சென்னை:
கட்சியா இல்லை நார்கோஸ் கூடாரமா என்று கேட்கும் அளவுக்குத் தவெகவின் போதைப்பொருள் நெட்வொர்க் அட்டூழியம் அதிகமாகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில் குற்றம் சாட்டியுள்ளார்.
135 கிலோ போதைப்பொருள்:
வரலாற்றில் இல்லாத அளவுக்கு 135 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்ததாக நாகை தவெக நிர்வாகி பூபாலன் கைது செய்யப்பட்டார். அது தொடர்பாகச் செய்தி வெளியிடும் செய்தியாளர்களுக்குத் தவெகவின் நாகை நகரச் செயலாளர் பால்ராஜ் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
வக்காலத்து வாங்குவது ஏன்?:
பூபாலன் தவெகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், கட்சிப் பொறுப்பில் உள்ள இன்னொரு நிர்வாகி, போதைப்பொருள் கடத்திய நபருக்கு வக்காலத்து வாங்குவதும், பத்திரிகையாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுப்பதும் ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கட்சியா இல்லை நார்கோஸ் கூடாரமா என்று கேட்கும் அளவுக்குத் தவெகவின் போதைப்பொருள் நெட்வொர்க் அட்டூழியம் அதிகமாகிக் கொண்டே போகிறது என்றும் அவர் சாடியுள்ளார்.
ரீல் அல்ல, ரியலுக்கு வாருங்கள்:
இந்த டம்மி முதலமைச்சரின் ஆட்சியில், அவரது கட்சியிலேயே போதைப்பொருள் கும்பல்களும், கார்டெல் மாஃபியாவும் சுதந்திரமாகச் சுற்றி வருகிறார்கள் என்று உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். ரீல் எடுப்பதிலேயே காலத்தைக் கழிக்காமல், கொஞ்சம் நிஜத்துக்கு வந்து, போதைப்பொருள் நடமாட்டத்தையும், அதைக் கடத்தும் தவெகவினரையும் முதலமைச்சர் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். நாகையில் நடந்த இந்தப் போதைப்பொருள் கைது விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் ஆளும் தவெக அரசு மீது நேரடியாகக் குற்றம் சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. செய்தியாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டும் கவனம் பெற்றுள்ளது.
#Udhayanidhi #DMK #TVK #Narcos #TNPolitics #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive