இளம் பெண்ணின் நிர்வாண படங்களை வெளியிடுவதாக மிரட்டல்

இளம் பெண்ணொருவரின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை இணையத்தில் வெளியிடுவதாகக் கூறி அச்சுறுத்தியதாகக் கூறப்படும் காவி உடை அணிந்த நபர் ஒருவரை உடுகம பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர், கனிஷ்ட கல்லூரி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றும் 33 வயதுடைய நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இளம் பெண்ணுடன் காதல் உறவில் இருந்த காலப்பகுதியில், இருவரும் கையடக்கத் தொலைபேசி ஊடாக நிர்வாண காணொளிகளைப் பரிமாறிக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும், கடந்த மூன்று […]
சுகயீன போராட்டத்தில் கிராம உத்தியோகத்தர்கள்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (10) முதல் நாளை (11) வரை நாடு முழுவதும் உள்ள கிராம உத்தியோகத்தர்கள் சுகவீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் நந்தன ரணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 600 ரூபாய் பயணக் கொடுப்பனவு கடந்த 8 ஆண்டுகளாக அதிகரிக்கப்படவில்லை என அவர் வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே, 2024 ஆம் ஆண்டில் யணப் படிக்கு பதிலாக 20 லீட்டர் எரிபொருளுக்கு சமமான தொகையைப் பெறுவதற்கான […]
இலங்கைத் தீவைச் சுற்றியுள்ள மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

இலங்கைத் தீவைச் சுற்றியுள்ள கடற்பகுதியில் நிலவும் தீவிர வானிலை காரணமாக, பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வானிலை அவதான நிலையத்தால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை அறிவித்தல் இன்று (10) மு.ப 07.00 மணி முதல் நாளை (11) மு.ப 07.00 மணி வரையிலான அடுத்த 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும். மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பரப்பின் அப்பாற்பட்ட கடற்பகுதிகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 60 கி.மீ-க்கும் அதிகமாக வீசக்கூடும். இதனால் […]
பாடசாலையொன்று நீரில் மூழ்கும் அபாயம்

கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டி நகரப் பகுதியில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்துவரும் மழையால் நகரின் பல வீதிகளில் நீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகளும் ஸ்தம்பித்துள்ளன. கடந்த சில நாட்களாகவே நாவலப்பிட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடரும் மழையினால் வெள்ளநீர் தேங்கும் சம்பவங்கள் பதிவாகிய வண்ணம் உள்ளன. அடிக்கடி மகாவலி கங்கை பெருக்கெடுப்பதாலும், அப்பகுதியில் இரண்டு காட்டாறுகள் ஒன்றாக சங்கமிப்பதாலும் தீவிரமான […]
இலங்கைத் தொடரிலிருந்து விலகிய சுதர்சன்

இலங்கைக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இந்தியாவின் துடுப்பாட்டவீரர் சாய் சுதர்சன் விலகியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் சுதர்சன் குழாமில் பெயரிடப்பட்டபோதும் அவர் உடற்றகுதியை நிரூபிக்க வேண்டியிருந்தது. இந்நிலையில் சுதர்சனுக்கு பெருவிரலில் ஏற்பட்ட காயம் முழுமையாகக் குணமடையாத நிலையிலேயே அவர் தொடரிலிருந்து விலகியுள்ளார். சுதர்சனை அணியில் பயிற்சிப் போட்டியில் சதம் பெற்ற தேவ்டுட் படிக்கல் பிரதியிடுவாரென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், குழாமில் சுதர்சனை யார் பிரதியிடுவாரென அறிவிக்கப்படவில்லை.
வலிகாமம் வடக்கு – பலாலி; எமது காணி இராணுவத்தின் சரணாலயமா?

