மாடுகளைக் காரில் கடத்திய கும்பல் கைது…
சம்மாந்துறை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நீண்டகாலமாக மாடுகளைத் திருடிக் காரில் கடத்திச் சென்று, அறுத்து இறைச்சியாக விற்பனை செய்துவந்த கும்பலைச் சேர்ந்த இருவரைக் கைது செய்வதற்காகச் சம்மாந்துறை பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சம்மாந்துறை பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலொன்றின் அடிப்படையில், திங்கட்கிழமை (10) மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின்போது, மாடுகளைக் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட காரும் அதிலிருந்த மாடுகளும் பொலிஸாரால் அதிரடியாகக் கைப்பற்றப்பட்டன. சுற்றிவளைப்பின்போது இச்சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இருப்பினும், தப்பியோடிய சந்தேகநபர்கள் […]
தற்கொலைகளைத் தடுக்க துரித நடவடிக்கை – ஆளுநர்

யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மைக் காலமாக தவறான முடிவெடுத்து உயிரிழக்கும் சம்பவங்கள் கவலைக்கிடமாக அதிகரித்து வருகின்ற நிலையில், அவற்றைத் தடுப்பதற்கான துரித நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை வழங்கினார். அத்துடன், அதற்கான ஒருங்கிணைந்த கட்டமைப்புகளை மீளச் செயற்பாட்டு நிலைக்குக் கொண்டுவர விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆளுநர் குறிப்பிட்டார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று(11.8.2026) மாலை நடைபெற்ற விசேட உயர்மட்ட கலந்துரையாடலின் போதே ஆளுநர் இந்தப் பணிப்புரையை வழங்கினார். கலந்துரையாடலில், யாழ்ப்பாண மாவட்டத்தில் […]
ஆறு தமிழ் மற்றும் முஸ்லீம் கட்சிகள் இணைவு: கஜேந்திரகுமாருடன் இரகசிய பேச்சுவார்த்தை?

ஆறு தமிழ் மற்றும் முஸ்லீம் கட்சிகள் இணைந்து அமைத்துள்ள கூட்டணியில் உத்தியோகபூர்வ அழைப்பு வந்தால், தமிழ்த்தேசிய பேரவை மத்திய குழுவில் தீர்மானித்து சேர்ந்து பயணிப்பதா இல்லையா என்ற முடிவை எடுக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று(11.08.2026) இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார். தமிழ் கட்சிகள் (ஆறு கட்சிகள் சேர்ந்து) இலங்கையில் உள்ள தமிழ், முஸ்லிம் மக்களுடைய மற்றும் மலையக மக்களுடைய […]
நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு பிள்ளைகள் பலி

புத்தளம், கற்பிட்டியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரவித்துள்ளனர். கற்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குரகன்ஹேன பிரதேசத்தில் உள்ள ஆற்றில் நேற்று பிற்பகல் படகு கவிழ்ந்துள்ளது. அதில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் விபத்துக்குள்ளானதில் 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நீரில் மூழ்கி உயிரிழந்தவர்கள் 7 வயதுடைய சிறுவனும் 13 வயதுடைய சிறுமியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். மீன்பிடிப்பதற்காக பயன்படுத்தப்படும் வலைகளை எடுத்துவருவதற்காக சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளில் […]
சமஸ்டி தீர்வே எமது தமிழ் மக்களுக்குத் தேவை – மணிவண்ணன்

மாகாண சபை தமிழ் மக்களுக்கு தீர்வு அல்ல, சமஸ்டி தீர்வே எமது நிலைப்பாடு என்று சட்டத்தரணியும், முன்னாள் யாழ்ப்பாணம் மாநகர முதல்வரும், தமிழ் மக்கள் கூட்டணியின் துணைப் பொதுச் செயலாளருமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். வடமராட்சியில் ஊடகவியலாளர்கள் மாகாண சபை தேர்தல் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மாகாண சபை தேர்தல் ஒத்திவைக்கப்பட முடியாது. உடனடியாக நடத்தப்பட வேண்டும். 2018 ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபை பதவியை இழந்திருந்தது. 2017 கிழக்கு […]
வடக்கில் அனுமதியின்றி இயங்கும் பேருந்துகள்; விரைவில் சட்ட நடவடிக்கை

