இன்றைய நாளை வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் என்பதைப் போலவே “கொடூர மனிதர்களின் தினம்” என்றும் அடையாளப்படுத்த முடியும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் தெரிவித்தார்.
வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு, பாதிக்கப்பட்ட உறவுகளினால் இன்று(30) ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்றைய நாளை வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் என்பதைப் போலவே “கொடூர மனிதர்களின் தினம்” என்றும் அடையாளப்படுத்த முடியும். ஏனெனில் அத்தகைய கொடூர மனிதர்களாலேயே எமது உறவுகள் காணாமலாக்கப்பட்டனர்.
அத்துடன், நீதிக்கான செயன்முறையின் பொறுப்பாளிகள் நியாயமானவர்களாக இருந்தால் நீதிக்கான பயணம் மிகக் குறுகியதாகும் எனக் குறிப்பிட்ட அவர், எனவே அத்தகைய நியாயமானவர்களை இதற்குப் பொறுப்பாக நியமிக்குமாறு சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.