எங்களின் பூர்வீகக் காணி அரச படைகளின் சரணாலயமா? எங்கள் நிலங்களைச் சுரண்ட இனியும் இடமளிக்க முடியாது என்ற வலுவான கோசத்துடன், வலிகாமம் வடக்கு – பலாலி பகுதியில் மீள்குடியேற முடியாத நிலையில் உள்ள மக்கள் நேற்று 8ஆவது வாரமாகவும் அமைதிவழிப் போராட்டத்தை முன்னெடுத்தனர். பலாலி சந்தியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், தமது பூர்வீக நிலங்களை உடனடியாக விடுவித்து, மீள்குடியேற்றத்துக்கு அரசாங்கம் வழிவகுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர். பல ஆண்டுகளாகத் தமது சொந்தக் காணிகளில் மீள்குடியேற முடியாத […]
“சரியான காரியத்தைச் செய்யுங்கள்”: ஹேமில்டன் நடைபாதையில் 21 வயது வாலிபர் சடலமாகக் கண்டெடுப்பு — சந்தேகநபரைச் சரணடையக் கோரும் காவல்துறை

21 வயது இளைஞரின் கொலைச் சம்பவம் தொடர்பாக இதுவரை ஆயுதமோ அல்லது சந்தேகநபரோ கண்டுபிடிக்கப்படவில்லை என ஹேமில்டன் காவல்துறை தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஹேமில்டனில் உள்ள நடைபாதை ஒன்றில், கத்திக் குத்துக் காயங்களுடன் கிடந்த 21 வயது வாலிபரை டாக்சி ஓட்டுநர் ஒருவர் கண்டெடுத்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளார். மெயின் வீதி மேற்கு (Main Street West) மற்றும் ஃபிரிட் வீதி (Frid Street) சந்திப்புப் பகுதிக்கு அருகில் சுமார் அதிகாலை 2:30 மணியளவில் அந்த நபர் […]
தமிழினப்படுகொலைக்கு நீதிகோரி கவனயீர்ப்பு!

தாயகச் செயலணி அமைப்பின் ஏற்பாட்டில் ‘நீதியின் ஓலம்’ எனும் தலைப்பில் எதிர்வரும் 14 – 17 ஆம் திகதி வரை தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதியைக் கோரி வடக்கில் தொடர் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
பிராம்ப்டனில் 3 வாகனங்கள் மோதிய விபத்து: பெண் மருத்துவமனையில் அனுமதி

பிராம்ப்டனில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 09, 2026) பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளதாக பீல் பிராந்தியக் காவல்துறை தெரிவித்துள்ளது. குவீன் வீதி மேற்கு பகுதிக்குத் தெற்கே உள்ள சிங்குவாகௌசி வீதி (Chinguacousy Road) மற்றும் டஸ்க் டிரைவ் (Dusk Drive) சந்திப்புப் பகுதியில் பிற்பகல் 4:00 மணிக்கு சற்று முன்னதாக மூன்று வாகனங்கள் மோதிக்கொண்டன. இந்த விபத்தின் காரணமாக ஒரு கார் தலைகீழாகக் கவிழ்ந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. காயமடைந்த […]
டொராண்டோவில் பெண் மீது பாலியல் அத்துமீறல் புரிந்து அதை படம்பிடித்த நபர்: காவல்துறை குற்றச்சாட்டு

21 வயதான டெவோன் ப்ளூர்ட் (Devon Plooard) என்பவர் இரண்டு பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுகள், மறைமுகமாகப் படம் பிடித்தல் (Voyeurism) மற்றும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டுதல் ஆகிய குற்றச்சாட்டுகளுக்காகத் தேடப்பட்டு வருகிறார். இது தொடர்பான தகவல்கள் ஏதேனும் தெரிந்தால் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த மே மாதம் பெண் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் புரிந்து, அதனைப் படம்பிடித்த குற்றச்சாட்டின் பேரில் 21 வயதுடைய நபர் ஒருவர் தேடப்பட்டு வருகிறார். ஜெரார்ட் வீதி […]