சியானுக்கு நேர்ந்த திடீர் சிக்கல்! அரிய வகை கிப்பான் குரங்குடன் நடிகர் விக்ரம்! வனத்துறை அதிரடி விசாரணை!

சென்னை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சியான் விக்ரம், வெளிநாட்டு அரிய வகை குரங்கு ஒன்றுடன் விளையாடும் வீடியோவை வெளியிட்டதைத் தொடர்ந்து, அவரிடம் வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சர்ச்சையை ஏற்படுத்திய இன்ஸ்டாகிராம் வீடியோ: சமீபத்தில் நடிகர் விக்ரம், குரங்கு ஒன்றிடம் பேசிக்கொண்டும், அதன் முகப்பாவனைகளைத் தானும் செய்துகொண்டும் விளையாடும் வீடியோ ஒன்றைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், விலங்குகள் நல ஆர்வலர்கள் இதற்குத் தங்களது […]
அதிமுக எம்.எல்.ஏ-க்கள் 6 பேரை குதிரை பேரம் மூலம் இழுத்த தவெக! அக்ரி கிருஷ்ணமூர்த்தி பகீர் குற்றச்சாட்டு!

சென்னை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆறு பேரை, குதிரை பேரம் மூலம் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகம் தங்கள் பக்கம் இழுத்துள்ளது இந்த நாட்டுக்கே தெரியும் என அதிமுக எம்.எல்.ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். குதிரை பேரம் மூலம் எம்.எல்.ஏ-க்கள் இழுப்பா?: நேற்று தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகள் முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, “அதிமுகவில் இருந்து ஆறு சட்டமன்ற உறுப்பினர்களை, அவர்கள் கையில் இட்ட மை காய்வதற்குள் குதிரை […]
முதலமைச்சர் விஜய் முன்னிலையில் தவெக-வில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்! எடப்பாடிக்கு அதிர்ச்சி!

சென்னை அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலச் செயலாளராகவும், மாணவரணி நிர்வாகியாகவும் செயல்பட்ட சிங்கை ராமச்சந்திரன், இன்று முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் அதிகாரப்பூர்வமாகத் தன்னை இணைத்துக்கொண்டார். தொடரும் விலகல் – அதிமுகவுக்குப் பெரும் பின்னடைவு: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக படுதோல்வியைச் சந்தித்த நிலையில், அக்கட்சியிலிருந்து விலகித் தவெக-வில் இணையும் முக்கிய நிர்வாகிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏற்கனவே அதிமுகவைச் சேர்ந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், மரகதம் குமரவேல், இசக்கி […]
போலீசார் லஞ்சம் கேட்டால் உடனே புகார் அளியுங்கள்! அதிரடியாக செல்போன் எண்ணை அறிவித்தது சென்னை காவல்துறை!

சென்னை காவல்துறையினர் தங்கள் பணிகளைச் செய்யப் பொதுமக்களிடமோ அல்லது வணிகர்களிடமோ லஞ்சம் கேட்டால், உடனடியாகப் புகார் அளிக்கச் சென்னை பெருநகர காவல்துறை சார்பில் புதிய செல்போன் மற்றும் வாட்ஸ்அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. பார் உரிமையாளர்களுடன் ஆணையர் ஆலோசனை: சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில், சென்னையில் செயல்பட்டு வரும் நட்சத்திர விடுதிகள் மற்றும் பார்களின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களுடன் காவல் ஆணையர் அமல்ராஜ் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கோயம்பேடு […]
நடிகை திரிஷா குறித்து அவதூறு பேச்சு! முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கண்டன போஸ்டர்கள்!

