சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு லண்டனில் போராட்டம்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் முன்பாக கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டமானது சர்வதேச நீதிக்கான ஈழத் தமிழ் மக்கள் சங்கத்தின் ஏற்பாட்டில்  நேற்று முன்தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஈழத் தமிழர்களுக்கு நீதி வழங்குவதற்காக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிரிட்டன் அரசு இந்த விகாரத்தில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர். […]

இன்று கனேடிய மண்ணில் செம்மணி எழுச்சி – அணையா தீபம் விழித்தெழு தமிழா!

இன்று கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டமான ‘விழித்தெழு தமிழா!’ நிகழ்வு நடைபெறவுள்ளமை சகலருக்கும் தெரிந்ததே!. செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் என்புக் கூடுகளாக மீட்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு உறவுக்கும் நீதி கேட்டு ‘செம்மணி எழுச்சி – அணையா தீபம்’ மாலை 5 மணியிலிருந்து ALBERT CAMPBELL SQUARE, 150 Borough Dr, Scarborough, ON M1P 0B1 என்ற முகவரியில் BEHIND ME MEDIA மற்றும் BEHIND ME FOUNDATION ஆகிய நிறுவனங்களின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது. […]