“நானும் மாடுபிடி வீரர்தான்; ஜல்லிக்கட்டுக்கு எதிரானவன் அல்ல!” – சர்ச்சைப் பேச்சுக்கு எம்.எல்.ஏ. கருப்பையா விளக்கம்

மதுரை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு மைதானம் குறித்துப் பேசியது பெரும் சர்ச்சையான நிலையில், தான் ஒருபோதும் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவன் அல்ல என்றும், தனது பேச்சு திட்டமிட்டுத் திரிக்கப்பட்டுள்ளதாகவும் சோழவந்தான் த.வெ.க. எம்.எல்.ஏ. கருப்பையா விளக்கமளித்துள்ளார். சர்ச்சையின் பின்னணி: சட்டப்பேரவையில் பேசிய எம்.எல்.ஏ. கருப்பையா, “இளைஞர்களைச் சீர்குலைக்கும் வகையில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைத்ததற்குப் பதிலாக, அந்த ரூ. 50 கோடியை அலங்காநல்லூர் சர்க்கரை ஆலைக்கு வழங்கியிருந்தால் விவசாயிகள் பயன்பெற்றிருப்பார்கள்” எனக் கூறியிருந்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அ.தி.மு.க., […]
செம்மணி மனிதப் புதைகுழிக்குரிய நீதி நிலைநாட்டப்படும் வரை சர்வதேச கண்காணிப்பே அவசியம் – வேலன் சுவாமிகள்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஆரம்பிக்கப்பட்டது முதல் நீதி நிலைநாட்டப்படும் வரையான அனைத்து செயன்முறைகளிலும் சர்வதேசத்தின் கண்காணிப்பும் வகிபாகமும் அவசியம் என வேலன் சுவாமிகள் வலியுறுத்தியுள்ளார். மேலும், சர்வசன வாக்கெடுப்பின் ஊடாக தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு, வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளினால் இன்று (30) ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மாநாட்டில் ஆசியுரை ஆற்றியபோதே வேலன் சுவாமிகள் இந்தக் […]
கொடூர மனிதர்களின் தினமே இன்றைய காணாமல் ஆக்கப்பட்டோர் நாளுக்குரிய விளக்கம் – மன்னார் ஆயர்!

இன்றைய நாளை வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் என்பதைப் போலவே “கொடூர மனிதர்களின் தினம்” என்றும் அடையாளப்படுத்த முடியும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் தெரிவித்தார். வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு, பாதிக்கப்பட்ட உறவுகளினால் இன்று(30) ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இன்றைய நாளை வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் என்பதைப் போலவே “கொடூர மனிதர்களின் தினம்” என்றும் அடையாளப்படுத்த […]
இலங்கையில் பொறுப்புக்கூறலின் ஆழமான தோல்வியைப் பிரதிபலிக்கிறது – சர்வதேச மன்னிப்புச்சபை

வலிந்து காணாமலாக்கப்படல்களுக்கு நீதி கோரிய போராட்டம் இலங்கையில் பொறுப்புக்கூறலின் ஆழமான தோல்வியைப் பிரதிபலிக்கிறது என சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசியப்பிராந்தியப் பணிப்பாளர் ஸ்மிரிதி சிங் தெரிவித்தார். வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு, வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளினால் இன்று (30) ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் உண்மை மற்றும் நீதி ஆகிய இரண்டுக்கும் உரித்துடையவர்களாவர். அரசாங்கம் நல்லிணக்கம் பற்றிப் […]
வலிந்து காணாமலாக்கப்படல்கள் பற்றிய ஆதாரங்கள் உள்ள போதிலும் அரச அதிகாரிகள் மறுப்பதை வலுவாக எதிர்க்கிறோம் – ஐ.நா. பணிக்குழு உறுப்பினர்

வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் முறையான நம்பகமான ஆதாரங்கள் உள்ள போதிலும், அவற்றை அரச அதிகாரிகள் மறுப்பதை நாம் வலுவாக எதிர்க்கிறோம் என வலிந்து காணாமலாக்கபடலகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் பணிக்குழுவின் உறுப்பினர் அனா லொரெனா டெல்கடில்லோ பேர்ஸ் தெரிவித்தார். வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு, வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளினால் இன்று (30) ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மாநாட்டில் அவர் ஆற்றிய சிறப்புரையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், உண்மை, […]
யாழ்ப்பாணத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின்உறவுகளின் கண்ணீர்ப் பேரணி…

வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு, வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச மாநாட்டை நோக்கிய பேரணி இன்று (30) ஞாயிற்றுக்கிழமை காலை ஆரம்பமானது. இதன்போது, யுத்தகாலத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்ட மற்றும் கொல்லப்பட்ட உறவுகளை நினைவுகூர்ந்து, ஈகைச்சுடரேற்றப்பட்டது. வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் புகைப்படங்களை ஏந்திய பேரணி ஊர்தி முன்னால் தாய்மார் மற்றும் உறவுகள் கண்ணீர் சிந்தியவண்ணம் பங்கேற்றனர்.
உலகில் குறைந்த சம்பளம் பெறும் நாடுகளின் பட்டியலில் 120வது இடத்தில் இலங்கை!

உலகில் குறைந்த சம்பளம் பெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 120 வது இடத்தில் உள்ளதாக ‘விசுவல் கேப்பிட்டலிஸ்ட்’ (Visual Capitalist) இணையத்தளம் தெரிவித்துள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தரவுகளுக்கு அமைவாக, நாடுகளில் நிலவும் மாதச் சம்பளம் மற்றும் அந்த நாடுகளின் வாங்கும் திறனை ஒப்பிட்டு இந்த தரவரிசை தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இலங்கைக்கு கீழே நைஜர், பூட்டான், ஹைட்டி, கினி, கானா மற்றும் காம்பியா ஆகிய நாடுகள் தரப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கையின் குறைந்தபட்ச மாதச் சம்பளத்துடன் வாங்கும் திறனைப் பொருத்தும்போது, […]
நேபாள பேரழிவு : இந்திய நதிகளில் மிதந்த சடலங்கள்

நேபாளத்தை தாக்கிய பேரழிவில் சிக்கி உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் 7 பேரின் சடலங்கள் இந்திய நதிகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. நேபாளத்தின் தெற்குப் பகுதியான சிட்வான் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மகாராஜ்கஞ்ச் மற்றும் குஷிநகர் ஆகிய மாவட்டங்கள் ஊடாகப் பாயும் நதிகளில் மிதந்த நிலையிலேயே இச்சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். நேபாளத்தில் ஏற்பட்ட எதிர்பாராத வெள்ளப்பெருக்கு காரணமாக இச்சடலங்கள் நீரில் அடித்து வரப்பட்டிருக்கலாம் என மகாராஜ்கஞ்ச் மாவட்ட ஆட்சியர் கெளரவ் சிங் சோகர்வால் தெரிவித்துள்ளார். வியாழக்கிழமையன்று […]
மக்கள் மத்தியில் மீண்டும் பொய்களைக் கூறவே கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் ஜனாதிபதி!
மக்கள் மத்தியில் பொய்களை அள்ளிக் கொட்டி அதிகாரத்தை பெற்றுவிட்டு, மீண்டும் பொய்களுக்கு மேல் பொய்களைக் கூறுவதற்காகவே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாடெங்கும் கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை, லுணுகம்வெஹர சீனிபுர பகுதியில் நேற்று (28.08.2026) நடைபெற்ற விவசாயிகளின் பிரச்சினைகளை ஆராயும் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது, தான் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் நிர்மாணித்த நெல் களஞ்சியசாலையையும் […]
சர்வதேச நாணய நிதிய குழு அடுத்த மாதம் இலங்கை வருகிறது
லங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நிதியுதவித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தைச் சரிபார்க்கும் நோக்கில், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த மாதம் இறுதியில் நாட்டிற்கு வருகைதரவுள்ளது. இது சர்வதேச நாணய நிதியம் இலங்கையுடன் தொடர்புடைய வகையில் மேற்கொள்ளும் ஏழாவது மதிப்பீடாகும். அதனை நிறைவு செய்ததன் பின்னர், அதன் தவணையாக மேலும் சுமார் 330 மில்லியன் அமெரிக்க டொலர் தொகை இலங்கைக்குக் கிடைக்கவுள்ளது. இதுவரை சர்வதேச நாணய நிதியம் நாட்டிற்கு வழங்கியுள்ள நிதியுதவித் திட்டத்தின் கீழ், […]