செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஆரம்பிக்கப்பட்டது முதல் நீதி நிலைநாட்டப்படும் வரையான அனைத்து செயன்முறைகளிலும் சர்வதேசத்தின் கண்காணிப்பும் வகிபாகமும் அவசியம் என வேலன் சுவாமிகள் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், சர்வசன வாக்கெடுப்பின் ஊடாக தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு, வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளினால் இன்று (30) ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மாநாட்டில் ஆசியுரை ஆற்றியபோதே வேலன் சுவாமிகள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.