மதுரை நடிகை திரிஷா மற்றும் முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து, மதுரை முழுவதும் திரிஷா நற்பணி மன்றம் சார்பாகக் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.பி.உதயகுமாரின் சர்ச்சை பேச்சு: தூத்துக்குடியில் நடைபெற்ற மாவட்ட ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “அதிமுகவை நேற்று பிறந்த டவுசர் பையன் விஜய் அபகரிக்க, அழிக்க நினைக்கிறான். […]
அமைச்சர் ஒருவரின் உறவினர் கைது
வாகன ஏலம் தொடர்பான நிதி மோசடி தொடர்பில் அமைச்சர் கே.டி. லால் காந்தவின் உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்றைய தினம் கேகாலை குற்றவியல் விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் அமைச்சர் கே டி லால்காந்தவின் 59 வயது மைத்துனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. காவல்துறையின் தகவலின்படி, வாகன ஏலத்தில் ஈடுபடுத்துவதாகக் கூறி சந்தேக நபர் ஒருவரிடமிருந்து 1,145,000 ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் இன்று […]
ஈரான் போர் தீவிரமடைகிறது: மீண்டும் கப்பல்கள் மீது தாக்குதல்

அமெரிக்காவும், ஈரானின் ஆதரவு பெற்ற யேமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்களும் கப்பல்கள் மீதான தனித்தனித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். அதேநேரம் அமெரிக்கா தமது நிபந்தனைகளை ஏற்கும் வரை ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என்று ஈரான் கூறியுள்ளதால், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வாய்ப்புகள் குறைவடைந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். உலகளாவிய எண்ணெய் விநியோகத்திற்கு முக்கியமாக விளங்கும் ஓமான் வளைகுடா மற்றும் செங்கடலின் நுழைவாயிலில் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன. போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் விரைவில் எட்டப்படும் என்று அமெரிக்க […]
யாழ்ப்பாணத்தை சேர்ந்தோரிடம் வெளிநாட்டு ஆசைகாட்டி பண மோசடி

வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து, யாழ்ப்பாணத்தை சேர்ந்தோரிடம் கடந்த சில வாரங்களுக்குள் ஏழரைக் கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட தொகை மோசடி செய்யப்பட்டுள்ளது என்று பொலிஸ் வட்டாரங்களில் இருந்து அறிய முடிகின்றது. வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து யாழ். மாவட்டத்தில் பண மோசடி செய்யும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான நிலையிலேயே கடந்த சில வாரங்களாக இத்தகைய மோசடிகள் சடுதியாக அதிகரித்துள்ளன என்று பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக 10 முறைப்பாடுகளும் பதிவு செய்யப் பட்டுள்ளன அதிகபட்சமாக நபரொருவர் […]
செங்கடல் தாக்குதல்: 4 மாலுமிகள் பலி

செங்கடலின் பாப் எல்-மன்டெப் நீரிணைப் பகுதியில் ஈரானின் ஆதரவு பெற்ற ஹூதிகள் நடத்திய தாக்குதலில், சிறிய சரக்குக் கப்பல் ஒன்றின் 4 மாலுமிகள் இன்று உயிரிழந்ததாக யேமன் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேவேளையில், பாகிஸ்தான் கடற்பகுதியில் மற்றொரு சரக்குக் கப்பல் மீது ஐக்கிய அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. எகிப்திய நிறுவனத்திற்குச் சொந்தமான திஹாமா என்ற சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலில், பாகிஸ்தானைச் சேர்ந்த மூவரும் இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தனர். தாக்குதலுக்குப் பிறகு கப்பல் […]
புயலால் சேதமடைந்த வணக்க ஸ்தலங்கள் புனரமைக்கப்படும்

புயல் நிலைமைகள் காரணமாக இலங்கையில் பல்வேறு மதங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான வணக்கத்தலங்கள் சேதமடைந்துள்ளதாகப் பதிவாகியுள்ள நிலையில், அவற்றை மீளமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, 758 பௌத்த விகாரைகள் 272 இந்துக் கோயில்கள் 199 பள்ளிவாசல்கள் 99 தேவாலயங்கள் சேதமடைந்துள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். 2026.04.27 மற்றும் 2026.06.15 திகதிகளில் இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களின்படி, 329.62 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், புத்தசாசன நிதியம், […]