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) அஜிதா பிரதீபன், பிரதேச செயலாளர்கள், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர். கலந்துரையாடலின் பின்னர் […]