வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு, வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச மாநாட்டை நோக்கிய பேரணி இன்று (30) ஞாயிற்றுக்கிழமை காலை ஆரம்பமானது.
இதன்போது, யுத்தகாலத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்ட மற்றும் கொல்லப்பட்ட உறவுகளை நினைவுகூர்ந்து, ஈகைச்சுடரேற்றப்பட்டது. வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் புகைப்படங்களை ஏந்திய பேரணி ஊர்தி முன்னால் தாய்மார் மற்றும் உறவுகள் கண்ணீர் சிந்தியவண்ணம் பங்கேற்றனர்.