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செல்லுபடியாகும் வழித்தட அனுமதிப்பத்திரமின்றி யாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு, குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு சொகுசுப் பேருந்துச் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. அத்துடன், வடக்கு மாகாணத்தினுள் உரிய பதிவுகள் மற்றும் அனுமதிகளின்றி பணியாளர்களை ஏற்றிச் செல்லும் தனியார் பேருந்துச் சேவைகளும் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான பேருந்துகளுக்கு எதிராக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையும் பொலிஸாரும் இணைந்து விரைவில் விசேட சட்ட அமுலாக்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அதன் தலைவர் பொறியியலாளர் சூ. […]
செம்மணி மனிதப் படுகொலைக்கு நீதி கோரி; ‘நீதியின் ஓலம் போராட்டம்’ – 14ம் திகதி தொடக்கம் 17ம் திகதி வரை

செம்மணி மனிதப் படுகொலைக்கு நீதி கோரி எதிர்வரும் 14ம் திகதி தொடக்கம் 17ம் திகதி வரை யாழ் செம்மணியில் முன்னெடுக்கப்படவுள்ள நீதியின் ஓலம் 2 போராட்டத்திற்கான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் முகமாகவும் மக்களை ஒன்றிணைக்கும் முகமாகவும் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எதிர்வரும் 14ம் திகதி தொடக்கம் 16ம் திகதி வரை யாழ் செம்மணியில் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் இறுதி நாளான 17ம் திகதி யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் […]
இன்று அரிய வானியல் நிகழ்வு

இன்று இலங்கையிலுள்ள விண்வெளி ஆர்வலர்கள் ஒரு அரிய வானியல் நிகழ்வைக் காணவுள்ளதாக மொறட்டுவை ஆதர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப மையத்தின் வானியல் பிரிவு அறிவித்துள்ளது. நாளை சூரிய உதயத்திற்கு முன்னர் கிழக்கு மற்றும் தெற்கு வானத்தில் புதன், செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய ஆறு கோள்கள் பரந்த வளைவு வடிவில் தோன்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இந்த கோள்களின் அணிவகுப்பை சூரிய உதயத்திற்கு சுமார் 60 முதல் 90 நிமிடங்களுக்கு முன்னதாக, […]
டிசம்பருக்குள்உயர்தரப் பரீட்சை பெறுபேறு

உயர்தரப் பரீட்சைகள் திங்கட்கிழமை (10 ஆம் திகதி) ஆரம்பமானதுடன், பரீட்சை தொடர்பில் எத்தகைய ஒழுங்கீனங்களிலும் ஈடுபட வேண்டாம் என அனைத்துப் பரீட்சார்த்திகளிடமும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே வேண்டுகோள் விடுத்துள்ளார். அவ்வாறு ஒழுங்கீனங்களில் ஈடுபட்டால் விசாரணைகளுக்குப் பின்னர் பெறுபேறுகள் இடைநிறுத்தப்படலாம் அல்லது ரத்து செய்யப்படலாம் என்பதால் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும், அத்தகைய ஒழுங்கீனங்களில் ஈடுபட வேண்டாம் எனப் பாடசாலைகள் மற்றும் பல்வேறு தரப்பினரால் மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் பரீட்சை திணைக்களத்தில் திங்கட்கிழமை (10 ஆம் திகதி) […]
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை

முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (11) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு கடற்றொழில் அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள மணலை அகற்றி சந்தையில் விற்பனை செய்யும் பணிக்காக கொரிய நிறுவனம் ஒன்றைத் தெரிவுசெய்து, அப்பணிகளுக்காக கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான ‘வெலிகொவ்வா’ எனும் கப்பலை குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு அந்த கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு […]