ஆறு தமிழ் மற்றும் முஸ்லீம் கட்சிகள் இணைவு: கஜேந்திரகுமாருடன் இரகசிய பேச்சுவார்த்தை?

ஆறு தமிழ் மற்றும் முஸ்லீம் கட்சிகள் இணைந்து அமைத்துள்ள கூட்டணியில் உத்தியோகபூர்வ அழைப்பு வந்தால், தமிழ்த்தேசிய பேரவை மத்திய குழுவில் தீர்மானித்து சேர்ந்து பயணிப்பதா இல்லையா என்ற முடிவை எடுக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று(11.08.2026) இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

தமிழ் கட்சிகள் (ஆறு கட்சிகள் சேர்ந்து) இலங்கையில் உள்ள தமிழ், முஸ்லிம் மக்களுடைய மற்றும் மலையக மக்களுடைய பிரச்சினையை தீர்ப்பதற்காக ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். அது தொடர்பாக உங்களுக்கு ஏதாவது அழைப்புகள் விடுக்கப்பட்டிருக்கிறதா? என ஊடகவியலாளர் கேள்வியெழுப்பியுள்ளார். அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதிலளிக்கையில்,

“ கடந்த வார நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய தலைவர் ரவூஃப் ஹக்கீம் நாடாளுமன்றத்திலே என்னை கண்டு “பேசலாமா?” என்று கேட்டு, “நான் இந்த ஆறு கட்சிகளுடைய இந்த முயற்சியிலே நானும், அதாவது தமிழ் தேசிய பேரவையும், வந்து சேர்ந்து கொள்ள வேண்டும்” என்ற கருத்தை என்னிடம் கூறியிருந்தார்.

அந்த ஆறு கட்சிகளுக்கும் தான் இந்த விடயத்தைச் சொல்லியிருப்பதாகவும், அந்த வகையிலே வந்து எவருக்கும் தமிழ் தேசிய பேரவையை இணைத்துக் கொள்வதிலே எதிர்ப்பு இல்லை என்றும், ஆகவே நாங்கள் அதிலே எங்களுடைய அமைப்பு சார்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று அவர் தன்னுடைய விருப்பத்தை தெரிவித்திருந்தேன்.

அந்த இடத்திலே நாடாளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணனனையும் அந்த இடத்திற்கு அழைத்து, “நான் கஜேந்திரனிடம் அவருடைய கட்சியை இந்த ஆறு கட்சிகளுடைய முயற்சியிலே வந்து கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறோம்” என்ற கருத்தை சொல்லியிருந்தார்.

அப்பொழுது நாங்கள் சொன்னது என்னவென்றால், எங்களுக்கு அந்த அழைப்பு உத்தியோகபூர்வமாக விடுக்கப்படுகின்ற பொழுது, நாங்களும் எங்களுடைய மத்திய குழுவுக்கு அதனை தெரிவித்து, எங்களுடைய மத்திய குழு அது சம்பந்தமாக ஒரு தீர்மானம் எடுக்கும். அந்த முயற்சி சம்பந்தமாக நாங்கள் அதிலே உத்தியோகபூர்வமாக இருக்கிறோமோ இல்லையோ என்ற முடிவு அதன் மூலமாக தான் தெரிவிக்கப்படும்.

ஏனென்றால் நாங்கள் அதில் இதுவரைக்கும் இந்த விடயம் சம்பந்தமாக எதுவும் பேசவில்லை. ஊடகத்திலே தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் பொறுத்தவரையில் எங்களுக்கு எந்தவித தகவலும் வழங்கப்படவில்லை.

ஆகவே நாங்கள் முதல் அதில் கலந்து கொள்வதா இல்லையா? என்று முடிவு எடுப்பதற்கு முன்னர், எங்களுடைய மத்திய குழு அறிவித்தாலும் கூட, நாங்கள் முதல் அவர்களோடு பேசி, அவர்களுடைய முயற்சியினுடைய நோக்கங்கள் சம்பந்தமாக ஒரு தெளிவடைந்த பின்னரே இது தொடர்பான முடிவுகளை எடுக்கலாம் என நினைக்கின்றோம்” என்றார்.

3

“அவதூறு பேசிய மிருக குணப் பேச்சுக்கு மக்கள் தகுந்த பதிலடி!” – இடைத்தேர்தல் வெற்றி குறித்து முதல்வர் விஜய் அறிக்கை!

October 9, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, அவதூறு பேசிய மிருக குணப் பேச்சுக்கு மக்கள் தகுந்த பதிலடியைத் தந்துள்ளதாக

2

“கொத்து புரோட்டா போட்டுவிட்டார்கள் மக்கள்!” – தவெக வெற்றியை விமர்சித்து மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!

October 9, 2026

சென்னை: ஐந்து நிமிடம் பேசினாலே கொத்து புரோட்டா போட்டுவிடுவார் என்று சொல்லப்பட்டவரை நான்கு நாட்கள் கொளுத்தும் வெயிலில் அலைய வைத்துக்

dailythanthi_2026-10-09_tw4n5oic_Untitled-6

“இடைத்தேர்தல் மாபெரும் வெற்றி!” – அமைச்சர்களுடன் வைரல் சைகை காட்டி முதலமைச்சர் விஜய் உற்சாகக் கொண்டாட்டம்!

October 9, 2026

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வெற்றியை முதலமைச்சர் விஜய் தனது அமைச்சர்களுடன் வைரல்

556

மதுபானசாலை அனுமதிக்கு எதிராக வலி. வடக்கில் போராட்டம்

October 9, 2026

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் காணப்படும் வலி. வடக்கில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்படுவதை எதிர்த்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி

brand

பிராட் பிராட்ஃபோர்ட் திட்டத்துக்கு ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள் எதிர்ப்பு?

October 9, 2026

ஸ்கார்பரோவின் 12 கி.மீ பிரத்யேக பேருந்து தடங்களை நீக்க பிராட் பிராட்ஃபோர்ட் திட்டம்: ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள்

dailythanthi_2026-10-09_2ehwx7wk_shivan (1)

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. அபார வெற்றி!” – 4 மாத ஆட்சிக்குக் கிடைத்த வெற்றி என அமைச்சர்கள் பெருமிதம்!

October 9, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களை வீழ்த்தி த.வெ.க. வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றுள்ளனர்.

images (1)

நவநீதம்பிள்ளைக்கு நோபல் பரிசு: போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்

October 9, 2026

2026ம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டத்தினை பாதுகாப்பதற்காக தளர்வின்றி போராடியமைக்காக ஐக்கியநாடுகள் முன்னாள்

hindutamil_import_hindu_uploads_news_2023_07_22_xlarge_1061734

“மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவு!” – வெளியே தெரிந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நந்தி சிலை!

October 9, 2026

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவாக உள்ளதால் ஜலகண்டேஸ்வரர் கோயில் நந்தி சிலை வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.

vikatan_2024-10-04_jsw1i91t_WhatsApp-Image-2023-12-26-at-1.12.38-PM

“சாலைகளில் ரத்த ஆறு ஓடுகிறது… விஜய் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது!” – எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு!

October 9, 2026

சென்னை: முதல்-அமைச்சர் விஜய் ஆட்சியில் கடந்த ஐந்து மாதங்களாகச் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

2

“நிரந்தர முதல்-அமைச்சராக விஜய் இருப்பார்!” – அமைச்சர் என்.ஆனந்த் அதிரடிப் பேச்சு!

October 9, 2026

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மண்டல மாநாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்

parliment

உயர் நீதிமன்றத் தீர்மானம் அறிவிப்பு!

October 9, 2026

நச்சுக்கள், அபின்கள் மற்றும் ஆபத்தான மருந்துகள் கட்டளைச் சட்டத்தின் இரண்டு திருத்தச் சட்டமூலங்களையும் சாதாரண பெரும்பான்மையால் நிறைவேற்ற முடியும் என

thu

சட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்ற பெயரில் புத்தசாசனத்தின் கௌரவத்தைச் சீர்குலைக்க முடியாது!

October 9, 2026

சிறைச்சாலையிலுள்ள கலபொடஅத்தே ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சம்பவமானது மிகவும் பாரதூரமானது என ‘தேசத்தைக் காக்கும்