பொதுஜனபெரமுனவின் முன்னாள் மாநகரசபை உறுப்பினருக்கு போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்பு- விசாரணையில் தகவல்

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் கொழும்பு மாநகரசபை முன்னாள் உறுப்பினர் மகிந்தஹகந்தகமவிற்கு துபாய் உட்பட வெளிநாடுகளில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பிருந்தமை அவர் கைதுசெய்யப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. ஐஸ்போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளார் என்ற தகவலை தொடர்ந்து செவ்வாய்கிழமை மகிந்த ஹகந்தகம கைதுசெய்யப்பட்டார்.கைதுசெய்யப்பட்டவேளை அவரிடமிருந்து சிறியளவு போதைப்பொருளை மீட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து இடம்பெற்ற விசாரணைகளின் போது ஹகந்தகம துபாயில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புடைய விருந்துபசார நிகழ்வில் கலந்துகொண்டதை காண்பிக்கும் வீடியோ கைப்பற்றப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வீடியோவில் […]
சுரேஷ் சலே வைத்தியசாலையிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் குற்றப்புலனாய்வுத் திணைக்களக் காவலுக்கு மாற்றப்படலாம் – நீதிமன்றத்திற்குச் சட்டமா அதிபர் அறிவிப்பு

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, மருத்துவக் குழுவொன்றின் பரிசீலனையின் பின்னர் வைத்தியசாலைப் பராமரிப்பிலிருந்து விடுவிக்கப்படுவதற்குப் பொருத்தமான உடல்நிலையில் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளதால், அவரை இலங்கையின் தேசிய வைத்தியசாலையிலிருந்து விடுவிக்க முடியும் எனச் சட்டமா அதிபர் இன்று (06) கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். கோட்டை நீதவான் வசந்த அமரசிங்க முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இக்கருத்துத் தெரிவிக்கப்பட்டது. சந்தேகநபரான சுரேஷ் சலே வைத்தியசாலையிலிருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று மாலை மீண்டும் […]
யாழில் 32 வயதுப் பெண், 23 வயது இளைஞரால் வெட்டிக் *கொலை – தாய் மீதும் தாக்குதல் – இறுதியில் புகையிரதத்தில் பாய்ந்து உயிரை*மாய்த்தார்!

யாழ்ப்பாணம், கோவில் வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இளைஞரொருவர், ஒரு பிள்ளையின் தாயான இளம் பெண்ணைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிப் படு*கொலை செய்துள்ளதுடன், அவரது தாயாரையும் படுகாயப்படுத்திவிட்டு, புகையிரதம் முன் பாய்ந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். திங்கட்கிழமை இரவு கோவில் வீதியிலுள்ள குறித்த வீட்டிற்குள் நுழைந்த இளைஞன், அங்கு இருந்த பெண் மீது சரமாரியாகக் கத்தி*வெட்டுத் தாக்குதலை நடத்தியதுடன், அவரது தலைமுடியையும் அறுத்துத் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அப்பெண் சம்பவ இடத்திலேயே […]
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மீண்டும் மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கும் – ஜிஎஸ்பி வரிசலுகைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் – சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்

கடுமையான பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களை தவறாக பயன்படுத்தி மிக மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட வரலாறு இலங்கைக்கு உண்டு என தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான இயக்குநர் எலைன் பியர்சன் புதிய சட்டமூலம் அந்த தவறுகள் மீண்டும் இடம்பெறுவதை தடுப்பதற்கு பெருமளவிற்கு உதவப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார் இலங்கையின் அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் புதிய சட்டமூலம் குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது இலங்கையின் அதிகாரிகள் நீண்டகாலமாக சிறுபான்மையினரை துன்புறுத்துவதற்கும் , மனித உரிமை மீறல்களால் […]
பட்டலந்த வதை முகாம் குறித்து புதிய விசாரணைகள் – சட்டமா அதிபர்

பட்டலந்த வதைமுகாமுடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்படும் படுகொலைகள் குறித்து புதிய விசாரணைகளை நடத்தவேண்டும் என சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளார். சட்டமாஅதிபர் இது தொடர்பான தனது அவதானிப்புகளை ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பிவைத்துள்ளார் என சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை மாத்திரம் அடிப்படையாகவைத்து சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்பதே சட்டமா அதிபரின் அபிப்பிராயம். சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க 2025 மார்ச் 14ம் திகதி பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் […]
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் – சர்வதேச அமைப்பு

இலங்கையின் பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாப்பதற்கான சட்டமூலம் குறித்து கடும் கவலை வெளியிட்டுள்ள சித்திரவதைக்கு எதிரான சர்வதேச அமைப்பு இந்த சட்டமூலத்தில் அரசாங்கம் மாற்றியமைக்க முயலும் பயங்கரவாத தடைச்சட்டத்தில் காணப்படும் தன்னிச்சையாக தடுத்துவைத்தல்,சித்திரவதை மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கும் சரத்துக்கள் காணப்படுகின்றன என தெரிவித்துள்ளது. சர்வதேச அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது ஐக்கிய நாடுகளின் சித்திரவதைக்கு எதிரான சாசனத்தின் கீழ் இலங்கைக்குள்ள கடப்பாடுகளுக்கு முரணாக அரசினை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம் தொடர்ந்தும் அளவுக்கதிகமான பரந்துபட்ட வரையறைகளை பயன்படுத்துவதோடு பரந்த […]
கனடாவின் ஸ்கார்பரோவில் இரண்டு வருடங்களுக்குள் தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபி- ஒலிவியா சௌ

கனடாவின் ஸ்கார்பரோவில் இரண்டு வருடங்களுக்குள் தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபி- ஒலிவியா சௌ கனடாவின் ஸ்கார்பரோவில் இரண்டுவருடங்களுக்குள் தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபி நிறுவப்படும் என டொரண்டோ மேயர் ஒலிவியா சௌ வாக்குறுதியளித்துள்ளார் டொரண்டோ மேயர் தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் 26ம் திகதி இடம்பெறவுள்ள வேளையில் பேட்டியொன்றில் இதனை அவர் தெரிவித்துள்ளார் பேட்டியின் சில பகுதிகள் தமிழ் சமூகத்துடன் இணைந்து பணியாற்றும் மிக அற்புதமான வாய்ப்பாக இருக்கிறது. பல ஆண்டுகளாக நாங்கள் மிக நெருக்கமாக பணியாற்றி வருகிறோம். 2009-இல் நான் […]
தாயையும் மகளையும் கத்தியால் குத்திவிட்டு தற்கொலை செய்த நபர்: யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணத்தில் இளம் பெண்ணொருவரை கத்தியால் குத்தி கொலை செய்த பின் அப்பெண்ணின் தாயாரை கத்தியால் குத்தி படுகாயத்திற்கு உள்ளாக்கிய இளைஞர் தொடருந்து முன்பாக பாய்ந்து உயிரிழந்துள்ளார். யாழ். கோவில் வீதியில் உள்ள வீடொன்றினில் அத்துமீறி நுழைந்த இளைஞர் வீட்டில் இருந்த இளம்பெண் மீது கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டதில் குறித்த பெண் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். அதேவேளை, பெண்ணின் தாயார் மீதும் இளைஞர் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டதில், தாயார் படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதலை மேற்கொண்ட […]
காணாமல்போனோரின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்!
தீர்க்கப்படாத மனிதாபிமானப் பிரச்சினைகளைக் கையாள்வதில் பக்கச்சார்பற்ற, மனிதாபிமானமான, சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்ட மற்றும் பாதிக்கப்பட்டுள்ள அனைத்துச் சமூகங்களையும் உள்ளடக்கிய ஒரு அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது முக்கியமானதாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். இலங்கையிலுள்ள செஞ்சிலுவைச் சர்வதேச குழுவின் தலைவர் ஏஞ்சலிக் அப்பெய்ரூக்ஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மோதல்கள் முடிவுக்கு வந்த மாத்திரத்தில் அதன் மனிதாபிமானத் […]
நாடு திரும்பினார் ஷிராந்தி

சிங்கப்பூர் சென்றிருந்த முன்னாள் முதற்பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ, நாடு திரும்பியுள்ளார். அவர் நேற்றிரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். மருத்துவ சிகிச்சைகளுக்காக ஷிராந்தி ராஜபக்ஷ அண்மையில் சிங்கப்பூருக்கு சென்றிருந்தார். இதனிடையே தாம் கைது செய்யப்படுவதை தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்பிணை மனுவொன்றை நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார். தனது சட்டத்தரணிகள் ஊடாக மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் அவர் இந்த முன் பிணை மனுவை தாக்கல் செய்துள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார். “சிரிலிய சவிய” கணக்கு […]